விஜய், த்ரிஷா நல்ல நண்பர்கள்.. நட்பை இப்படி கொச்சை படுத்துறீங்க.. கொந்தளித்த ஷகிலா!

சென்னை: நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா நட்பை குறித்து எழும் தேவையற்ற விமர்சனங்களுக்கு நடிகை ஷகிலா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். "ஆண்-பெண் நல்ல நண்பர்களாக இருக்கக் கூடாதா? ஒரு நல்ல நட்பை ஏன் கொச்சைப்படுத்த வேண்டும்?" என கேள்வி எழுப்பிய அவர், விஜய்-த்ரிஷா நட்பை விமர்சிப்பது தவறானது என்று ஆவேசமாக பேசியுள்ளார்.

IndiaGlitz Tamil யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசிய ஷகிலா, விஜய்க்கு எதிராக பல்வேறு தடைகள் வந்தது. மற்றவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட பல விஷயங்கள் அவருக்கு மறுக்கப்பட்டது, ஒரு மனுஷனை எவ்வளவு கஷ்டப்படுத்துவீங்க, இதைப் பார்த்தபோது, தான் "பதவி இருந்தால்தான் மக்களுக்கு சேவை செய்ய முடியுமா? பதவியில் இல்லாமலேயே நல்லது செய்ய முடியாதா?" என்ற கேள்வி எழுந்ததாக அவர் தெரிவித்தார்.

Vijay Trisha Shakeela

நடிகை ஷகிலா: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், தனது நிலையை விட்டும் மக்களுக்காக வர முயற்சிப்பது சிறிய விஷயம் அல்ல. "இங்கே யார் உத்தமர்கள்? எத்தனை பேர் ராமர் மாதிரி இருக்கிறார்கள்?" என்று கேள்வி எழுப்பிய அவர், நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை வைத்து அவர்களை மதிப்பிடுவது தவறானது. விஜய்-த்ரிஷா நட்பு குறித்து பரவி வரும் விமர்சனங்களை கண்டித்த ஷகிலா, "அவர்கள் நல்ல நண்பர்களாக இருக்கக்கூடாதா? ஒரு திருமணத்திற்கு ஒரே மாதிரி உடை அணிந்து செல்வதில் என்ன தவறு? ஆண்-பெண் நட்பு இருக்கக் கூடாதா? நாம் இன்னும் எந்த காலத்தில் இருக்கிறோம்? ஒரு நல்ல நட்பை தேவையின்றி கொச்சைப்படுத்த வேண்டாம் என்றும் ஷகிலா வலியுறுத்தினார்.

தேவையில்லாதது: மேலும், நடிகர்களின் குடும்ப வாழ்க்கையை பற்றி பேசுவது தேவையில்லாதது, மனைவி, குழந்தைகளை பார்க்காதவர் எப்படி நாட்டையும், நாட்டு மக்களையும் பார்ப்பார் என்று கேட்பது தேவையில்லாதது. கமல் அரசியலுக்கு வந்த போதும் இப்படித்தான் விமர்சனம் வந்தது. அவர்கள் குடும்பத்தை அவர்கள் பார்க்கிறார்கள், பார்க்கவில்லை என்பது தேவையற்றது. "அவர்களின் வீடு, குடும்பம் அவர்களுடைய விஷயம். அவர்கள் நாட்டிற்காக என்ன செய்யப் போகிறார்கள் என்பதை மட்டுமே பார்க்க வேண்டும் என ஷகிலா அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X