ஸ்ருதி நாராயணனின் விவகாரமான வீடியோ.. பின்னால் இருக்கும் 4 பேர்.. நடிகை சொன்ன பகிர் தகவல்!

சென்னை: சிறகடிக்க ஆசை சீரியலில் வித்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஸ்ருதி நாராயணனின் அந்தரங்க வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் புயலை கிளம்பியது. அது உண்மையான வீடியோ இல்லை என்றும், ஏஐ மூலமாக உருவாக்கப்பட்ட போலியான வீடியோ என்று ஸ்ருதி நாராயணன் இன்ஸ்டாகிராமில் விளக்கம் அளித்திருந்தார். இதுகுறித்து சீரியல் நடிகை ரிஹானா யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், சிறகடிக்க ஆசை சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலையில் இருக்கிறது, அதுல நடிக்கிறவங்கல யாராவது ஒருத்தவங்கள டார்கெட் பண்ணி எடுத்தா அது வைரல் ஆகும். இப்ப சாதாரணமா ஒரு பொண்ண பத்தி பேசினா எத்தனை நாள் பேசுவீங்க, இல்ல அது வைரல் ஆகுமா? நியூஸ்ல வருமா? அதை தள்ளிவிட்டு போய்ட மாட்டீங்களா.. ஒரு நல்ல விஷயங்கள் ஏதாவது வைரல் ஆகுதா? கும்பமேளாவில் ஒரு பெண் ரொம்ப வைரலானா பாத்தீங்களா... அந்த பெண்ணுக்கு சினிமா வாய்ப்பு கொடுப்பதாக சொன்ன நபர், தற்போது பாலியல் புகாரில் சிக்கி கைதாகி இருக்கிறார். அப்போ அந்த பெண்ணோட நிலைமை என்ன ஆச்சு. அந்த பெண் பாவம், மணி வித்துக்கிட்டு பொழச்சிக்கிட்டு இருந்தது. அந்த பெண்ணுக்கு ஆசை காமிச்சு இழுத்து விட்டீர்களா? அந்த பெண்ணுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்து இருந்தா பரவாயில்லை. நல்லபடியா அது பொழச்சி இருந்தா பரவால்ல.

shruthi narayanan siragadikka aasai Reehana

நடிகை ரிஹானா: நல்லா படிச்ச பொண்ணுங்களே இன்னைக்கு மெச்சூரிட்டி இல்லாம இருக்காங்க, ஃபோன் ஒன்னு வச்சுக்கறாங்க அந்த ஃபோன்ல என்ன எல்லாம் பண்ண கூடாதோ, எல்லாம் அக்கிரமமும் பண்றாங்க அவங்களுக்கு புரிய வேண்டாமா? அது ஃபோன், என்னைக்குனாலும் கண்காணிப்பு இருக்கும், அது நம்ப ஃபோனாக இருந்தாலும், அதுல ஓடுற விஷயங்கள் எல்லாமே ஒருத்தவங்க நம்மள கண்காணிச்சிட்டு இருக்காங்க என்கிற ஒரு விஷயம் நமக்கு தோன்ற வேண்டும். படிச்ச பொண்ணுங்களுக்கு அது தோண மாட்டேங்குது. பாய் பிரண்ட் கேட்கிறான் என்று, ஏடாகூடமா வித்தவுட்டா அனுப்ப வேண்டியது. பின் பிரேக் அப் டைம்ல அவன் அதை வெளியில் சொல்லிவிடுவானோ என பயப்பட வேண்டியது. ஏன் அப்படி அனுப்பனும், கடைசியில் அவன் கிட்ட மாட்டிக்கிட்டு அவஸ்தைப்பட வேண்டும்.

கும்பமேளா மோனாலிசா, மணி வித்துக்கிட்டு இருந்த வாழ்க்கை சொர்க்கமாக இருந்து இருக்கும். ஆனால், அந்த பொண்ணுக்கு லட்ச கணக்கில் செலவு செய்து, நெக்லஸ் அது இதுனு மாட்டிவிட்டு, கடைத்திறப்புனு, சினிமானு அந்த பெண்ணை பிரபலமாக்கி விட்டார்கள். இப்போ, அந்த பொண்ணுக்கும் இந்த வாழ்க்கை மேல ஒரு ஆசை வந்து இருக்கும். இதனால், இந்த வாழ்க்கையை தக்க வைக்க எந்த எக்ஸ்ட்ரீம் வெலுக்கும் போய், நம்ப குடும்பத்தை காப்பாற்றிவிடலாம் என்கிற எண்ணம் வந்து இருக்கும்.

