ஷாமிலி-ஷாலினி ஷாலினியின் தங்கை ஷாமிலி நடிக்க வரப் போவதாக மீண்டும் செய்திகள் கிளம்பியுள்ளன. பேபியாக இருந்தபோது தமிழ், மலையாள திரையுலகை கலக்கியவர் ஷாலினி. குட்டிப் பாப்பாவாக இருந்தபோதுஅத்தனை சூப்பர் ஸ்டார் நடிகர்களுடனும் இவர் நடித்துக் கலக்கினார். அவரது பேச்சும், நடிப்பும் குழந்தைநட்சத்திரங்களிலேயே ஸ்டார் பேபியாக விளங்கினார் ஷாலினி.பெரிய பெண் ஆனதும் மலையாளத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். பேபியாக இருந்த போது தன்னைஅறிமுகப்படுத்திய இயக்குர் பாசிலின் இயக்கத்திலேயே ஹீரோயினாகவும் அறிமுகமானார். தமிழிலும் பாசிலின்படத்தில் தான் முதல் முறையாக ஷாலினி ஹீரோயினாக நடித்தார்.ஷாலினி முதல் முறையாக ஹீரோயினாக நடித்த காதலுக்கு மரியாதை மெகா ஹிட் படமானது. தொடர்ந்துகண்ணுக்குள் நிலவு, அமர்க்களம் என மொத்தமே 4 படங்களில் மட்டுமே நடித்தார் ஷாலினி.அமர்க்களத்தில் நடித்தபோது அஜீத்துடன் காதல் மலர சட்டுப் புட்டென்று திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். திருமணத்திற்குப் பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டார்.அருமையான நடிப்பை கொண்ட ஷாலினியின் நடிப்பை ரசிகர்கள் இழந்த நிலையில் அவரது தங்கை ஷாமிலி(அஞ்சலி பாப்பா) நடிக்க வருவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் ஷாமிலியோ தனக்கு நடிக்க விருப்பம்இல்லை என்று மறுத்து விட்டார். இருந்தாலும் ஷாமிலியையும் ஹீரோயினாக்க பாசில் கடுமையாக முயன்றுவந்தார். ஆனாலும் ஷாமிலி நழுவியபடியே தான் இருந்தார்.இந்த நிலையில் ஷாலினி, ஷாமிலி ஆகியோரின் அண்ணனா நடிகர் ரிச்சர்ட், கோவை நகரில் தனது வீடியோபாரடைசியோ கடையின் கிளையை திறந்துள்ளார். இந்த கிளை திறப்பு விழாவில் ஷாலினியும், ஷாமிலியும்கலந்து கொண்டனர். அப்போது ஷாமிலியை சூழ்ந்த நிருபர்கள் நீங்கள் எப்போது ஹீரோயின் ஆகப் போகிறீர்கள்என்று கேட்டனர்.வழக்கமாக நிருபர்களைக் கண்டால் நழுவி விடும் ஷாமிலி, இம்முறை தப்ப முடியாத அளவுக்கு முற்றுகைஇருந்ததால் வேறு வழியின்றி பேசினார். குழந்தை நட்சத்திரமாக 65 படங்களில் நடித்து விட்டேன். இப்போதுசென்னை கல்லூரியில் விசுவல் கம்யூனிகேசன் 2ம் ஆண்டு படித்து வருகிறேன்.இப்போதைக்கு படிப்பில் தான் கவனமாக உள்ளேன். நடிக்க வருவேனா என்று கேட்டால் என்ன சொல்வது?(சிரிக்கிறார்). அது எனக்குத் தெரியாது. இபபோது படிப்புதான் முக்கியம். மற்றபடி மியூசிக், புக்ஸ், அக்காவுடன் பேட்மிண்டன் என என் பொழுது போகிறது என்றார் ஷாமிலி. ஹீரோயின்ஆவீர்களா என்று நிருபர்கள் விடாமல் கேட்டபோது, எனது அக்கா ஹீரோயின் ஆவார் என்று யாரும்நினைக்கவில்லை. ஆனால் அவர் நாயகியாக நடித்தார். நாளை என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது.இப்போது எனது மனதில் அந்த எண்ணம் இல்லை. நாளை என்ன நடக்குமோ என்று ரஜினி ஸ்டைலில் பேசினார்ஷாமிலி.ஷாலினியைப் போல ஷாமிலியையும் பெரிய நடிகையாக்க வேண்டும் என்று அவர்களது குடும்ப நண்பரும் ஆனபாசில் தொடர்ந்து முயன்று வருகிறாராம். ஒருவேளை ஷாமிலி நடிக்க ஒத்துக் கொண்டால் முதல் படம்மலையாளத்தில்தான் அமையும் என்கிறார்கள்.ஷாமிலியை துருவிய நிருபர்கள் அப்படியே அக்காவையும் துளைக்கத் தொடங்கினர். அஜீத்துக்கு சறுக்கல்குறைந்தபாடில்லையே என்று ஆரம்பித்தபோது சிரித்தபடி நிறுத்திய ஷாலினி, வரலாறு (காட்பாதர்) அவருக்குபெரும் திருப்புமுனையாக அமையும். மீண்டும் அஜீத் கலக்குவார். சந்தேகமே இல்லை. எனக்கு நம்பிக்கைஉள்ளது.இப்போதெல்லாம் நிறைய இளம் நடிகர், நடிகைகள் வருகிறார்கள். கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்தி தங்களதுதிறமைகளை நிரூபித்து விடுகிறார்கள். இது சினிமாவுக்கு நல்லது தானே.அஜீத் இப்போது முழுக்க முழுக்க சினிமாவில்தான் கவனம் செலுத்துகிறார். ரேஸிங்கை மறந்திருக்கிறார்.அவருக்கு நான் முழு சப்போர்ட் ஆக உள்ளேன் என்றார் ஷாலினி.

