twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'சீரியல் போதும்.. சினிமா ஆசை இல்லை..' - 'அவளும் நானும்' மௌனிகா #Exclusive

    By Vignesh Selvaraj
    |

    சென்னை : விஜய் தொலைக்காட்சியில் புதிதாகத் தொடங்கி ஒளிபரப்பாகி வரும் தொடர் 'அவளும் நானும்'. இந்த சீரியலில் கதாநாயகியாக இரட்டை வேடங்களில் நடிப்பவர் மௌனிகா.

    நடிக்கும் முதல் சீரியலிலேயே நிலா, தியா என இரட்டைச் சகோதரிகளாக டபுள் ஆக்‌ஷன் பெர்ஃபார்மன்ஸில் கலக்கி வருகிறார் மௌனிகா தேவி.

    சீரியலில் நடிப்பதில் மிகுந்த விருப்பத்துடன் பணியாற்றிவரும் மௌனிகாவிடம் அடுத்தகட்ட முயற்சிகள், எதிர்கால ஆசை பற்றி கேட்டோம். அவரது பேட்டி இங்கே...

    'அவளும் நானும்' சீரியல் நடிப்பு எப்படி போகுது?

    'அவளும் நானும்' சீரியல் நடிப்பு எப்படி போகுது?

    " 'அவளும் நானும்' சீரியல் ரொம்ப நல்லா போய்க்கிட்ருக்கு. முதலில் ஆரம்பிக்கும்போது ரெண்டு கேரக்டர்ஸ் நான் பண்றது கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. காஸ்ட்யூம்லாம் அடிக்கடி சேஞ்ச் பண்ணவேண்டியிருக்கும். டெக்னிக்கல் சைட்ல எனக்கு நல்லா சப்போர்ட் பண்றாங்க. அதுனால எந்தப் பிரச்னையும் இல்லாம நடிக்க முடியுது."

    உங்களோட ஷூட்டிங் ஸ்பாட் எப்படி இருக்கும்?

    உங்களோட ஷூட்டிங் ஸ்பாட் எப்படி இருக்கும்?

    "டைரக்டர் தனுஷ், கோ-ஆர்டிஸ்ட்ஸ்லாம் நல்லா சப்போர்ட் பண்ணுவாங்க. வீட்டுல எப்படி இருப்போமோ அதே மாதிரி தான் எனக்கு செட்ல இருக்கும்போதும் இருக்கும். அதனால் டைம் போறதே தெரியாது. நடிக்கும்போதும் நிறைய டேக் போகாது. டைரக்டர் ஒருவாட்டி சொல்லிக்கொடுப்பார். அவ்ளோதான். அவ்ளோ சுதந்திரம் கொடுத்ததால் தான் சீரியலுக்கு இப்போ நல்ல ஃபீட்ஃபேக் வந்துட்டு இருக்கு."

    நடிப்பில் ஆர்வம் வந்தது எப்படி?

    நடிப்பில் ஆர்வம் வந்தது எப்படி?

    "சின்ன வயசுல இருந்தே நடிக்கிறதுல ரொம்ப ஆர்வம். ஸ்கூல்ல நிறைய ட்ராமா, டான்ஸ் எல்லாம் பண்ணியிருக்கேன். வீட்டுல அம்மா சீரியல் பார்க்கும்போதும், அதைப் பத்தி பேசும்போதும் தான் சீரியல்ல நடிச்சா எல்லோருக்கும் பிடிச்ச மாதிரி ஆகலாம்னு தோணுச்சு. அப்படி வந்ததுதான் இந்த சீரியல் நடிகை ஆர்வம்."

    குடும்பப் பின்னணி, உங்களுக்கு சப்போர்ட்?

    குடும்பப் பின்னணி, உங்களுக்கு சப்போர்ட்?

    "அப்பா, அம்மா, ஒரே ஒரு அண்ணா. அப்பா பிஸினஸ் பண்றாங்க. அம்மா ஹோம் மேக்கர். அண்ணா ஐ.டி-ல வொர்க் பண்றாங்க. நான் மட்டும் இந்த ஃபீல்டுக்கு வந்துட்டேன். ஆரம்பத்துல எனக்கு சப்போர்ட்டே இல்ல. டிகிரி முடிச்சதுக்கு அப்புறம் அண்ணாகிட்ட கேட்டு, அவங்க சப்போர்ட்ல தான் நடிக்க வந்தேன். இப்போ சீரியல்ல நடிக்கிறதைப் பார்த்துட்டு அப்பா, அம்மா சப்போர்ட் பண்றாங்க."

    யாரை பார்த்து இன்ஸ்பயர் ஆனீங்க?

    யாரை பார்த்து இன்ஸ்பயர் ஆனீங்க?

    "எட்டாவது படிக்கும்போது, டி.வி-யில் சீரியல், ஷோக்கள் எல்லாம் நிறைய பார்ப்பேன். சுமா-ங்கிற ஒரு மலையாளி தெலுங்கு டி.வி-யில் வந்து ஆங்கரிங் பண்ணாங்க. மலையாளத்துல இருந்து வந்து தெலுங்குல பண்ணினதால அவங்களை எனக்கு இன்ஸ்பிரேஷனா எடுத்துக்கிட்டேன். அவங்கள மாதிரியே அதிகம் தமிழ் தெரியாத நானும் தமிழ்ல அந்த லெவலுக்கு வரணும்னு நெனைச்சேன்."

