இவங்கதான் அந்த செலிபிரிட்டி.. சிரிச்சுக்கிட்டே பேசும் லதா ராவ்.. கலக்கல் பேட்டி!
Recommended Video
சென்னை: யாரு இந்த செலிபிரிட்டி என புதிரான ஒரு புரொமோ வீடியோ சமீபத்தில் ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டில் வெளியாகி இருந்ததுல, தற்போது, அந்த பிரபலம் இவங்க தான் என ரிவீல் ஆகி இருக்கிறது.
கடந்த 15 வருடங்களாக தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் 30க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ள நடிகை லதா ராவ் தமிழ் பிலிமி பீட்டுக்கு பேட்டி அளித்துள்ளார்.

எந்த ஒரு கேள்வியை கேட்டாலும், சிரித்துக் கொண்டே பேசும், குணம் கொண்ட லதா ராவுக்கு தமிழ்நாட்டில் ஏகப்பட்ட சீரியல் ரசிகர்கள் உள்ளனர்.
கர்நாடகாவை பூர்வீகமாக கொண்டிருந்தாலும், லதா ராவ் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் தமிழ் நாட்டில் தான்.
சர்வ சாதாரணமாக தென்னிந்திய மொழிகளில் பேசி நடிக்கக் கூடிய சின்னத்திரை நடிகைகள் இருப்பார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி தான்.
அதன் காரணமாகத்தான் நான்கு மொழிகளிலும், சின்னத்திரையில் கலக்கி உள்ளார். மேலும், ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தில்லாலங்கடி படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்து அசத்தியிருப்பார்.
பிரபல சின்னத்திரை நடிகரான ராஜ்கமலை காதலித்து திருமணம் செய்து கொண்ட லதா ராவுக்கு லாரா மற்றும் ராகா எனும் இரண்டு மகள்கள் உள்ளனர்.
தான் பிறந்தது, வளர்ந்தது, சிரீயலில் கிடைத்த வாய்ப்பு என பல சுவாரஸ்யமான விஷயங்களை இந்த பேட்டியில் கலகலப்பாக பகிர்ந்துள்ளார். வீடியோவை க்ளிக் செய்து, லதா ராவின் அரட்டையை கண்டு மகிழுங்கள்..


Click it and Unblock the Notifications











