படுத்த படுக்கையான குபேரா.. தெலுங்கில் கிடைத்த வரவேற்பு தமிழில் ஏன் இல்லை.. சேகர் கம்முலா வேதனை!

சென்னை: தெலுங்கில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்த சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தன ஆகியோர் நடித்த குபேரா திரைப்படம். பான் இந்தியா திரைப்படமாக ஜூன் 20ஆம் தேதி வெளியானது. தெலுங்கில் இந்த படம் வசூலை அள்ளிய நிலையில் தமிழில் வசூல் படுத்த படுக்கையாகி விட்டது இது குறித்து இயக்குனர் சேகர் கம்முலா வேதனையை பகிர்ந்து உள்ளார்.

சார் படத்திற்கு பிறகு தனுஷ் இரண்டாவது முறையாக தெலுங்கு இயக்குனருடன் கூட்டணி சேர்ந்துள்ளார். இந்த படத்தில், தனுஷ் பிச்சைக்காரனாக தேவா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். பல லட்சம் கோடி மதிப்பிலான எண்ணெய் மற்றும் எரிவாயு ஒப்பந்ததை கைப்பற்ற தொழிலதிபர் நீரஜ் திட்டம் போடுகிறார். இந்த ஒப்பந்தம் வேண்டும் என்றால் ரூ. 1 லட்சம் கோடி தர வேண்டும் என அரசியல்வாதிகள் பிஸ்னஸ் பேசுகின்றனர். ஆனால், தொழிலதிபரோ இதில் தனது பெயரை அடிபடக்கூடாது என்பதால் நாகர்ஜுனா மூலம் கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்ற திட்டம் போடுகின்றனர்.

Kuberaa Dhanush Sekhar Kammula
Photo Credit:

குபேரா: இதில் நீரஜ் நிறுவனம் சம்பந்தம் ஆகக்கூடாது என்பதால், பினாமி மூலம் இதை செய்ய நாகர்ஜுனா திட்டம் போட்டு, பல ஊர்களில் இருந்து நான்கு பிச்சைக்காரர்களை அழைத்து வருகிறார். அவர்களின் பெயரில், புதிய நிறுவனங்களை தொடங்கி, ஒவ்வொரு நபரின் பெயர் மூலம் ரூ. 10 ஆயிரம் கோடி பரிவர்த்தனை நடக்கிறது. பரிவர்த்தனை முடிந்ததும் பிச்சைக்காரர்கள் கொல்லப்படுகின்றனர். இந்த விஷயம் தனுஷுக்கு தெரிய வர, அந்த இடத்தில் இருந்து தனுஷ் தப்பி சென்றுவிடுகிறார்., அவர் பெயரில் உள்ள ரூ. 10 ஆயிரம் பணத்தை வாங்குவதற்காக, தொழிலதிபரின் கும்பல், தனுஷை தேடுகிறார்கள். இந்த கும்பலிடம் தனுஷ் சிக்கினாரா.. அந்த பணத்தை தனுஷ் என்ன செய்தார் என்பது தான் குபேரா படத்தின் கதை.

வருத்தமாக உள்ளது: இந்த படத்தில் தனுஷ் நல்ல நடிப்பை பலரும் பாராட்டிய போதும், தமிழில் இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வசூலை பெறவில்லை. ஆனால், தெலுங்கு ரசிகர்கள் அந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். தெலுங்கில் படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. இந்நிலையில், இயக்குநர் சேகர் கம்முலா அளித்துள்ள பேட்டியில், வெளிநாடுகளில் குபேரா படம் தமிழ் பார்வையாளர்களிடம் வரவேற்பை பெற்று இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் குபேரா படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. தமிழ் ரசிகர்களுக்கு குபேரா படம் பிடித்து இருக்கிறது. படம் பார்த்த அனைவரும் நல்ல கருத்தையே கூறி இருந்தனர். ஆனால் அது பாக்ஸ் ஆபிஸில் வசூலாக மாறவில்லை. இந்த படத்தில் தனுஷ் அவர்கள் பிச்சைக்காரனாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருந்தார். வேறு எந்த நடிகரும் இந்த கதாபாத்திரத்தில் இவ்வளவு சிறப்பாக செய்திருக்க முடியாது. நான் அவரின் நடிப்பை பார்த்து மிரண்டு விட்டேன். இது பெருமை கூறிய விஷயமாகத்தான் இருக்கிறேன். இதனால், குபேரா படம் தமிழில் வசூலை பெறும் என்று நம்பினேன். அது நடக்காமல் போனது வேதனையாக உள்ளது. ஆனால், தெலுங்கில் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகிறார்கள். வசூலும் நன்றாக இருக்கிறது என்ற படத்தின் இயக்குனர் சேகர் கம்முலா பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X