காசுக்காக அதுல நடிக்கலாமா? கிரணுக்கு பாடம் எடுத்த ஷகீலா.. விழுந்து விழுந்து சிரிக்கும் ஃபேன்ஸ்

சென்னை: சியான் விக்ரம் நடித்து 2002ம் ஆண்டு வெளியான ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை கிரண். முதல் படமே வேறலெவல் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில், அடுத்து அஜித்துக்கு ஹீரோயினாக வில்லன் படத்தில் நடித்தார். அந்த படமும் ஹிட்டான நிலையில், சுந்தர். சி இயக்கத்தில் உலக நாயகன் நடித்த அன்பே சிவம் படத்தில் நடித்தார் கிரண்.

அதன் பின்னர் அவர் நடித்த படங்கள் அவருக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. மீண்டும் சுந்தர். சி இயக்கத்தில் வெளியான வின்னர் படத்தில் கவர்ச்சியாக நீச்சல் உடையில் நடித்த கிரண் அதற்கு பிறகு பட வாய்ப்புகள் போன நிலையில், தொடர்ந்து கிளாமர் ரூட்டில் பயணித்தார்.

Shakeela asks Kiran why you acted worst in Ilamai Oonjal movie gets trolled

விஜய்யுடன் முதல் ஐட்டம் சாங்: அஜித்துக்கு ஹீரோயினாக நடித்த கிரண் தளபதி விஜய் நடித்த திருமலை படத்தில் “வாடியம்மா ஜக்கம்மா” எனும் பாட்டுக்கு முதன்முறையாக ஐட்டம் டான்ஸராக மாறியிருந்தார். முதலில் அந்த பாட்டுக்கு ஆட மாட்டேன் என தான் மறுத்ததாகவும் விஜய் படம், சூப்பர் ஹிட் பாடல் என்று கன்வின்ஸ் பண்ணவே நான் நடித்தேன் எனக் கூறினார். பிரபல யூடியூப் சேனலுக்காக கிரணை பேட்டியெடுத்த ஷகீலா இன்று வரை அது சூப்பர் ஹிட் சாங் தான் என பாராட்டினார்.

ஆப் மூலம் பணம் சம்பாதிக்கிறேன்: கிரண் பெயரில் பலான ஆப் ஒன்று உள்ளது என்றும் அதன் மூலம் அவர் நிறைய பணம் சம்பாதித்து வருகிறார் என்றும் வீடியோ சாட்டுக்கு ஒரு ரேட், போட்டோக்களுக்கு ஒரு ரேட் என வசூல் செய்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், கொரோனா லாக்டவுனில் சம்பாதிக்கத்தான் அந்த செயலியை ஆரம்பித்தேன். பாலிவுட்டில் நடிகர்கள், நடிகைகள் எல்லாம் அது போல ஆப்களை வைத்து ரசிகர்களுடன் உரையாடி வருவது சாதாரண விஷயம் தான் எனக்கூறியுள்ளார்.

இளமை ஊஞ்சல் படத்துல ஏன் நடிச்ச?: 2016ம் ஆண்டு வெளியான இளமை ஊஞ்சல் படத்துல ஏன் அவ்ளோ மோசமா நடிச்ச என ஷகீலா கிரணை பார்த்து அந்த பேட்டியில் கேட்கிறார். அந்த படத்துல நடிக்க நிறைய பணம் கொடுத்தாங்க, மேலும், நமீதா நடிச்சிருந்தார். நாங்க மொத்தம் 5 ஹீரோயின் நடிச்சதால ஒரு கேர்ள்ஸ் ட்ரிப்பாக இருந்தது என கிரண் விளக்கம் அளித்துள்ளார்.

நெட்டிசன்கள் கலாய்: ஷகீலா நடிச்ச படங்கள் அளவுக்கு இளமை ஊஞ்சல் படம் மோசமாக இருக்காது என அந்த பேட்டிக்கு கீழ் நெட்டிசன்கள் ஷகீலா கிரணை அட்டாக் செய்வது போலவும் அழ வைக்கும் நோக்கத்தில் கேள்வி கேட்பதையும் பார்த்து திட்டித் தீர்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X