Exclusive: விஜய் வாழ்க்கையை வெறுத்துப் போய் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.. ஓபனாக சொன்ன பிரபலம்

சென்னை: நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விண்ணப்பித்துள்ள விவாகரத்து செய்தி குறித்த தகவல் தான் பெரும் விவாதமாக உள்ளது. பலர் சங்கீதாவின் விவாகரத்து மனுவை பார்த்த பின்னர் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளார்கள். இதனால் விஜய்க்கு எதிராகவும் ஆதரவாகவும் விமர்சனங்கள் வந்து கொண்டே உள்ளது. சிலர் இந்த விவகாரத்தில் கருத்து சொல்வது நல்லதாக இருக்காது என்றும் விமர்சித்தும் வருகிறார்கள். இப்படி இருக்கையில் பிரபல சினிமா ஆய்வாளர் சத்யன் ராமசாமி நமது பிலிமிபீட் தளத்திற்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ள விஷயங்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அவரது பேட்டியில், " விஜய் தனது வாழ்க்கையை வெறுத்துப் போய் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். இந்த தேர்தல் எல்லாம் முடிந்த பின்னர் நீங்கள் வேண்டுமானால் பாருங்கள், வெளிநாட்டிற்கு எங்காவது சுற்றுலா செல்கிறாரா இல்லையா என்று மட்டும் பாருங்கள். இவ்வளவு அழுத்தங்களை எல்லாம் அவர் எடுத்துக்கொண்டதே கிடையாது. எங்கு சென்றாலும் மனுஷனுக்கு வேர்க்கிறது பாவம். சின்ன வயதில் இருந்தே, குளுகுளுவென வாழ்ந்திருப்பார். அவருக்கு வேர்வை என்றாலே என்ன என்று தெரிந்திருக்காது. இன்னும் சொல்லப்போனால், அவருக்கு அண்ணன் தம்பி சண்டை கூட கிடையாது. அந்த அளவுக்கு சொகுசாக வாழ்ந்தவர் அவர். எவ்வளவு பெரிய பணக்காரனாக இருந்தாலும் வீட்டிற்குள் அண்ணனா தம்பியா என்ற பிரச்னை இருக்கும். அந்த நெருக்கடி கூட அவருக்கு இல்லை.

Sathyan Ramasamy Exclusive Interview About Vijay Mindset About His Personal Life and Political Life

குடும்பப் பிரச்னை: அவருக்கு இருக்கும் ஒரே பிரச்னை என்னவென்றால், குடும்பத்தில் இருக்கும் மனைவி, மகன், மகள் தான். அவர்களையும் வேண்டாம் என்று ஒதுக்கி வைத்து விட்டார். அவரது தனிப்பட்ட மனநிலையில்,அவரை மட்டுமே முன்னிலைப்படுத்தி சென்று கொண்டிருக்கிறார். அதனால் மற்ற அனைவரையும் எக்ஸ்ட்ரா லக்கேஜாக பார்க்கிறார். அவரைச் சுற்றி நடப்பதை எல்லாம் பார்த்து, விஜய் தனது அமைதியை இழந்து கொண்டு இருக்கிறார். இப்படியான காரணங்களால் தான் அவர் செய்தியாளர்களையும் சந்திக்காமல் இருக்கிறார்.

ஏதாவது இருக்குதா?: அவருடன் அவரது கட்சிகாரர்களே பேசுவது போலவோ, உரையாடுவது போலவோ ஏதாவது இருக்கிறதா என்றால், இல்லை. சுமார் இரண்டு மூன்று பேருடன் தான் அவருக்கு பேச்சுவார்த்தைகளே இருக்கிறது. அதுவும் அவர் சொல்ல வருவதை சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார். அவரது மனநிலையை பாதிக்க வைக்கும் சம்பவங்கள் தான் அவரைச் சுற்றி நடந்து கொண்டுள்ளது.

Sathyan Ramasamy Exclusive Interview About Vijay Mindset About His Personal Life and Political Life

இதுதான் மனநிலை: இந்த தேர்தல் அழுத்தம் எல்லாம் அவருக்கு பிடிக்கவே இல்லை. என்னை நேரடியாக முதலமைச்சராக்க வேண்டியது தானே, என்ன தேர்தல் எல்லாம் வைக்கிறீர்கள் என்ற மனநிலையில் தான் அவர் இருக்கிறார். அதே மனநிலையில் தான் அவரது ரசிகர்களும் இருக்கிறார்கள். அரசியலாக மற்றவர்களை அட்டாக் செய்வதை ஏதோ அஜித் - விஜய் ரசிகர்கள் சண்டை போல நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். மீடியாக்களில் போய் பேசுபவர்களின் பேச்சைப் பார்க்கும் போது எல்லாம் தொகுப்பாளர் உள்பட பலரும் சிரிக்கும் வகையில் நடந்து கொள்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X