Don't Miss!
- Finance
சீனாவின் டாப் 5 ஆன்லைன் மோசடி இவைதான்.. இந்தியாவுக்கும் ஒத்துப்போகும்.. கண்டிப்பாக படிங்க!
- News
90% அமைச்சர்களுக்கு ஆங்கிலம் தெரியாது! மழை பெய்தால் கூட திராவிடமாடல் தான் காரணமாம்! அண்ணாமலை காட்டம்
- Sports
ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை.. ராகுல் திரிபாதி மரண பேட்டிங்.. ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய மும்பை
- Automobiles
இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல... ஹூண்டாய் நிறுவனத்தை பாக்கவே பாவமா இருக்கு... என்ன ஆச்சு தெரியுமா?
- Technology
ரூ.20,000 விலைப்பிரிவு: அறிமுகமான ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு- 12 ஜிபி ரேம், 67வாட்ஸ் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங்
- Lifestyle
மேங்கோ கிரனிட்டா
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நாய் சேகர் படத்தை பார்க்க மொழி தேவையில்லை... சதீஷ் பேட்டி
சென்னை : நடிகர் சதீஷ், பவித்ரா லக்ஷ்மி லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் நாய் சேகர்.

இந்தப் படம் இன்றைய தினம் திரையங்குகளில் ரிலீசாகி வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் பிலிமிபீட் நேயர்களுக்காக அளித்துள்ள பேட்டியில் படம் குறித்த பல்வேறு விஷயங்களை சதீஷ் பகிர்ந்து கொண்டார்.
நடிகைக்கு
பாலியல்
தொல்லை
கொடுத்த
வழக்கு...
நடிகர்
திலீப்
வீட்டில்
அதிரடி
ரெய்டு!
நாய் சேகர் படம்
நடிகர் சதீஷ், பவித்ரா லக்ஷ்மி லீட் கதாபாத்திரங்களில் நடித்து இன்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் நாய் சேகர். இந்தப் படத்தில் மனிதன் நாயாகவும் நாய் மனிதனாகவும் மாறினால் என்னவாகும் என்பதை மையமாக வைத்து கதைக்களத்தை இயக்குநர் கிஷோர் உருவாக்கியுள்ளார்.

முக்கியமான கதாபாத்திரத்தில் நாய்
இந்தப் படத்தில் நாய் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. நாய்க்கு பின்னணி கொடுத்துள்ளார் பிரபல நடிகர் மிர்ச்சி சிவா. படத்தின் டீசர், ட்ரெயிலர் மற்றும் பாடல்கள் படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்றைய தினம் படம் வெளியாகியுள்ளது.

நாயகனாக என்ட்ரி
நடிகர் சதீஷ் முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடி நடிகராக பணியாற்றியுள்ள நிலையில், முதல் முறையாக இந்தப் படத்தின் மூலம் ஹீரோவாகியுள்ளார். படத்தில் நாய்க்கும் அவருக்குமான காம்பினேஷன் காட்சிகள் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளன.

சதீஷ், பவித்ரா பேட்டி
படம் குறித்து தற்போது சிறப்பான விமர்சனங்கள் வந்துள்ள நிலையில், படம் குறித்து பிலிமிபீட் நேயர்களுடன் சதீஷும் பவித்ரா லஷ்மியும் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இந்தப் படத்தை பார்ப்பதற்கு மொழி தேவையில்லை என்று சதீஷ் தெரிவித்துள்ளார்.

படத்தை பார்க்க மொழி தேவையில்லை
காட்சிகளின் மூலமே படத்தை உணர்ந்து ரசிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். அதேபோல படத்தில் உதவி இயக்குநர்கள் தங்களது படம் போல நினைத்து படத்திற்காக சிறப்பாக உழைத்ததாகவும் அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பான பெயர், புகழ்
இதனிடையே பேசிய நடிகை பவித்ரா லக்ஷ்மி, ஒரு நடிகைக்கு 3 படங்களை தாண்டி கிடைக்க வேண்டிய பெயரையும் புகழையும் ரசிகர்கள் தனக்கு முன்னதாகவே தந்துள்ளதாகவும் அதை தொடர்ந்து தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.