shruthi narayanan siragadikka aasai Reehana

அவன் ஒரு ஆம்பளையா: ஸ்ருதி நாராயணனின் வீடியோ லீக் ஆகும் வரை ஸ்ருதி யார் என்று பலருக்கும் தெரியாது. ஆனால் இன்றைக்கு ஸ்ருதி நாராயணன் யார் என்று அனைவருக்கும் தெரிகிறது. ஒரு சில பேர், விளம்பரத்திற்காக ஸ்ருதி நாராயணன் செய்த வேலை என்றும், அந்த பொண்ணுக்கு தெரியாமல் இந்த வீடியோ வெளியே வந்து இருக்காது என்ற சிலர் பேசுகிறார்கள். அது எப்படி, ஒரு பெண் மானத்தை வித்து அப்படி ஒரு வீடியோ போடுவாளா.. அப்படியே வித்தாலும் உலகமே அவ உடம்ப பாக்குற மாதிரி செய்வாளா.. அப்படியே அவ செய்து இருந்தாலும், நான்கு செவுத்துக்குள்தானே பண்ணுவாங்க, உலகமே பார்க்கிற மாதிரி ஒரு பொண் பண்ணுவாளா? அந்த அளவுக்கு மோசமா போயிடுச்சா பெண்களோட மானம், மரியாதை எல்லாமே. இப்படி மனசாட்சியே இல்லாம வீடியோவை வெளியிட்டானே அந்த ஆளு, அவனை யாராவது கேள்வி கேட்டீங்களா? அந்த ஆளை இதுவரைக்கும் பிடிக்க முடியல, அவனை பிடிச்சி சரியான தண்டனை கொடுத்தாத்தான் இனிவரும் காலத்தில் இதுபோன்று எதுவும் நடக்காது. ஸ்ருதி அந்த வீடியோ AIனு சொல்லி இருக்கிறாள். அது AI வீடியோவாக இல்லாமல்கூட இருக்கட்டும், ஒரு ஆணை நம்பி காட்டிய பிறகு எப்படி அவன் அந்த வீடியோவை வெளியிட்டான். அவன் எல்லாம் ஒரு ஆம்பளையா?

shruthi narayanan siragadikka aasai Reehana

முக்கிய புள்ளி: இதே போலத்தான் நடிகை சித்ராவிற்கும் நடந்தது, கடைசியில் அதை தற்கொலை என்று சொல்லி விட்டார்கள். இதெல்லாம் நான் சொல்வதற்கு முக்கிய காரணம், பொண்ணுங்கள் தான் ஜாக்கிரதையாக இருக்கணும், ஆடை சுதந்திரம் என்று சொல்லிக்கொண்டு, அவுத்து போட்டு நடப்பேன், நான் வெளியே தொடையை காண்பிப்பேன். ஆனா, எவனும் என்னை பார்க்க கூடாது, சீண்டக்கூடாது, என்னை கிண்டல் பண்ணக்கூடாது. ஏன்னா இது சுதந்திர நாடு இதுல வந்து பெண்கள் எது வேணாலும் பண்ணலாம், சரிக்கு சமம் என்று, வாய்வுக்கு வந்தபடி பேசுவது சரியில்லை. இது உங்களை மட்டும் பாதிக்காது உங்க குடும்பத்தையும் பாதிக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். சித்ராவின் மரணத்தின் போது, அவரது கணவர் ஹேமந்த் அளித்த பேட்டியில் பல விஷயங்களை கூறி இருந்தார். அதாவது, இதைப்பற்றி நான் வெளியில் சொன்னால் என்னுடைய உயிருக்கு ஆபத்து, இதற்கு பின்னால் நான்கு பேர் இருக்கிறார்கள். அதை நான் தைரியமாக சொல்ல வேண்டும் என்றால் எனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று சொன்னவர் கடைசியில் மாற்றிப் பேசினார். இதில் பாதிப்பு யாருக்கு, இப்போது, சித்ராவின் குடும்பம் தான் ஒப்பாரி வைத்துக்கொண்டு கஷ்டத்தில் இருக்கிறார்கள். இதுக்காகத்தான் நான் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்கிறேன்.

மோசமான கமெண்ட்: ஸ்ருதி நாராயணனின் வீடியோவை பார்த்த பலர், அவரை மோசமான வகையில் கமெண்ட் அடித்து வருகின்றனர். உண்மையில் அந்த பெண் தைரியமாக இருப்பது போல, இன்ஸ்டாகிராமில் ஸ்டேட்டஸ் போடுகிறாள். ஆனால், உண்மையில் அவளது மனம் உள்ளுக்குள் எந்த அளவு பாதிக்கப்பட்டிருக்கும் என்பதை அனுபவித்தால் மட்டும்தான் தெரியும். இதுபோன்ற கமெண்ட் செய்பவர்களின் நிர்வாண வீடியோ வெளியே வரும்போது தான் மற்றவர்களின் வலியும், வேதனையும் புரியும் என்று நடிகை ரிஹானா அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

24 வயதே ஆன நடிகை ஸ்ருதி நாராயணனுக்கு தி நகரில் உள்ள தனியார் கல்லூரியில் விசுவல் கம்யூனிகேஷன்ஸ் பட்டம் பெற்றுள்ளார். கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்தபோதே, யூ டியூப் சேனல்களில் ஸ்ருதிக்கு நடிக்கும் வா்ய்ப்பு வந்தது. அதன் பின் தனியார் தொலைக்காட்சி ஒன்றில், 2021ம் ஆண்டு நிகழ்ச்சித் தயாரிப்பாளராக பயிற்சி பெற்றார். தனது கல்லூரி படிப்பை முடித்தவுடன் 2022ம் ஆண்டு கலைஞர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பு உதவியாளராக பணியில் சேர்ந்துள்ளார். அங்கு, தான் அவருக்கு நிகழ்ச்சித் தொகுத்து வழங்க வாய்ப்பு கிடைத்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X