சதிலீலாவதி 2 படத்தில் ஹீரோயின் அறந்தாங்கி நிஷா, ஹீரோ யார், என்ன பிளான் தெரியுமா ?
சென்னை: இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி, நடிகை ஃபர்யா அப்துல்லா, நடிகர் சத்யராஜ், இயக்குநர் பாரதிராஜா, தம்பி இராமையா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் வள்ளிமயில்.
த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தில் விஜய்டிவி மூலம் பிரபலமாகி, மாரி திரைப்படத்தில் நடித்த அறந்தாங்கி நிஷாவும் சிறிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார்.
அறந்தாங்கி நிஷா ரசிகர்கள் என்று ஒரு தனி கூட்டத்தையே உருவாக்கி உள்ளார் சமீத்திய காலங்களில். பட பட என்று பேசும் நிஷா நமது பில்மி பீட்க்கு பிரத்தியேக பேட்டி கொடுத்து உள்ளார் .

மக்களிடையே வரவேற்பு
கேள்வி: தற்போது நடிகர் தனுஷ் படத்தில் நடித்து வருகிறீர்களா?
பதில்: மாரி 2 படத்தில் நடித்ததற்கு பிறகு மக்களிடையே எனக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. விஜய் டி.வியில் இருக்கும் என்னை போன்ற நிறைய கலைஞர்களுக்கு நடிகர் தனுஷ் வாய்ப்பளித்து வருகிறார். நடிகர் தனுஷ் அடுத்த படத்தில் சிறிய கதாபாத்திரம் என்று கூறி என்னை அழைத்தார். பெரியதிரையில் ஏதாவது ஒரு ஒரு சிறு இடத்தில் இருந்தால் போதும் என்று எனக்கு தோன்றியது. தற்போது நான் நடித்துள்ள அந்த படமும் நன்றாக வந்துள்ளது என்றார்.

தாய் வீடு
கேள்வி: பட்டிமன்றம், விஜய்டிவி, சீரியல், சினிமா போன்றவற்றில் உங்களுடைய கால்ஷீட் முதலில் யாருக்கு கொடுப்பீர்கள்?
பதில்: விஜய்டிவி என்னுடைய தாய் வீடு. நான் இன்று மூன்று நேரம் சாப்பிடுகிறேன் என்றால் அதற்கு காரணம் விஜய் டி. வி தான். அதனால் எப்பொழுதும் விஜய் டி.விக்கு தான் என்னுடைய முதல் ஷெட்யூல். அதற்கு தகுந்தாற்போல் மற்றவற்றை நான் மாற்றிக் கொள்வேன். பட்டிமன்றம் என்பது எனது பிழைப்பு. இப்பொழுது தான் கோவில் திருவிழாக்கள் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு களைக்கட்ட தொடங்கியுள்ளது. கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கிறது. சமீபத்தில் கூட ஒரு பட்டிமன்றத்தில் பேசி விட்டு வந்துள்ளேன் என்றார்.

ஊருக்கு செல்லவில்லை
கேள்வி: உங்கள் வீட்டுக்காரரை நீங்கள் ஏன் இப்போது அடிப்பதில்லை?
பதில்: பட்டிமன்றம், சீரியல், சினிமா போன்றவற்றில் தொடர்ச்சியாக எனக்கு வேலை இருப்பதால் ஊருக்கு செல்வதில்லை. சென்னையில் தங்கி விடுகிறேன். அதனால் தான் எனது வீட்டுக்காரர் அடிப்பது போன்ற வீடியோவை என்னால் போட முடியவில்லை. இது குறித்து ரசிகர்களும், மாமாவை அடித்து துவைப்பது போன்ற வீடியோக்களை போடுங்கள் என்று அன்பு கட்டளையிடுகின்றனர்.

குரல் கொடுப்பேன்
கேள்வி: உங்களை பற்றி வரும் விமர்சனங்களை நீங்கள் எவ்வாறு எடுத்துக் கொள்கிறீர்கள்?
பதில்: பர்தா போடுவது குறித்து நான் கருத்து தெரிவித்து இருந்தேன். சில பேர் வரவேற்றனர். சில பேர் விமர்சித்து இருந்தனர். எல்லோரும் மனிதர்கள் தான். ஒருத்தர் நம்மை திட்டும்போது வலிக்கும். இப்பொழுதெல்லாம் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளக்கூடிய பக்குவம் எனக்கு வந்து விட்டது. பாராட்டுகள் வரும்போது ஏற்றுக் கொள்ளும் மனது, இதையும் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். முகம் தெரியாதவர் விமர்சனம் செய்யும்பொழுது, நாம் வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை. கெட்டது எங்கு நடந்தாலும் அந்த இடத்தில் நான் இருப்பேன் மற்றும் அதற்கு எதிராகவும் குரல் கொடுப்பேன் என்றார்.

