திருமணத்தில் விருப்பம் இல்லை.. தனியா அழுதேன்.. சிங்கிளாக இருக்க காரணம்.. திவ்யா சத்யராஜ் பேட்டி!
சென்னை: ஊட்டச்சத்து நிபுணரான சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் திமுகவில் இணைந்து திமுக ஐடி விங்கின் மாநில துணைச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு தாக்கல் செய்த திவ்யா, விஜய்க்கு எதிராக பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு எந்த தொகுதியும் கொடுக்கப்படாததால், திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
திவ்யா சத்யராஜ்: இந்நிலையில், Rednool யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த திவ்யா சத்யராஜ் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் திருமணம் குறித்தும் மனம் திறந்து பேசினார். அதில், இருவர் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக இருக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு இடையே காதல் இருக்க வேண்டும், திருமணம் செய்து கொண்டோமே என்பதற்காக அவர்கள் ஒன்றாக இருக்கக் கூடாது? ஆனால், இப்போது திருமணமே கார்ப்பரேட் ஆகிவிட்டது.

திருமணத்தில் நம்பிக்கை இல்லை: ஒரே மதம், ஜாதகம் பொருந்த இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். எனக்கு ஜாதகமே இல்லை என்பதை பொறுமையாக சொல்வேன். என்னுடைய அப்பா ஜாதகத்தை நம்ப மாட்டார், நானும் அதை நம்ப மாட்டேன், அதனால் எனக்கு ஜாதகமே இல்லை. ஜாதகம் பார்த்து, பொருத்தம் பார்த்து நடக்கும் கார்ப்பரேட் வெட்டிங்கை நான் வெறுக்கிறேன். எனக்கு ஒருவரை பிடித்து இருந்தால் அவருடன் வாழ்வேன். மோதிரம் போடுவது, தாலி கட்டுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை.
தனியாக அழுதேன்: இதற்காக நான் காதலித்தது இல்லை என்று சொல்லிவிட முடியாது, நானும் காதலித்து இருக்கிறேன், எனக்கும் பல ப்ரபோஸ்கள் வந்தது, எனக்கும் பிரேக்கப் நடந்தது. ஆனால், ஒரு சின்ன வித்தியாசம் என்னவென்றால், ராஜா ராணி படத்தில் வருவது போல அப்பாவிடம் சென்று அழ மாட்டேன். தனியாக பாத்ரூமில் சென்று அழுது இருக்கிறேன். திருமண விஷயத்தில் அப்பா இதுவரை என்னிடம் எதுவும் சொன்னதில்லை. நான் தனியாக இருந்தாலும் அவர் சந்தோஷப்படுவார், விரும்பி ஒருத்தருடன் வாழ்ந்தாலும் அவர் சந்தோஷப்படுவார். ஆனால், இப்போது என்னுடைய இரண்டே இரண்டு கண் என்னவென்றால் ஒன்று நியூட்ரிஷன், மற்றொன்று அரசியல் மட்டும் தான் என திவ்யா சத்யராஜ் பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications