தோழி என்ற வார்த்தையை மனைவியாக நடிகர் தனுஷ் மாற்ற வேண்டும்... அன்பாக சொல்லும் ஜோடி யார்?
சென்னை: விவாகரத்து என்பது கேலிக்கூத்தான விஷயம் என்று நடிகர் ராஜ்கமல் தெரிவித்துள்ளார்.
நடிகர் ராஜ்கமல் மற்றும் அவரது மனைவி நடிகை லதா ராவ் ஆகியோர் இணைந்து சென்னை வளசரவாக்கம் கிருஷ்ணா நகரில் சினிமா மற்றும் தொடர்களுக்காக Rajkamal Shooting House என்பதை உருவாக்கியுள்ளனர்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் "தெய்வம் தந்த பூவே" தொடரின் படப்பிடிப்பு இங்கு சமீபத்தில் நடைபெற்றது. அது மட்டும் அல்லாமல் பல விளம்பர படங்கள், குறும்படங்கள் என்று நிறைய ஷூட்டிங் தொடர்ந்து நடை பெற்று வருகிறது .
இந்நிலையில் நடிகர் ராஜ்கமல் மற்றும் நடிகை லதா ராவ் ஆகியோர் நமது பிலிம்பீட் வினோத்துக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு பார்க்கலாம்

நடிகர் தனுஷ் நெருப்பு மாதிரி
கேள்வி: தற்போது உங்களை பாதித்த சம்பவம் எது?
ராஜ்கமல் பதில் : விவாகரத்து செய்த அனைத்து தம்பதியினரும் ஒன்று சேர்ந்தால் சந்தோஷப்படுவேன்.
விவாகரத்து என்ற ஒரு சம்பவம் நடைபெறக்கூடாது என்பது எனது விருப்பம். விவாகரத்து என்பது ஒரு கேலிக்கூத்தான விஷயம். நான் ஒரு ரஜினியின் தீவிர ரசிகன். ஆனால் அவரது குடும்பத்தில் நடந்த தனுஷ் & ஐஸ்வர்யா விவகாரத்து என் மனதை ரொம்ப பாதித்தது. நடிகர் தனுஷ் நெருப்பு மாதிரி. எந்த ஒரு விஷயத்தை எளிதாக உள்வாங்கிக் கொண்டு செயல்படக்கூடியவர். அவருக்கு என்ன பிரச்னை, ஐஸ்வர்யாவிடம் என்ன பிரச்னை என்பது நமக்கு தெரியாது. இந்த விவாகரத்து மூலம் நடிகர் ரஜினி எந்தளவுக்கு மனதளவில் வேதனை அடைந்திருப்பார் என்பதை என்னால் உணர முடிகிறது. இதை நான் கூறுகிறேன் என்றால் எனக்கும் லாரா, ராகா ஆகிய இரண்டு பெண்கள் குழந்தைகள் உள்ளனர்.
நடிகர் தனுஷ் சமீபத்தில் போட்ட பதிவு ஒன்றில், தோழி ஜஸ்வர்யா என்று குறிப்பிட்டிருந்தார். தோழி என்ற வார்த்தை மனைவி என்று மாறினால் நாங்கள் ரொம்ப சந்தோஷப்படுவோம் என்றார்.
லதா ராவ் பதில் : யாருமே 15 வருடங்கள் கழித்து பிரிந்து விடுவோம் என்ற எண்ணத்தில் திருமணம் செய்து கொள்வதில்லை. அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனம் செய்வதற்கு நமக்கு தகுதியும் கிடையாது. அது தவறும் கூட. நடிகர் தனுஷ் & ஐஸ்வர்யா தம்பதியினர் 15 வருடங்கள் பயணித்து விட்டு தற்போது பிரிவது எனக்கு ரொம்ப மனவருத்தத்தை அளிக்கிறது என்றார்.

