அப்ப ஆரம்மிச்ச பழக்கம்.. இப்பவும் சரக்கு அடிக்கிறேன்.. சீரியல் நடிகை ஓபன் டாக்!

சென்னை: 'மெட்டி ஒலி' தொடரின் மூலம் டிவி சீரியல் நடிகையாக அறிமுகமானவர் தான் கிருத்திகா அண்ணாமலை. அந்த சீரியலைத் தொடர்ந்து, செல்லமே ,வம்சம், கேளடி கண்மணி, ராஜா ராணி என பல சீரியல்களில் நடித்துள்ளார். அண்மையில் இவர் அளித்த பேட்டியில் பல விஷயத்தை மனம் திறந்து பேசி உள்ளார்.

நடிகை கிருத்திகா: அதில், நான் முதன் முதலில் மெட்லி ஒலி சீரியலில் நடித்த போது எனக்கு ஒரு நாளைக்கு 750 ரூபாய் சம்பளம் வாங்கினேன். அதன் பிறகு ஏ.வி.எம் ஒரு சீரியலில் நடித்தேன் அந்த சீரியலில் ஒரு நாளைக்கு 500 ரூபாய் தான் வாங்கினேன். ஏ.வி.எம்-மில் சொன்னால் சொன்ன தேதியில் சம்பளகொடுப்பார்கள் என்று சொன்னதால் குறைந்த சம்பளமாக இருந்தாலும் பரவாஇல்லை என நடித்தேன். தற்போது இரண்டு சீரியலில் நடித்து வருகிறேன் இதில் மல்லி சீரியலில் 10 ஆயிரம் ரூபாயும், கார்த்திகை தீபம் சீரியலில் நடிக்க 12 ஆயிரம் வாங்கி வருவதாக கூறினார்.

Serial actress Krithika Annamalai
Photo Credit:

அப்ப ஆரம்மிச்ச பழக்கம்: தொடர்ந்து சரக்கு அடிக்கும் பழக்கம் குறித்து பேசிய நடிகை கிருத்திகா அண்ணாமலை, நடிக்க வந்த பிறகு தான் சரக்கு அடிக்கும் பழக்கமே வந்தது. நடிக்க வந்த புதிதில் 'Wine' குடித்தால் ஸ்கின் நல்லா பளபளவென க்ளோவாக, நன்றாக இருக்கும் என சொன்னார்கள். ஒரு நடிகைக்கு ஸ்கின் தானே முக்கியம் இதனால், முதன் முதலாக Wine குடித்தேன். தினமும் தூங்கும் போது கொஞ்சமாக Wine குடித்துவிட்டு தூங்கினால் நிச்சயமாக நல்ல க்ளோ கிடைக்கும். ஆனால், சிலர் அதை அப்படியே ஒரே அடியாக குடித்துவிடுகிறார்கள். அப்படி அதிகமாக குடித்தால் பலன்தராது. என் 22வது வயதில் இருந்து நான் 'Wine' குடிக்கிறேன். எப்போவது, பார்ட்டிக்கு சென்றால் சரக்கு அடிப்பேன் என நடிகை கிருத்திகா அந்த பேட்டியில் கூறியுள்ளார். நடிகை கிருத்திகாவின் பழைய பேட்டி தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

கார்த்திகை தீபம்: நடிகை கிருத்திகா அண்ணாமலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கார்த்திகை தீபம் சீரியலில் சந்திரகலா என்கிற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அக்காவின் குடும்பத்தை கெடுக்கும் வில்லியாக நல்லா நடிப்பை கிருத்திகா வெளிப்படுத்தி வருகிறார். இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள்.

More from Filmibeat

Read more about: serial actress
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X