அந்த விஷயம் நடந்தா மட்டும் தான் கூலி 1000 கோடி வசூல் செய்யும்.. ரஜினிகாந்த் ரசிகர் சத்யன் ராமசாமி பளிச்!

இந்த முறை ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'கூலி' திரைப்படம், உலகளவில் 1000 கோடி ரூபாய் வசூல் சாதனையைப் புரியும் என தீவிர ரஜினி ரசிகரும், சினிமா ஆர்வலருமான சத்யன் ராமசாமி ஆணித்தரமாக நம்புகிறார்.

வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகவுள்ள கூலி' படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உச்சத்தை எட்டியுள்ளது. படத்தின் ட்ரைலர் வெளிவந்து, ரஜினிகாந்தின் ஸ்டைல், மாஸ் மற்றும் வித்தியாசமான கெட்டப் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

1000

ஆகஸ்ட் 2ம் தேதி நடந்த 'கூலி' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், ரஜினிகாந்தின் படங்கள் மீதான தன் அன்பை நடிகர் நாகார்ஜுனா வெளிப்படுத்தியிருந்தார். 'கூலி' திரைப்படம் 'பாட்ஷா' படத்தைப் போல ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியிருந்தார்.

சத்யன் ராமசாமி, "லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் வெளிவரும் 'கூலி' திரைப்படம், 'ஜெயிலர்' படத்தையும் தாண்டி பெரிய வெற்றியைப் பெறும்" என்று நம்பிக்கை தெரிவிக்கிறார். ரஜினியின் நடிப்பு, படத்தின் விறுவிறுப்பான காட்சிகள் அனைத்தும் படத்தின் வெற்றிக்கு உரமாக அமையும் என்கிறார்.

'கூலி' படத்திற்காக வெளிவந்துள்ள ட்ரைலர், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இது குறித்து பேசிய சத்யன், "அந்த ப்ளூ மற்றும் ரெட் நிற மாற்றங்கள், ரஜினியின் மாஸ் என்ட்ரி, இவை அனைத்தும் 'பாட்ஷா' படத்தைப் போல ஒரு புதிய பரிமாணத்தை கொடுக்கும்" எனப் பாராட்டினார்.

சினிமாவில் 1000 கோடி வசூலை எட்ட, வட இந்திய சந்தையின் பங்களிப்பு மிக முக்கியமானது என்கிறார் சத்யன். 'ஜெயிலர்' படத்தைப் போல 'கூலி' படமும் வட இந்திய சந்தையில் பெரும் வெற்றி பெரும் என அவர் உறுதியாக நம்புகிறார்.

"இந்திய சினிமாவில் ரஜினிகாந்த் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளார். அவருடைய ரசிகர் பட்டாளம் மிகப் பெரியது. 'கூலி' படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இதுவும் படத்தின் வசூலுக்கு பெரிய பலமாக அமையும்" என தனது கருத்தை அவர் கூறினார்.

'கூலி' படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்திருப்பது குறித்தும் அவர் பேசினார். "படத்தின் சண்டைக் காட்சிகள் மிகவும் ஆக்ரோஷமாக இருந்திருக்கும். வயலன்ஸ் அதிகமாக இருப்பதால் ஏ சான்றிதழ் கிடைத்திருக்கலாம். இது ரஜினி ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமாக இருந்தாலும், படத்தின் தரத்தையும், ரஜினியின் நடிப்பையும் தாண்டி இது ஒரு வெற்றிப் படமாக அமையும்" என்றார்.

'கூலி' திரைப்படம், ரஜினிக்கு இதுவரையிலான படங்களிலேயே மிகப் பெரிய வெற்றி படமாக அமையும் என்பதில் சத்யன் ராமசாமிக்கு எந்த சந்தேகமும் இல்லை. படத்தின் வெளியீட்டிற்காக அனைவரும் ஆவலுடன் காத்திருப்பதாக பேசியுள்ளார்.

பெரிதாக ஹைப் இல்லாமல் வெளியான ஜெயிலர் திரைப்படமே 600 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் காம்பினேஷன் இணைந்திருப்பதால் இண்டஸ்ட்ரி ஹிட் அடிப்பது கன்ஃபார்ம் என்றார். மேலும், வார் 2 திரைப்படத்துக்கு சரியான டாக்ஸ் இல்லை. அந்த படம் சொதப்பி விட்டாலும், கூலி படத்துக்கு இந்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல பாசிட்டிவான விமர்சனம் கிடைத்தாலும், இந்த படம் அந்த இலக்கை எட்டும், வசூலை தாண்டி எப்படி இருந்தாலும், தலைவர் ஃபேன்ஸுக்கு இந்த படம் பக்கா ட்ரீட்டாக அமையப்போகிறது என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை என்றும் கூலி படத்தின் ரிலீஸுக்காக ஆவலுடன் காத்திருப்பதாக கூறியுள்ளார்.

கூலி படம் தொடர்பாக ரஜினிகாந்த் ரசிகர் சத்யன் ராமசாமி தமிழ் பிலிமிபீட் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியை காண வீடியோவை க்ளிக் செய்யுங்க..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X