»   »  சர்க்கிள் ரவுடி ஷகீலா

சர்க்கிள் ரவுடி ஷகீலா

Subscribe to Oneindia Tamil

மலையாள ரசிகர்களின் மனங்களை மதமதக்க வைத்த மன்மத ராணி ஷகீலா இப்போது அங்கிருந்து நாடு கடத்தப்பட்டு கோலிவுட்டை மையமாகக் கொண்டு கன்னடத்தில் குண்டக்க மண்டக்க கலக்க கிளம்பியிருக்கிறார்.

தியேட்டர்காரர்களுக்கு சொர்க்க ராணியாக திகழ்ந்தவர் ஷகீலா. மம்முட்டியும், மோகன்லாலும் கஷ்டப்பட்டு வசனம் பேசி நடித்த படங்கள் எல்லாம் தியேட்டரை விட்டு ஓடிக் கொண்டிருந்த காலம் அது. காரணம், ஷகீலாவின் படங்கள் சத்தம் போடாமல் ஜல்சாவாக ஓடியதால்.

உடல் அசைவும், உதட்டுச் சுழிப்பும் மட்டுமே பிரதானமாகக் கொண்டு வந்த ஷகீலாவின் படங்களில், அவரது திறம்பட்ட நடிப்பைப் பார்த்து மலையாள ரசிகர்கள் மட்டுமல்லாது தென்னிந்திய இளசுகள் வட்டாரமே கலகலத்துப் ேபாய்க் கிடந்தது.

இப்படியே விட்டால் நம்ம பொழப்பு அவ்வளவுதான் என்று சுதாரித்துக் கொண்ட மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர்கள் கொடுத்த பிரஷரால் அங்கிருந்து கிளம்பி ஒருவழியாக சென்னைக்கு வந்து சேர்ந்தார் ஷகீலா.

இங்கு வந்தவர் தமிழ்ப் படங்களில் தலையை (மட்டும்) காட்டி வருகிறார். இப்போது கன்னடத்திற்கு கிளம்பியுள்ளார். அங்கு அவரது பழைய படங்களை தூசு தட்டி திரையிடப் போக ஏகப்பட்ட வரவேற்பாம். இதனால் ஷகீலாவை வைத்து சூப்பர் படம் ஒன்றைத் தயாரித்து வருகிறார்கள்.

சர்க்கிள் ரவுடி என்பது ஷகீலா நடிக்கும் கன்னடப் படத்தின் பெயர். ஆனால் இதில் பெரிய அளவில் கிளாமராக நடிக்கவில்லையாம் ஷகீலா. இருந்தாலும் இளசுளுக்கு ஏமாற்றம் தரும் வகையில் சைவமாக இருக்காதாம்.

முன்பு மாதிரி ஷகீலா பலான படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதில்லையாம். எல்லாவற்றையும் குறைத்துக் கொண்டு விட்டாராம். வர வர இறை பக்தி ஜாஸ்தியாகிக் கொண்டே வருகிறதாம் (சாமி படங்களில் நடித்ததாலோ என்னவோ).

நான் நடிக்கும் படங்கள் இனிமேல் சென்சாரில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்படாது, அந்த அளவுக்கு இனிமேல் அடக்கி வாசிக்கப் போகிறேன். செக்ஸியான ரோலிலும் இனிமேல் நடிக்கப் போவதில்லை என்கிறார் ஷகீலா.

முடிவை மறு பரிசீலனை பண்ணுங்க மேடம்!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil