ரஜினி அங்கிள் தோள் மேல ஏறி நிற்க பயந்தேன்.. ராஜா சின்ன ரோஜா நடிகை ராகவி சசிகுமார் கலகல பேட்டி!
சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தோள் மேல ஏறி நிற்க பயந்தேன் என பிரபல சின்னத்திரை நடிகை ராகவி சசிகுமார் கொடுத்துள்ள சுவாரஸ்ய பேட்டி வைரலாகி வருகிறது.
ரஜினிகாந்தின் ராஜா சின்ன ரோஜா படத்தில் நடிகை ஷாலினியின் அக்கா கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ராகவி சசிகுமார்.
பள்ளிக்கு சென்று கொண்டிருக்கும் போது, தனக்கு அந்த பட வாய்ப்பு வந்ததாகவும், முதலில் பெற்றோர்கள் மறுத்து, பின்னர், இயக்குநர் முத்துராமனின் கோரிக்கை ஏற்று நடிக்க வைத்தனர் என்றும் இந்த பேட்டியில் ஏகப்பட்ட மலரும் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

நண்பர்களோடு சேர்ந்து கொண்டு மதுவுக்கு அடிமையாகும் காட்சியில், தன்னை மீட்கும் அங்கிள் ரஜினி, அவரது தோளில் என்னை ஏற்றி செல்வது போல காட்சி அமைக்கப்பட்டு இருக்கும்.
நான் அப்பவே நல்லா புசு புசுன்னு குண்டா இருப்பேன். நான் ஓவர் வெயிட் அங்கிள் உங்க தோள் தாங்காது என்றேன்.
ஆனால், நீ ஏறும்மா, நான் தாங்கிக்கிறேன் என சொல்லி அந்த காட்சியில் நடித்துக் கொடுத்தார்.
மேலும், போதைப் பொருள் பயன்படுத்துவது போல ஒரு சீனிலும் அந்த வளரும் குழந்தை இடம் பெறக் கூடாது என்றும் ஸ்ட்ரிக்ட்டா ரஜினி அங்கிள் சொன்னார் என்றும் இந்த பேட்டியில் கூறியுள்ளார்.
அந்த படத்தில் இருந்தே ஷாலினியின் தோழியாக இருக்கும், ராகவி, ஷாலினி குறித்தும், நடிகர் அஜித்தின் நல்ல குணம் பற்றியும் தளபதி விஜய்யுடன் நடித்த அனுபவங்கள் என ஏகப்பட்ட த்ரோபேக் விஷயங்களை இந்த பேட்டியில் அடுக்கி உள்ளார்.
தந்துவிட்டேன் என்னை எனும் ஜி5 ஒரிஜினல் சீரிஸில் தற்போது நடித்து வரும் ராகவி சசிகுமார் அந்த புராஜெக்ட் பற்றியும் பேசியுள்ள பேட்டியை மறக்காம பாருங்க!


Click it and Unblock the Notifications