    ஆங்கரிங் பண்றதுதான் ஆசையா?

    ஆங்கரிங் பண்றதுதான் ஆசையா?

    "ஆங்கரிங் பண்ணனும்னு தான் எனக்கு ரொம்ப ஆசை. தெலுங்கில் ரெண்டு வருஷம் நியூஸ் ரீடரா வொர்க் பண்ணி நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன். நிறைய விளம்பரப் படங்கள்லேயும் நடிச்சிருக்கேன். சீரியல் நடிப்புக்கு அப்புறம் ஆங்கரிங் பண்ணணும்னு விருப்பம் இருக்கு."

    சினிமா சான்ஸ் கிடைக்குதா?

    சினிமா சான்ஸ் கிடைக்குதா?

    "சினிமாவுல நடிக்கிறதுக்கு எனக்கு ஆர்வம் இல்ல. எனக்கு மாடலிங், சீரியல் நடிப்பு மேல தான் ரொம்ப இஷ்டம். அதுக்கு ஸ்பெஸிஃபிக்கா எதுவும் காரணம் இல்ல. 'ஹரஹர மஹாதேவகி' படம் கடைசியா பண்ணேன். எனக்கு ஆரம்பத்துல இருந்தே சினிமாவில் நடிக்க விருப்பம் இல்ல. என்னோட கவனத்தை முழுக்க முழுக்க சீரியல் பக்கமே வெச்சுட்டேன்."

    'அவளும் நானும்' தவிர வேறு சீரியல் வாய்ப்பு வருதா?

    'அவளும் நானும்' தவிர வேறு சீரியல் வாய்ப்பு வருதா?

    "இந்த சீரியல் நடிக்கவே மாசத்துக்கு 22 நாட்கள் ஷூட்டிங் வருது. வேற சீரியல் சான்ஸ்களும் வந்துட்டு இருக்கு. இந்த சீரியலை நல்லா பார்த்திட்டு, அதுக்கு மேல முடிஞ்சா வேற சீரியல்ல நடிக்கலாம்ங்கிற ஐடியாவில் இருக்கேன். உடனே எடுக்காம யோசிச்சுதான் கமிட் ஆவேன். நல்ல கன்டென்ட் வந்தா நடிக்கலாம்னு வெய்ட் பண்ணிட்டு இருக்கேன்."

    சீரியலில் என்ன மாதிரி கேரக்டர் பண்ண ஆசை?

    சீரியலில் என்ன மாதிரி கேரக்டர் பண்ண ஆசை?

    "நெகட்டிவ் கேரக்டர் பண்றதுக்கு பிடிக்கும். ரொம்ப போல்டான கேரக்டர் கிடைக்கணும்னு வெய்ட் பண்ணிட்டு இருக்கேன். அப்படி ஒரு கேரக்டர் கிடைச்சா நிச்சயம் நடிப்பேன். நிறைய நடிக்கணும். அப்படியே ஆங்கரிங் பக்கமும் வரணும். இதுதான் என்னோட பிளான்.

    ரசிகர்கள் மத்தியில் உங்களுக்கு வரவேற்பு எப்படி இருக்கு?

    ரசிகர்கள் மத்தியில் உங்களுக்கு வரவேற்பு எப்படி இருக்கு?

    "இப்போ வரைக்கும் பாஸிட்டிவ் விமர்சனங்கள் தான் வந்திருக்கு. நிலா, தியா, ரெண்டு கேரக்டருக்கும் தனித்துவமான ஸ்டைல் தெரியிறதா நிறைய பேர் பாராட்டுறாங்க. எல்லோரும் நீங்க சிஸ்டர்ஸா, ட்வின்ஸானு கேக்குறாங்க. அந்த அளவுக்கு எல்லோரும் இந்த சீரியலையும், என் கேரக்டர்ஸையும் விரும்பிப் பார்க்குறாங்க."

    உங்க கரியர் திருப்தியா இருக்கா?

    உங்க கரியர் திருப்தியா இருக்கா?

    "நான் ரொம்ப போராடித்தான் நடிக்க வந்துருக்கேன். வந்து நல்ல சீரியல் கிடைச்சு முதல் சீரியல்லயே டபுள் ஆக்‌ஷன் பண்றதுனு ரொம்ப ஹேப்பி. அம்மா, அப்பா என் முன்னாடி என்னோட நடிப்பு நல்லா இருக்கு இல்லைன்னு எதுவுமே சொல்லமாட்டாங்க. ஆனா, எனக்குப் பின்னாடி அண்ணா கிட்ட, வெளியில தெரிஞ்சவங்ககிட்ட எல்லாம் நல்லா பண்றேன்னு சொல்வாங்க. அந்தவகையில் சந்தோஷம் தான்."

    English summary
    Mounika Devi acts in dual role in the serial 'Avalum naanum'. Here is an interview with Mounika.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X