»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Subscribe to Oneindia Tamil

ஓய்வு கிடைத்தால் ஷாலினி ஏ.கே இன்டர் நேஷனல் ( அஜீத் குமார் இன்டர்நேஷனல்) ஆபிசுக்கு வந்து விடுகிறார். திருமதி ஷாலினி அஜீத்குமாரை,ஏ.கே. இன்டர் நேஷனல் அலுவலகத்தில் சந்தித்தோம்.

திருமணத்திற்குப்பிறகு நடிப்பதில்லை என்று திட்டவட்டமாகச் சொல்லியிருந்தேன். அதற்கு முன்பே பிரியாத வரம் வேண்டும் படப்பிடிப்பை முடித்து விடுங்கள்என்று நேரம் கொடுத்து காத்திருந்தேன். பல முறை திருமணத்திற்கு பிறகு நடிக்கமுடியாது என்று சொல்லியும் கேட்கவில்லை.

இரண்டு நாட்கள் வேலை பாக்கி என்றார்கள். திருமணத்திற்குப்பிறகு நடிக்க வேண்டும் என்றார்கள். தர்மசங்கடமாகி விட்டது. சினிமா உலகம் இன்றுடெக்னிக்கலாக எவ்வளவோ முன்னேறி விட்டது. யாருக்குமே தெரியாத ஒரு விஷயத்தை இப்பொழுது சொல்கிறேன்.

அலைபாயுதே படத்தில் ரோட்டை கிராஸ் செய்யும் பொழுது குஷ்பூ ஓட்டி வந்த காரில் நான் சிக்கி தூக்கி எரியப்படுகின்ற காட்சியில் ஒரு ப்ரேமில் கூட நான்நடிக்கவில்லை. நான் ரோட்டை கடக்க முயற்சிப்பதும், தூக்கி எறியப்படுவதுமாக காட்டியிருப்பார்கள். இந்தக் காட்சியில் நடிக்காமல், நடித்தேன்.

அதே மாதிரி பிரியாத வரம் வேண்டும் படத்திலும் டெக்னிக்காவே நான் நடித்து முடித்துவிட்டேன். விஞ்ஞான வளர்ச்சி உபயோகத்தால் படம்தீபாவளிக்கு வெளிவரப்போகிறது.

சினிமா தயாரிப்பாளர்களின் கஷ்டங்களை நாங்கள் நன்கு அறிவோம். நம்மால் ஒரு படம் நின்று விடுமோ என்று மனதுக்கு கஷ்டமாகவே இருந்தது. நல்லவேளை இப்பொழுது ரீலீஸாகப்போகிறது சந்தோஷமாகவும் இருக்கிறது என்றார் திருமதி ஷாலினி அஜீத்குமார்.

Read more about: cinema, shalini inteview, tamilnadu

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil