இனிமே சீரியல் இல்லை.. சினிமாவில் காலடி எடுத்து வைக்கும் பிரபல சின்னத்திரை நடிகை.. எக்ஸ்க்ளூசிவ்!
சென்னை: சின்னத்திரை நடிகை நீலிமா ராணி சினிமா ஹீரோயினாக மாறியுள்ளது குறித்து பிரத்யேகமாக அளித்துள்ள பேட்டி வெளியாகி இருக்கிறது.
மெட்டி ஒலி, செல்லமே, வாணி ராணி, தலையணை பூக்கள், மகாபாரதம், அரண்மனை கிளி உள்ளிட்ட எக்கச்சக்க சீரியல்களில் பல ஆண்டுகளாக தமிழ் மக்கள் உள்ளங்களில் ஒருவராக கலந்து உள்ளார் நடிகை நீலிமா ராணி.

இனி சீரியல்களை விட சினிமாவில் கவனத்தை செலுத்தப் போவதாக அறிவித்துள்ளார். மேலும், தான் லீடு ரோலில் நடித்து வரும் "கருப்பன் காட்டு வலசு" படம் குறித்த பல சுவாரஸ்ய தகவல்களை நமது ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட் நேயர்களுக்காக பிரத்யேகமாக வி கனெக்ட் லாக்டவுன் பேட்டியில் ஜூம் வீடியோ கால் மூலமாக கொடுத்துள்ளார் நீலிமா ராணி.
சின்னத்திரையில் மட்டுமின்றி, உலக நாயகன் கமல்ஹாசன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மேலும், பிரசாந்தின் விரும்புகிறேன், அருண் விஜய்யின் பாண்டவர் பூமி, கார்த்தி நடிப்பில் வெளியான நான் மகான் அல்ல உள்பட பல படங்களிலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் வித்தியாசமான போட்டோஷுட் நடத்தி சமூக வலைதளத்தில் வெளியிட்டு வைரலாக்கிய நீலிமா ராணி, இந்த லாக்டவுனில் தான் கற்றுக் கொண்ட விஷயங்கள் குறித்தும், அடுத்து சினிமாவில் என்ன என்ன விஷயங்களை செய்யப் போகிறேன் என்ற எதிர்கால திட்டங்கள் வரை பல விஷயங்களை ஷேர் செய்துள்ளதை வீடியோவில் கண்டு ரசிக்க, லிங்க்கை கிளிக் செய்யுங்க..


Click it and Unblock the Notifications











