தளபதி விஜய் மேல எனக்கு க்ரஸ்.. பொம்முகுட்டி அம்மாவுக்கு நாயகி கலகல!

சென்னை: பொம்முக்குட்டி அம்மாவுக்கு நாயகின் ரஷ்மிதா ரோஜாவின் கலக்கல் பேட்டி.

Recommended Video

Celebrity Cooking Challenge | Shanthanu KiKi | Roja | Self Quarantine

பொம்முகுட்டி அம்மாவுக்கு என்ற நாடகம் விஜய் தொலைகாட்சியில் அதிகபடியாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நாடகத்தில் மிக முக்கியமான கதாபாத்திரமான மீரா என்ற கதாபாத்திரத்தில் கன்னட நடிகையான ரஷ்மிதா ரோஜா நடித்து வருகிறார். இவர் கன்னட மொழியில் நான்கு படங்களில் நடித்தவர். தமிழில் இவர் பொம்முகுட்டி அம்மாவுக்கு என்ற நாடகத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார்.

Serial actress Rashmitha roja interview

இவர் கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் போது ,தினமும் கல்லூரி செல்லும் வழியில் இருக்கும் ஒரு உள்ளூர் தொலைகாட்சியில் தொகுப்பாளராக ஆகும் வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் பெங்களூர் வந்து அதன்பின் பெரிய தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்தார். அங்கு இவரை கண்ட பலரும் நீங்கள் நடிக்க செல்லலாம் என கூற அப்போதிலிருந்து நடிகையானதாக கூறினார் ரஷ்மிதா ரோஜா .

பொம்முகுட்டி அம்மா நாடகத்தில் மீரா கதாபாத்திரம் அடிக்கடி கண்ணீர் வடிக்கும் கதாபாத்திரம். ஆனால் நிஜத்தில் அதற்கு நேர் எதிரான குணம் கொண்டவள் நான் என்று கூறியுள்ளார் ரஷ்மிதா. மேலும் எனக்கு குழந்தை பெற்ற அம்மா உணர்வு என்றால் என்னவென்று கூட தெரியாது ஆனால் நாடகத்தில் நான் அம்மாவாக நடித்து வருகிறேன். இது ஆரம்பத்தில் மிகவும் கடினமாக இருந்தது தற்போது பரவாயில்லை என்று கூறியுள்ளார் ரஷ்மிதா .

இந்த நாடகத்தை பிரபல நாடக இயக்குனரான பிரவீண் இயக்கி வருகிறார். இவர் இதற்கு முன் சரவணன் மீனாட்சி, ராஜா ராணி மற்றும் பாரதி கண்ணம்மா போன்ற பல வெற்றி நாடகங்களை இயக்கியவர். இவரை பற்றி கூறிய ரஷ்மிதா இவர் மிகவும் அமைதியான மற்றும் பெருமையானவர் எந்த இடத்திலும் கோபம் கொள்ளாமல் அமைதியாக படப்பிடிப்பு தளத்தில் இருப்பார் என கூறியுள்ளார்.

Serial actress Rashmitha roja interview

ரஷ்மிதாவிற்கு தளபதி விஜய் என்றால் மிகவும் பிடிக்குமாம், சிறு வயதில் இருந்தே விஜய் மேல எனக்கு க்ரஸ் என்று கூறியுள்ளார் ரஷ்மிதா. தற்போது எனக்கு விஜய் சேதுபதி மிகவும் பிடித்துள்ளது. அவரின் நடிப்பு அவரின் தன்மை எல்லாவற்றையும் நான் மிகவும் ரசித்து வருகிறேன் என்று கூறினார்.

Serial actress Rashmitha roja interview

ரஷ்மிதா கன்னடத்தில் மானா மச்சிடு பங்காரு என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். பின் ஶ்ரீசாய், எனென்டு ஹேசரிடலி மற்றும் பில்கேட்ஸ் என்ற படங்களில் நடித்திருப்பார். தற்போது தமிழ் நாடகத்தில் நடித்து வரும் ரஷ்மிதா ரோஜா தமிழ் படங்களிலும் நடிக்க வேண்டும் என தனது ஆசையை தெரிவித்து இருக்கிறார்.

More from Filmibeat

Read more about: vijay serial தொடர்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X