சூர்யா, ஜோதிகாவை பிரிங்க .. விஜயகாந்திடம் உதவி கேட்ட சிவக்குமார்.. தினமும் டார்ச்சர்.. பிரபலம்!

சென்னை: நடிகர் சிவகுமாருக்கு சொந்தமாக தி நகரில் பிரம்மாண்டமான வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டில்தான் சிவகுமார் - லட்சுமி, சூர்யா - ஜோதிகா, கார்த்தி - ரஞ்சினி என கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தனர். இடையில் ஜோதிகா மும்பை சென்றுவிட்டதால், குடும்பத்திற்குள் குழப்பம் என்று பேச்சு எழுந்தது. தற்போது, சூர்யா தனது மனைவி ஜோதிகாவிற்காக பிரம்மாண்டமான வீடு ஒன்றை கட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பேசிய பத்திரிக்கையாளர் ஷபிதா ஜோசப் Realone Media யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளர்.

அதில் சூர்யா, ஜோதிகா திருமணம் செய்து கொண்டு கூட்டுக் குடும்பமாக கொஞ்ச காலம் தான் இருந்தார்கள். ஏன் என்றால், சிவக்குமார் வீடு சிறியதாக இருக்கும். கார்த்திக் தனது மனைவியுடன் அங்கு தான் இருக்கிறார். இந்த வீட்டில் மூன்று குடும்பங்கள் வாழ்வதற்கு வசதி இல்லை. இதனால், சூர்யா, ஜோதிகாவை காதலித்துக்கொண்டு இருக்கும் போதே, அடையாரில் ஒரு வீட்டை பார்த்து பார்த்து கட்டினார். அந்த வீட்டில் தான் சூர்யாவிற்கு திருமணமாகி குழந்தை பிறந்ததும் சென்றுவிட்டார்கள். அந்த வீட்டில் சிவக்குமாரும் சென்று தனது பேரன், பேத்தியுடன் இருந்தார். சிவக்குமார் எப்போதும் கண்டிப்புடன் இருக்கக்கூடியவர். சொன்னால், சொன்ன நேரத்திற்கு அந்த இடத்திற்கு சென்றுவிட வேண்டும் என நினைக்கக்கூடியவர்.

sivakumar jyothika suriya
Photo Credit:

பிரிக்க சொன்னார்: சிவக்குமார் திரைப்படங்களில் நடித்த போது, பல நடிகைகள் இவரை காதலித்தார்கள், ஆனால், இவர் யாரையும் காதலிக்காமல், தன்னுடைய சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தற்போது வரை இருவரும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறார்கள். இதே போல தனது மகன் சூர்யாவிற்கும் தன்னுடைய சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து வைக்க வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால், சூர்யாவும் ஜோதிகாவும் முதல் படத்தில் சேர்ந்த நடித்த போதே காதல் வயப்பட்டு விட்டனர். அது வெளியில் தெரியாமல் இருந்தது. பின், பத்திரிக்கைகளில் இவர்களின் காதல் விஷயம் கசிய ஆரம்பித்தது. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட சிவக்குமார், நடிகை வேண்டாம், நம்ம சமுகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொள் என பல வகையில் பேசி இருக்கிறார். ஆனால், சூர்யா திருமண விஷயத்தில் பிடிவாதமாக இருந்தார்.

கேப்டனிடம் உதவி: இந்த நேரத்தில் தான் அப்போது நடிகர் சங்கத்தில் தலைவராக இருந்த விஜயகாந்தை சந்தித்து, சூர்யாவையும், ஜோதிகாவையும் எப்படியாவது பிரிங்க கேப்டன். விஷயம் தெரிந்து இப்படி இருந்தால் என்ன அர்த்தம், சூர்யா, ஜோதிகாவை காதலிப்பது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என விஜயகாந்தை சந்தித்து உதவி கேட்டு இருக்கிறார். இப்படி பல வழியில் சூர்யா, ஜோதிவை பிரிப்பதற்கு சிவக்குமார் முயற்சி செய்தார். சூர்யா பிடிவாதமாக இருந்ததால், வேறு வழியே இல்லாமல் தான் திருமணம் செய்து வைத்தார். திருமணத்திற்கு பின், சிவக்குமாரை நான் சந்தித்து பேசிய போது, ஜோதிகா நல்ல மருமகள் என்று பாராட்டினார்.

சின்ன சின்ன சண்டை: அதன்பின் தான் ஜோதிகா, தன்னுடைய குடும்பத்திற்கான மும்பை சென்றார், அங்கு தனது கணவருக்காக வாய்ப்பு தேடிய போது, ஜோதிகாவிற்கு வாய்ப்பு வந்து அடுத்தடுத்த படத்தில் நடித்தார். பாலிவுட் போனதும் ஜோதிகாவின் உடை கவர்ச்சியானதால், பத்திரிக்கைகளில் தாறுமாறாக எழுத ஆரம்பித்துவிட்டார்கள். இதனால், சிவக்குமார் சூர்யாவை அழைத்து கடுமையாக திட்டி இருக்கிறார். இப்படி குடும்பத்திற்குள் சின்ன சின்ன சண்டைகள் வரத்தான் செய்யும். ஆனால், குடும்பம் மொத்தமாக பிரிய வில்லை. அடையாரில் இருக்கும் சூர்யா வீட்டின் அருகே மொட்ரோ வேலைகள் நடந்து வருவதால், வெளியில் சென்று வருவது சிரமமாக இருக்கு என்பதற்காக, சென்னை வந்து ஈசிஆரில் பங்களா வாங்கி குடியேற முடிவு செய்து இருக்கலாம் என்று ஷபிதா ஜோசப் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X