ஷகீலாவின் நோவுகள்

By Staff
ஷகீலா கொஞ்சம் கவலை, கொஞ்சம் மகிழ்ச்சி என்று கலவையாக இருக்கிறார். ஒரு காலத்தில் மலையாளிகள், தமிழர்கள்,தெலுங்கர்கள், கன்னடர்கள் என மொழி தாண்டி எல்லோரையும் கதி கலக்கி. ஷகீலா இப்போது மலையாளத்தில் பீல்ட் அவுட்.

அங்கு ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடிக்கிறார். அதிலும் கூட கேரக்டர் ரோல்தானாம்.

தமிழில் ஸாரி எனக்கு கல்யாணமாயிருச்சு உள்பட ஒரிரு படங்களில் தலைகாட்டி வரும் ஷகீலா இப்போதுகரையொதுங்கியிருப்பது தெலுங்குப் பக்கம்.

அங்கு பாட்டியாக நடித்தாலும் கவர்ச்சி காட்ட வேண்டும். ஷகீலாவும் அதே மாதிரி தான். கவர்ச்சி கலந்த கேரக்டர் ரோல்கள்செய்து கொண்டிருக்கிறார்.

அவரை சந்தித்தபோது, மனக் குறைகளை கொட்டித் தீர்த்துவிட்டார்.

எனக்கென்று குடும்பம் உள்ளது என்று யாருமே நினைக்க மாட்டேன் என்கிறார்கள். இன்னும் கூட நள்ளிரவில் போன் செய்துஆபாசமாக பேசுகிறார்கள். மனசே கனத்துப் போய் விடுகிறது. அதனால்தான் கொஞ்சம் கொஞ்சமாக கிளாமர் ரோல்களைஅவாய்ட் செய்து வருகிறேன்.

மலையாளப் படங்களில் நடிக்கப் போன புதிதில் அவர்கள் குறித்து ரொம்ப உயர்வாக நினைத்திருந்தேன். ஆனால் ரொம்பவும்குறுகிய மனம் படைத்தவர்கள் அவர்கள்.

படித்தவர்கள், அறிவாளிகள் என்று நினைத்துப் போனால் அவர்களை குறுகிய புத்தி உடையவர்கள் வேறு யாரும் இருக்கமுடியாது என்ற அளவுக்கு நினைக்க வைத்து விட்டார்கள், அந்த ஊர் சினிமாக்காரர்கள்.

அந்த அனுபவம் போதும். ஒரே ஒரு மலையாள படத்தில் இப்போது நடிக்கிறேன். இனிமேல் மலையாளப் படங்களில் நடிக்கவேபோவதில்லை.

இருந்தாலும் எனக்கு நிறைய மலையாளிகள் விசிறிகளாக உள்ளனர். சமீபத்தில்கூட துபாய்க்கு கலை நிகழ்ச்சி நடத்த எனதுதங்கையுடன் சென்றிருந்தேன். அங்கு பெருந்திரளாக வந்திருந்த மலையாள விசிறிகள், அன்பால் திக்குமுக்காடவைத்துவிட்டார்கள்.

சில்க் ஸ்மிதா கதை தெரியும்தானே. எப்படி வாழ்ந்தார், கடைசியில் அவருக்கு உதவ யாருமே இல்லாமல் போய் விட்டார்கள்.அதுதான் நடிகைகளின் நிலை, இருக்கும் வரை அத்தனை பேரும் விழுந்து கிடப்பார்கள். கஷ்டம் வந்தால் ஓடிப் போய்விடுவார்கள். அதனால் சினிமாவில் எனக்கு நண்பர்களே கிடையாது, அதை நான் விரும்பவும் இல்லை.

எனது வாழ்க்கை என் கையில். என்னை நம்பித்தான் நான் இருக்க வேண்டும். மற்றவர்களை நம்பினால் நம் கதி அதோ கதிதான்!

மற்ற எல்லாப் பெற்றோர்களும் நினைப்பது போல்தான் எனது அப்பாவும் என்னைப் படிக்க வைத்து பெரிய ஆளாக்க வேண்டும்என்று நினைத்தார். ஆனால் எனது விதி சினிமாவில் கொண்டு வந்து விட்டது. ஒரு வேளை நானும் படித்திருந்தால் மற்றபெண்களைப் போல வேலைக்குப் போய்க் கொண்டு, குடும்பம், குட்டி என்று சந்தோஷத்துடன் இருந்திருப்பேன் ...

எனக்கும் சில கனவுகள் இருந்தன, இருக்கின்றன. ஆனால் அவை நிறைவேறுமா என்று தெரியவில்லை என்றார் ஒரே மூச்சில்.

கவர்ச்சிக்குப் பின் இத்தனை கவலைகளா...

ஸாரி எனக்கு கல்யாணமாயிருச்சு படத்தில் ஸ்வணர்மால்யாவும் புளோராவும் காட்டி வரும் கவர்ச்சிக்கு மத்தியில் தனது கவர்ச்சிஎடுபடுமா என்பதே ஷகீலாவுக்கு சந்தேகமாக உள்ளது. இதில் ஷகீலாவுக்கு ஜோடி யார் தெரியுமா? ஸ்டண்ட் நடிகராகஅறிமுகமாகி இப்போது வடிவேலுவை கடித்து வைப்பது போன்ற நையாண்டி காரெக்டர் செய்து வரும் முத்துக்காளை தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X