நல்ல மனிதர் யார்?
கேள்வி: வள்ளிமயில் திரைப்படம் குறித்து நீங்கள் கூற விரும்புவது?
பதில்: வள்ளிமயில் திரைப்படத்தில் மூத்த மற்றும் திறமை வாய்ந்த நடிகர்களான விஜய் ஆண்டனி, சத்யராஜ், பாரதிராஜா, தம்பி இராமையா ஆகியோர் நடித்து வருகின்றனர். இவர்களுடன் இணைந்து நடிப்பது என்பது நான் செய்த பெரும்பாக்கியம். நான் நடிகர் தம்பி இராமையாவை நடிகராகவும், காமெடியராகவும், குணசித்திர நடிகராகவும் பார்த்திருக்கிறேன். வள்ளிமயில் படத்தில் தான், நான் அவரை மனிதராக பார்த்தேன். நான் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தை இயக்குநர் என்னிடம் விளக்கி விட்டு செல்லும்பொழுது, நடிகர் தம்பி ராமையா என்னிடம் வந்து, இப்படி எல்லாம் நடித்தால் தான் படத்தில் வருவாய் என்று சொல்லி கொடுப்பார். ஒருவருக்கு சொல்லி கொடுத்து வளர்த்து விட வேண்டும் என்று எண்ணம் அவருக்கு அதிகம் என்றார். மேலும் நடிகர் ரெட்டின் கிங்ஸ்லி சினிமாவில் பேசுவது போல் நிஜவாழ்க்கையிலும் அப்படியே பேசுகிறார். அவரும் நல்ல மனிதர் .வள்ளிமயில் படமும் எனக்கு நல்ல பெயரை ஏற்படுத்தி தரும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

இவர் தான் சீனியர்
கேள்வி: நடிகர் ரெட்டின் கிங்ஸ்லி, அறந்தாங்கி நிஷா குறித்து நீங்கள் கூற விரும்புவது...
பதில்: சில படத்துக்கு என்ன காமெடி தேவையோ அதை தான் நான் செய்கிறேன். நடிகர் வடிவேல் அவருக்கென்று தனியாக ஒரு டிராக் வைத்துள்ளார். வள்ளிமயில் படத்தில் நான் தான் முருகன். எனக்கு 6 அடி உயரம் 4 அடி அங்குலம் கொண்ட வள்ளியாக நடிக்கிறார். இருவரும் இணைந்து காமெடி செய்துள்ளோம். அறந்தாங்கி நிஷாவை போன்று யாரும் ஸ்டேஜ் புரோகிராம் செய்ய முடியாது. அதில் அவர் தான் சீனியர் என்றார்.

சதிலீலாவதி
கேள்வி: விஜய்சேதுபதிக்கு அழகு எது?
பதில்: எனக்கு நடிகர் விஜய்சேதுபதியை ரொம்ப பிடிக்கும். விக்ரம் படத்தில் தொந்தியும், தொப்பையும் நடந்து வரும் அழகு தனி. கதாநாயகனாக மட்டும் நடிப்பேன் என்று கூறாமல், தான் நடிக்கும் கதாபாத்திரம் என்னை கதாநாயகனாக மாற்றும் என்ற எண்ணத்தில் அவர் பயணிக்கிறார். அந்த எண்ணம் தான் எல்லோருக்கும் வேண்டும். அவரை போலத் நானும் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறேன். சதிலீலாவதி படத்தில் கமலுக்கு ஜோடியாக கோவைசரளா நடித்தது போல், நடிகர் விஜய்சேதுபதியுடன் கதாநாயகியாக நடிக்க ஆசை என்று சிரித்தபடி கூறினார் நிஷா . சதிலீலாவதி 2 இப்படி ஒரு காம்பினேஷன் யாரவது ஸ்கிரிப்ட் ரெடி செய்வார்களா என்று பொறுத்து இருந்து பார்ப்போம் .
ஆழமான கருத்து உள்ள படம்
கேள்வி: நிஷா, நீங்கள் நடித்து வரும் "அநீதி" படம் குறித்து நீங்கள் கூற விரும்புவது?
பதில்: இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகி அநீதி படத்தில் நான் நடிக்கிறேன். நடிகர் அர்ஜூன்தாஸ் ஹீரோவாக நடிக்கிறார். அங்காடித்தெரு, வெயில் போன்ற படங்களில் யாரும் சொல்ல முடியாத ஆழமான கருத்தை இயக்குநர் வசந்தபாலன் கூறியிருப்பார். அநீதியிலும் அதே போன்று ஆழமான கருத்தை சொல்லியிருக்கிறார். இந்த படத்தில் நானும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இப்படமும் எனக்கு நல்ல பெயரை பெற்றுத் தரும் என்றார்.இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/g8ddWpCSaBc இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம். அறந்தாங்கி நிஷா இன்னும் நிறைய விஷயங்களை ஸ்வாரசியமாக பேசி உள்ளார் . மறக்காமல் முழு வீடியோவையும் பாருங்கள்.


Click it and Unblock the Notifications











