கையை உடைச்சிட்டாங்க.. ஈழத் தமிழர்களில் வலியை சொன்னா படம் ஒடுமா? பயம் இருந்தது.. சசிகுமார் பேச்சு!
சென்னை: நடிகர் சசிகுமார் நடிப்பில் அண்மையில் வெளிவந்த 'டூரிஸ்ட் ஃபேமிலி' படம் ரசிகர்களை கவரும் வகையில் இருந்தது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தை தொடர்ந்து சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார், லிஜோமோல் உள்ளிட்டோர் நடிப்பில் Freedom படம் 10ந் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
அதில், நடிகர் சசிகுமார், 'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படம் போல Freedom படம் இருக்காது. இந்த படத்தில் சிறையில் நடக்கக்கூடிய கஷ்டங்கள், வலிகள் என அனைத்தையும் சொல்லி இருக்கிறோம். பொதுவாக ரசிகர்களுக்கு கதையை பற்றி எதுவுமே சொல்லாமல் வந்து பாருங்கள் என்று நாம் சொல்லி விடுகிறோம், அப்படி சொல்லக்கூடாது. படத்தில் என்ன சொல்லி இருக்கிறோம் என்பதை முதலிலேயே சொல்லிவிட்டால் ரசிகர்கள் ஒரு தெளிவோடு தியேட்டருக்கு வருவார்கள்.

சசிகுமார் பேச்சு: 1999 முதல் 95 வரை வேலூர் சிறையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகவை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். ஆயிரம் அகதிகளை சிறையில் வைத்து வைக்கப்படுகிறார்கள், அவர் 1995ம் ஆண்டு சிறையை உடைத்துக் கொண்டு வெளியே தப்பி வந்து தங்களுடைய சொந்தங்களையும் உறவினர்களையும் சந்தித்தார்கள் என்பது தான் இந்த திரைப்படத்தின் கதை. சிறையில் இருக்கும் ஈழத் தமிழர்களுக்கு எப்படி விடுதலை கிடைத்தது என்பதை இந்த பிரீடம் படம் சொல்லும். 1995ல் இப்படி ஒரு சம்பவம் நடந்தது என்று பலருக்கும் தெரியாது, இந்த அளவிற்கு அப்போது மீடியாக்கள் இல்லை, வெறும் பேப்பர் செய்தியாகத்தான் வந்தது. அந்த வலிகளையும் வேதனைகளையும் இந்த படம் சொல்லும்.
கையை உடைச்சிட்டாங்க: சிறைச்சாலையில் உண்மையில் அகதிகள் எப்படி கஷ்டப்பட்டார்களோ அதே போல, இந்த படத்திற்காக நாங்களும் மிகவும் கஷ்டப்பட்டோம். ஒவ்வொரு முறை அடிவாங்கும் போதும், அடி நிஜமாகவே விழுந்தது. ஒருவர் என்னை அடிக்க தெரியாமால் அடித்து கையை உடைத்து விட்டார். நான் வலியால் கத்துகிறேன், அவரோ அண்ணன் சூப்பரா நடிக்கிறார் என்கிறான். நான் வவி தாங்க முடியாமல் கத்திக்கொண்டு இருக்கிறேன் ஒருத்தரும் பக்கத்தில் வரவில்லை, எல்லாரும் த்ரூபமாக இருக்குனு ஷூட் பண்ணிக்கிட்டு இருக்காங்க. இந்த படத்திற்காக நாங்க ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறோம். படத்தை பற்றி நாங்கே சொல்லக்கூடாது நீங்கள் தியேட்டருக்கு போய் படத்தை பாருங்கள்.
படிப்பதற்கு மட்டுமே: பொதுவாக ஈழத் தமிழர்களின் வலிகளை பற்றி பேசப்படும் திரைப்படங்கள் வெளியாவதே கஷ்டம் அப்படியே அந்த படங்கள் வெளியே வந்தாலும், வரவேற்பை பெறுமா என்ற எண்ணம் இருந்தது. ஆனால் அதை உலகத் தமிழர்கள் அனைவரும் பார்ப்பார்கள் என்கின்ற நம்பிக்கை மட்டும் எங்கள் மனதில் இருந்தது. ஏனென்றால், அது ஒரு சர்ச்சையான சப்ஜெக்ட். அதனால் எங்களுக்கு அந்த பயம் இருந்தது. ஆனால் அதையும் மீறி எந்தவித பிரச்சனையும் இல்லாமல் இந்த படத்தை நாங்கள் எடுத்து இருக்கிறோம் என்றார். தொடர்ந்து பேசிய சசிகுமார், கல்வி நிறுவனங்கள் என்பது படிப்பதற்கு மட்டுமே, என் படங்களின் இசை வெளியீட்டு விழாவை கல்வி நிறுவனங்களில் நடத்த எனக்கு விருப்பமில்லை. அங்கே ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடத்தி மாணவர்களை மிஸ் யூஸ் பண்ண மாட்டேன் கல்வி நிறுவனங்கள் என்பது படிப்பதற்கும், நல்ல விஷயத்திற்கு மட்டுமே என்ன ஃப்ரீடம் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சசிகுமார் பேசினார்.


Click it and Unblock the Notifications











