அறிமுகப்படுத்தியவரையே ஏமாற்றிய அர்ஜுன்.. சண்டை போட்ட சாகுல் மாஸ்டர்.. ஓபன் பேட்டி!
சென்னை: ஆக்ஷன் கிங் அர்ஜுன் உடன் சண்டை போட்டதாக பிரபல சண்டை இயக்குநர் சாகுல் மாஸ்டர் வெளிப்படையாக பேசியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆகியுள்ளது. நடிகர் அர்ஜுனை தெலுங்கில் அறிமுகப்படுத்தியதே தான் தான் என்றும் சாகுல் மாஸ்டர் கூறியுள்ளார்.
டூப் கலைஞராக எம்ஜிஆர், சிவாஜி, ரஜினிகாந்த், சிரஞ்சீவி உள்ளிட்ட பல நடிகர்களுக்கு டூப் போட்டு தனது சினிமா வாழ்க்கையை தொடங்கியவர் சாகுல் மாஸ்டர். தூத்துக்குடியை சேர்ந்தவர் வேலை இடத்தில் சண்டை போட்டுக் கொண்டு ரவுடித்தனம் பண்ணி வந்த நிலையில் அவரது அம்மா அந்த ஊரில் இருந்த தாஸ் மாஸ்டரிடம் முறையிட அவரை சென்னைக்கு சினிமாவில் டூப் நடிகராக கொண்டு வந்தார் என்றார்.

நடிகர் அர்ஜுன் கன்னடத்தில் வெளியான 'சிம்ம ஹட மரி சைன்யா' படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழில் நன்றி படத்தின் மூலம் அறிமுகமானவர். தெலுங்கில் 'மா பல்லேலு கோபுலுடு' படத்தின் மூலம் அறிமுகமானார்.
அர்ஜுனை அறிமுகம் செய்தேன்: கன்னடத்தில் அர்ஜுன் படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வந்த சாகுல் மாஸ்டர் தெலுங்கில் அர்ஜுனை ஹீரோவாக தான் தான் அறிமுகம் செய்து வைத்ததாகவும் ஆரம்பத்தில் அந்த படம் ஃபிளாப் எனக் கூறப்பட்ட நிலையில், ரொம்பவே மனசு கஷ்டமாகிடுச்சு நாம ஒரு பையனை அறிமுகம் செய்து வைத்தோம். அந்த படம் ஃபிளாப் ஆகிடுச்சேன்னு ஃபீல் பண்ணேன். ஆனால், ஒரு வாரத்தில் அந்த படத்தின் தயாரிப்பாளர் போன் செய்து படம் சூப்பர் ஹிட் என சொன்னதும் ரொம்பவே சந்தோஷப்பட்டேன். தெலுங்கில் அர்ஜுன் நடித்த முதல் படமே 1 வருடம் ஓடியது என்றார்.
திறமையான நடிகர்: அர்ஜுன் அந்த காலத்தில் ஸ்டன்ட் காட்சிகளில் அப்படி நடிப்பார். ரொம்பவே திறமையானவர். நிறைய படங்களில் என்னை சண்டை பயிற்சி இயக்குநராக வைத்திருந்தார். ஆனால், ஒரு கட்டத்தில் அவருக்கும் எனக்கும் சண்டை முற்றியது. அதன் பின்னர் அவரிடம் பேசுவதையே நிறுத்தி விட்டேன் என அதிர்ச்சியளித்துள்ளார்.
எனக்கும் அர்ஜுனுக்கும் சண்டை: ஒரு படத்தில் தயாரிப்பாளர் எனக்கு அட்வான்ஸ் கொடுத்த பின்னர் அர்ஜுன் சூப்பர் சுப்புராயன் மாஸ்டரை ஒப்பந்தம் செய்ய வேண்டும் என சொல்ல தயாரிப்பாளர் தயங்கி தயங்கி வந்து என்னிடம் கேட்டு அட்வான்ஸை திருப்பி வாங்கிச் சென்றார். அப்போது பெரிதாக கண்டுக் கொள்ளவில்லை. அடுத்த ஒரு படத்திலும் இதே போல நடந்ததால் நேரடியாக அர்ஜுனிடம் சென்று சண்டை போட்டு விட்டேன். அதன் பின்னர் அவரிடம் பேசுவதையே தவிர்த்து விட்டேன் என்றார்.
கர்ணா தான் கடைசி படம்: அதன் பின்னரும் ஒரு தெலுங்கு படத்தில் தன்னை அந்த படத்தின் இயக்குநர் ஒப்பந்தம் செய்தார். என்னை பார்த்ததும் அர்ஜுன் வாங்க மாஸ்டர் என்றார். நான் தான் உங்களை ரெகமண்ட் பண்ணேன் என்றார். அந்த படத்தின் இயக்குநரை அழைத்து உண்மையா எனக் கேட்டேன். அப்போதும் பிரச்சனை வெடித்தது. அதன் பின்னர் பணியாற்றினோம். தமிழில் எனக்கு ஒரு படம் நீங்க பண்ணித் தரணும் என அர்ஜுன் கேட்டார். கர்ணா படத்திற்கு நான் தான் சண்டை இயக்குநர். அதன் பின்னர் இனிமேல் உங்களிடம் நான் பணியாற்ற விரும்பவில்லை என்றே சொல்லி விட்டு வந்து விட்டேன் என பேசியுள்ளார்.
அர்ஜுன் மகள் திருமணம்: நடிகர் அர்ஜுன் கடைசியாக லியோ படத்தில் நடித்திருந்தார். அஜித்துடன் விடாமுயற்சி படத்திலும் நடித்து வருகிறார். அவருடைய மகள் ஐஸ்வர்யாவுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ள நிலையில், அழைப்பிதழ் வைப்பதில் பிசியாக உள்ளார். இந்நிலையில், சாகுல் மாஸ்டர் அர்ஜுன் குறித்து இப்படியொரு பேட்டியை கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