லட்சுமி கடாட்சம்
கேள்வி: நடிகை லதா Rajkamal Shooting House குறித்து நீங்கள் கூற விரும்புவது.
லதா பதில்: இந்த வீட்டில் சாமியறை, சமையலறை ஆகிய இரண்டையும் அருமையாக வடிவமைத்து இருக்கிறோம். அனைத்து அறைகளும் ஐவரி Finishing செய்திருக்கிறோம். சாமி விஷயத்தை பொறுத்தவரை நான் ரொம்ப பழம். ஒரு வீட்டுக்குள் செல்லும் பொழுது Positive Vibration ஏற்பட வேண்டும். அது போன்ற உணர்வு இங்கு ஏற்படும். லட்சுமி கடாட்சம் இருக்கும். பெண்கள் அதிகமாக செலவிடும் நேரம் சமையலறை தான். சமையலறை சுத்தமாக வைத்துக் கொண்டால் சந்தோஷமும், Positive Vibration ஏற்படும் என்றார்.

எந்திரனாக மாறும்
கேள்வி: Rajkamal Shooting House ல் Antique Collection Room ஏன் ஏற்படுத்தவில்லை.
ராஜ்கமல் பதில்: இங்குள்ள மூன்று அறைகளை எப்படி வேண்டுமென்றாலும் இயக்குனர் நினைத்தால் மாற்றிக் கொள்ளலாம். நாங்கள் கூடு தான் கட்டியுள்ளோம். தற்போது கூட ஜீ தமிழ் டிவியின் "தெய்வம் தந்த பூவே" என்ற நாடகத்தின் படப்பிடிப்பு இங்கு நடந்தது. நான் எதார்த்தமாக சென்று பார்த்தேன். நான் கட்டிய மொட்டை மாடியே அங்கு இல்லை. அவ்வளவு அழகாக மாற்றியிருந்தார்கள். சினிமாக்காரர்கள் ஒவ்வொருவரும் இன்ஜினியர் மட்டுமின்றி சிறந்த வடிவமைப்பாளரும் கூட. நான் கட்டிடம் கட்டி, கலர் அடித்து கொடுத்துள்ளேன். இயக்குனர்கள் எப்படி வேண்டுமென்றாலும் மாற்றிக் கொள்ளலாம். இந்த Rajkamal Shooting House இயக்குனர் சங்கர் அவர்களிடம் சென்றால் எந்திரனாக மாறும். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் சென்றால் அழகான மின்சார கனவாக மாறும் என்றார்.
இ.எம்.ஐ. என்பது மிகப்பெரிய இமயமலை
கேள்வி: உங்களுக்கு இ.எம்.ஐ. குறித்து கவலையில்லையா?
ராஜ்கமல் பதில்: இ.எம்.ஐ. என்பது மிகப்பெரிய இமயமலை. இது வரை நாங்கள் சம்பாதித்த பணத்தை கொண்டு இ.எம்.ஐ. கட்டிக் கொண்டு வருகிறோம். தற்போது தான் புரோக்டக்ஷன் மேனேஜர், சினிமாக்காரர்கள் கண்களில் இந்த Rajkamal Shooting House படப்பிடிப்பு தளம் தென்படுகிறது. நம்மவீட்டு பெண், பாக்கியலட்சுமி போன்ற தொடர்களுக்காக இங்கு படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள். இன்னும் மூன்று மாதங்கள் கழித்து அனைவரும் இங்கு படப்பிடிப்பு நடத்த வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்கு பிறகு எங்களது இ.எம்.ஐ. சினிமாவே கட்டி விடும் என்று நம்புவதாக தெரிவித்தார்.இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/bdy-wQQJ4iE இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம். பில்மிபீட் ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் வினோத் மற்றும் நடிகர் ராஜ்கமல் & நடிகை லதா ராவ் இன்னும் நிறைய விஷயங்களை ஸ்வாரசியமாக பேசி உள்ளனர். மறக்காமல் முழு வீடியோவையும் பாருங்கள்.


Click it and Unblock the Notifications











