Shakila: ஓங்கி அறைந்த ஷகிலா.. கதவைத் தட்டிய குடிகாரனுடன் சண்டை.. எல்லாம் அந்த நடிகைக்காகவா?
சென்னை: நடிகை ஷகிலா தென்னிந்திய சினிமாவில் மிகவும் முக்கியமான நடிகை. தனது பள்ளிப் பருவத்தில் இருந்தே நடித்து வரும் ஷகிலா, ஒரு கட்டத்திற்குப் பின்னர் முழுக்க முழுக்க கிளாமர் நடிகையாக அறியப்பட்டவர். இவர் தனது சமீபகால பேட்டிகளில் தெரிவித்து வரும் பல தகவல்கள் பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்து வருகிறது. அந்த வகையில் ஷகிலா சமீபத்தில் பகிர்ந்து கொண்ட தகவல் பலருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.
அதாவது அவர் தற்போது நடிகை ரூபா ஸ்ரீ குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார். ரூபா ஸ்ரீ தற்போது தமிழ் மற்றும் மலையாள சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தமிழில் இவர் பாரதி கண்ணம்மா, சித்தி, அண்ணாமலை, சந்திரலேகா உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். அதிகமாக இவர் மாமியார் கதாபாத்திரங்களில் நடித்துள்ளதால் சீரியல் ரசிகர்கள் பலரது அபிமான மாமியார் இவர் தான்.

ஆனால் இவர் திரைத்துறையில் இருந்த காலத்தில் இவருக்கு நடந்த பகீர் சம்பவம் குறித்து நடிகை ஷகிலா பகிர்ந்து கொண்டுள்ளார். அதாவது, ஷகிலா தனது பேட்டியில் கூறுகையில், " நான் நடித்த படத்தில் நடிகை ரூப ஸ்ரீ கதாநாயகியாக நடித்து கொண்டு இருக்கிறார். அப்போது எனது அறைக்கு எதிராகத்தான் அவருக்கு அறை ஒதுக்கப்பட்டது. இப்படி இருக்கையில் ஒரு நான்கு பேர் நன்றாக குடித்துவிட்டு அவரது அறைக் கதவைத் தட்டுகிறார்கள். மிகவும் மோசமாகவும் சத்தமாகவும் பேசி அவரது அறைக் கதவை தட்டுகிறார்கள்.
ரூப ஸ்ரீக்கு என்ன செய்வது என்று தெரியாமல் அழுது கொண்டு இருந்தார். நானும் எனது தம்பியும் சத்தம் கேட்டு வெளியே சென்று பார்த்தால், நான்கு பேர் நன்றாக குடித்துவிட்டு ரகளை செய்து கொண்டு இருக்கிறார்கள். இங்கு சத்தம் போடக்கூடாது, இங்கிருந்து வெளியேறுங்கள் என்று நாங்கள் சொன்னதற்கு எங்களுக்கு இடையில் பிரச்னை ஏற்பட்டு விட்டது. அதுவும் அதில் ஒருவன் என்னை அடிக்க, நான் அவனை அடிக்க பெரிய பிரச்னையே ஏற்பட்டுவிட்டது" என்று கூறியுள்ளார்.

ஷகிலா பகிர்ந்து கொண்டுள்ள இந்த தகவல் பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது. அதுவும் நடிகைகளுக்கு பல ஆண்டுகளாகவே படப்பிடிப்புத் தளத்தில் பாதுகாப்பற்ற சூழல் இருந்து வந்துள்ளது என்று பலரும் வருத்தத்துடன் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











