For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  83 வயசிலும் கலக்கும் விஷாலின் அப்பா..இளமையா இருக்க என்னவெல்லாம் செய்யறாரு !

  |

  சென்னை: "83 years gold, never be old " இந்த வாசகத்தை கேட்டதுமே உடனே அனைவரும் சொல்வது, " இது விஷால் அப்பா, ஜிகே ரெட்டியோட பஞ்ச் ஆச்சே" என்று தான்.

  உடற்பயிற்சி ஆரோக்கியம் இவற்றில் பேரார்வம் கொண்ட, நடிகரும் தயாரிப்பாளருமான ஜிகே ரெட்டி, பல சுவாரஸ்யமான தகவல்களை நம்மிடையே பகிர்ந்து கொண்டார்ஆரோக்கியம், உடற்பயிற்சியில் ஆர்வமுள்ள இவர்,அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தனது ஒர்க் அவுட் வீடியோவை பகிர்வார். ஃபிட் இந்தியா அமைபின் தூதராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  நந்திதாவின் ஐபிசி 376 படம்... அக்டோபர் 28ல் ரிலீஸ்! நந்திதாவின் ஐபிசி 376 படம்... அக்டோபர் 28ல் ரிலீஸ்!

  அடுத்ததாக ஓராண்டிற்கான உடற்பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தும் வகையுல் ஃபிட் இந்தியா சார்பில் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டுள்ளார். விஷாலுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இவருடைய ஃபிட்னஸ் வீடியோ வைரலாகி வருகிறது.

  விஷால் என் மகன்

  விஷால் என் மகன்

  கேள்வி : உங்க பையன் விஷால், அவர பத்தி சொல்லுங்களேன்?

  பதில் :விஷால் என் பையன்னு சொல்லிக்கிறதுல எனக்கு ரொம்ப பெருமையாவும் சந்தோஷமாவும் இருக்கு. அவனுக்கு நிறைய திறமை இருக்கு, நல்ல லீடர், அவன் என்னுடைய மகன்னு சொல்லிக்கிறதுல எனக்கு சந்தோஷம்.

  இதான் ரகசியம்

  இதான் ரகசியம்

  கேள்வி : எப்படி உங்க ஃபிட்னஸ மெயிண்டயின் பன்றீங்க?

  பதில் :2014, என்னுடைய 74 வது வயசு பிறந்த நாள் விழாவுல, வீட்ல எல்லாரும் ' அப்பா நீங்க ரெஸ்ட் எடுத்துக்கோங்க. பொறுப்புல்லாம் பசங்க பாத்துக்குவாங்க'-ன்னு சொன்னப்போ, பெரிய மகன் கிட்ட கிரானைட் பிசினஸ், சின்னவன் கிட்ட படம் சம்பந்த பட்ட வேலைகளை குடுத்துட்டு, இப்ப ரிலாக்ஸ் ஆ இருக்கேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஃபிட்னஸ் விஷயங்கள மத்தவங்களுக்கும் சொல்லி ஊக்குவிச்சிகிட்டு இருக்கேன். ஆனா இன்னமும் மனசுல ஓடுகிட்டு இருக்க விஷயம், நான்பெரிய ஆள் ஆகனும்.

  வெறி இருக்கு

  வெறி இருக்கு

  கேள்வி : நீங்க கடந்து வந்த பாதை பத்தி சொல்லுங்களேன்.

  பதில் :1939 ல் நான் பிறந்த 4 மாசத்துலயே இரண்டாம் உலகப்போர் ஆரம்பிச்சது. ரொம்ப சின்ன வயசுலயே சுதந்திர போராட்டத்துல கலந்துகிட்டு, கொடி புடிச்சிகிட்டு போன நிகழ்வு ல்லாம் என்னால மறக்கவே முடியாது. ஒரு சாதாரண விவசாய குடும்பத்துல பிறந்தவன். கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி வந்தேன்.அப்பவும் சரி இப்பவும் சரி, நான் பெரிய ஆள் ஆகனும்ங்குற வெறி இருந்துட்டே இருக்கு. நான் ஹீரோ ஆகனும்ன்னு நெனச்சேன். ஆனா முடியல. காத்திருந்தேன். என் மகன ஹீரோவாக்கினேன்.

  Robo Shankar funny speech in Kannamma Ennamma Music audio Launch Event | Rio Raj Pavitha
  உங்கள தூங்க விடாது

  உங்கள தூங்க விடாது

  கேள்வி : உங்க வாழ்க்கையின் வெற்றியின் ரகசியம் என்ன ?

  பதில் : கஷ்டப்பட்டாதான் பலன் இருக்கு. எல்லாம் சாதாரணமா கிடைச்சிடாது. பெங்களூர் ல வேலை பார்த்தேன். ஆவடி ல வேலை பாத்த்தேன். எஸ் எஸ் எல்சி படிச்சி முடிச்சதுமே நான் பெரிய ஆள் ஆகனும்ங்கிற வெறி இருந்துச்சு. ஒவ்வொருத்தரும் அது போல ஒரு கனவும் வெறியும் உழைப்பும் இருந்தா, அது உங்கள தூங்க விடாது. துரத்தும். நிச்சயமா அந்த இலக்கை அடையமுடியும்

  அதுதான் வெற்றி. உத்யோகம் புருஷ லட்சனம். இந்த வேலைதான், அந்த வேலைதான்னு இல்ல. செய்யும் வேலைதான் கடவுள். அந்த கடவுள மதிக்கனும். உழைக்கனும்.

  இது ரெண்டும் இருந்தா

  கேள்வி : வளரும் தலைமுறையினருக்கு நீங்க சொல்லும், ஒரு வெற்றியின் ரகசியம் என்ன ?

  பதில் :ஹெல்த் தான் ரொம்ப ரொம்ப முக்கியம். 83 வயசானாலும் இன்னக்கு நான் ஆரோக்கியமா இருக்கேன். அது போல எல்லாரும் இருக்கனும். வெற்றி அடைய ஆரோக்கியம் வேணும். ஆரோக்கியம் இருந்தா என்ன வேணும்ன்னாலும் சாதிக்கலாம். டிவி எஸ் சுந்தரம் ஒரு ஹ்ர்ல்பரா இருந்தவர், ரிலையன்ஸ் ஓனர் ஆயில் வித்து சைக்கிள் ல போனவங்க. ஒவ்வொருத்தருக்கும் அவங்களோட திறமை என்ன.. என்ன நம்மால முடியும்ன்னு சுய பரிசோதனை செய்யனும். அத கண்டு பிடிச்சிட்டா போதும். வாழ்க்கைல ஜெயிச்சிடலாம். அத தொடர்ந்து செய்ய, உடல் ஆரோக்கியம் வேணும். அப்பறம் என்ன நெனச்சதையும் சாதிக்கலாம். ஆரோக்கியமாவும் இருக்கலாம். அதுதான் வாழ்க்கையின் வெற்றி, என பல வாழ்வியல் ரகசியங்களை, வெற்றிகளை நம்மிடையே பகிர்ந்து கொண்டார் நடிகரும் தயாரிப்பாளருமான ஜிகே ரெட்டி. மேலும் பல சுவாரஸ்யமான விஷயங்களை நம்மிடையே பகிர காத்திருக்கிறார் அடுத்த வீடியோவிலும்.தொடர்ந்து காண ஃப்லிம் பீட் தளத்தில் இணையவும்.

  English summary
  Secrets behind Vishal Father’s Health and Fitness
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X