சீமானையே கை கட்டி நிக்கவெச்சவரு ரஜினி.. ஆதவ் அர்ஜுனாவை காலில் விழ வைப்ப்பார்.. பிரபலம் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி
சென்னை: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தவெகவின் ஆதவ் அர்ஜுனா ரஜினி குறித்து பேசியது பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. அதாவது, நடிகர் ரஜினிகாந்த் தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆருக்குப் பிறகு மிகப்பெரிய மக்கள் தலைவராக நினைத்தார். அவரை திமுக மிரட்டி அரசியலுக்கு வரவிடாமல் செய்துவிட்டது. ஆனால் விஜய் மிகவும் மன வலிமை கொண்டவர். திமுக எத்தனை நெருக்கடிகள் கொடுத்தாலும் மக்களுக்காக அரசியலுக்கு வந்துள்ளார் என்று பேசினார்.
இவரது பேச்சு ரஜினி ரசிகர்களை பெரிய அளவில் கோபப்படுத்தி உள்ளது, சமூக வலைதளங்களில் ஆதவ் அர்ஜுனா மற்றும் விஜய் என இருவரையும் தவெக கட்சியையும் மிகவும் காட்டமாக விமர்சித்து வருகிறார்கள். மேலும் சிலர் மோசமாக எல்லாம் விமர்சித்து வருகிறார்கள். இப்படி இருக்கையில் ரஜினியின் தீவிர ரசிகரான சத்யன் ராமிசாமி நமது யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் ஆதவ் அர்ஜுனா குறித்தும் விஜய் குறித்தும் காட்டமான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

ஆதவ் அர்ஜுனா காலில் விழுவார்: அவர் பேசுகையில், " விஜய் குறித்த குறிப்பாக அவரது சொந்த வாழ்க்கை குறித்த சர்ச்சைக்குப் பிறகு அவரது கட்சிக்கு பெரிய அளவில் லைம் லைட் கிடைக்கவில்லை. எனவே சூப்பர் ஸ்டார் குறித்து பேசினால் லைம் லைட் கிடைக்கும் என்பதால் இதைச் செய்துள்ளார் ஆதவ் அர்ஜுனா. இவரைப் போல கடந்த காலத்தில் பலரைப் பார்த்துவிட்டோம். ஆதவ் அர்ஜுனா சூப்பர் ஸ்டார் குறித்து பேசி தானும் இருக்கிறேன் என்று தன்னை வெளிக்காட்டிக் கொண்டுள்ளார்.
நாங்கள் தெளிவாக இருக்கிறோம், சீமான் விமர்சிக்காத விமர்சனத்தையா ஆதவ் அர்ஜுனா விமர்சித்து விட்டார்? ஆனால் அந்த சீமானையே தலைவர் கை கட்டி நிற்க வைத்தாரா இல்லையா? அதேபோல் என்றைக்காவது ஆதவ் அர்ஜுனா தலைவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பார். அது தொடர்பான புகைப்படங்களும் வரும். இதெல்லாம் விஷயமே இல்லை.
குருவி - சுறா: சூப்பர் ஸ்டார் தற்போது ரெட் ஜெயிண்ட் படத்தில் நடிக்கிறார் என்றால், குருவி என்ற காவியத்தின் மூலம் அந்த நிறுவனத்தை திரையுலகிற்கு கொண்டு வந்தது யார்? சுறா என்ற மகா காவியத்தை கொடுத்தது யார்? அப்படி என்றால விஜய் அப்போது ரெட் ஜெயிண்ட் மூவிஸ் க்கு அடிமையாக இருந்தாரா? திமுக ஆட்சியில் இருந்தபோது ரெட் ஜெயிண்ட் உடன் ஏற்பட்ட பிரச்னையால் அதிமுகவுக்கு ஆதரவு அளித்தது மட்டும் இல்லாமல், அவர்களின் டிவி சேனலுக்கு பேட்டி கொடுக்கவும் செய்தாரா? ஆனால் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைவா படத்தின் போது விஜய்யை அலைய விட்டார்.

திமுகவுக்கு சப்போர்ட்: அதன் பின்னர் திமுகவுக்கு ஆதரவான சன் பிக்சர்ஸ்க்கு நடித்த சர்கார் படத்தில் ஜெயலலிதா அவர்கள் கொடுத்த இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, லேப்டாப் என மக்கள் நலத் திட்ட பொருட்களை தீயில் போட்டு எரிக்கும் காட்சியில் நடித்தது விஜய் தானே. ரஜினியை விமர்சித்தவர்கள் எல்லாம் ஏதோ ஒரு புள்ளியில் ரஜினியிடம் சரணடைந்துள்ளார்கள். அப்படிப் பார்க்கையில் ஆதவ் அர்ஜுனா ரஜினி காலில் கட்டாயம் விழுவார்" என்று அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