By Staff

ஷாலினியின் தங்கை ஷாமிலி நடிக்க வரப் போவதாக மீண்டும் செய்திகள் கிளம்பியுள்ளன.

பேபியாக இருந்தபோது தமிழ், மலையாள திரையுலகை கலக்கியவர் ஷாலினி. குட்டிப் பாப்பாவாக இருந்தபோதுஅத்தனை சூப்பர் ஸ்டார் நடிகர்களுடனும் இவர் நடித்துக் கலக்கினார். அவரது பேச்சும், நடிப்பும் குழந்தைநட்சத்திரங்களிலேயே ஸ்டார் பேபியாக விளங்கினார் ஷாலினி.

பெரிய பெண் ஆனதும் மலையாளத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். பேபியாக இருந்த போது தன்னைஅறிமுகப்படுத்திய இயக்குர் பாசிலின் இயக்கத்திலேயே ஹீரோயினாகவும் அறிமுகமானார். தமிழிலும் பாசிலின்படத்தில் தான் முதல் முறையாக ஷாலினி ஹீரோயினாக நடித்தார்.

ஷாலினி முதல் முறையாக ஹீரோயினாக நடித்த காதலுக்கு மரியாதை மெகா ஹிட் படமானது. தொடர்ந்துகண்ணுக்குள் நிலவு, அமர்க்களம் என மொத்தமே 4 படங்களில் மட்டுமே நடித்தார் ஷாலினி.

அமர்க்களத்தில் நடித்தபோது அஜீத்துடன் காதல் மலர சட்டுப் புட்டென்று திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். திருமணத்திற்குப் பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டார்.

அருமையான நடிப்பை கொண்ட ஷாலினியின் நடிப்பை ரசிகர்கள் இழந்த நிலையில் அவரது தங்கை ஷாமிலி(அஞ்சலி பாப்பா) நடிக்க வருவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் ஷாமிலியோ தனக்கு நடிக்க விருப்பம்இல்லை என்று மறுத்து விட்டார். இருந்தாலும் ஷாமிலியையும் ஹீரோயினாக்க பாசில் கடுமையாக முயன்றுவந்தார். ஆனாலும் ஷாமிலி நழுவியபடியே தான் இருந்தார்.

இந்த நிலையில் ஷாலினி, ஷாமிலி ஆகியோரின் அண்ணனா நடிகர் ரிச்சர்ட், கோவை நகரில் தனது வீடியோபாரடைசியோ கடையின் கிளையை திறந்துள்ளார். இந்த கிளை திறப்பு விழாவில் ஷாலினியும், ஷாமிலியும்கலந்து கொண்டனர். அப்போது ஷாமிலியை சூழ்ந்த நிருபர்கள் நீங்கள் எப்போது ஹீரோயின் ஆகப் போகிறீர்கள்என்று கேட்டனர்.

வழக்கமாக நிருபர்களைக் கண்டால் நழுவி விடும் ஷாமிலி, இம்முறை தப்ப முடியாத அளவுக்கு முற்றுகைஇருந்ததால் வேறு வழியின்றி பேசினார். குழந்தை நட்சத்திரமாக 65 படங்களில் நடித்து விட்டேன். இப்போதுசென்னை கல்லூரியில் விசுவல் கம்யூனிகேசன் 2ம் ஆண்டு படித்து வருகிறேன்.

இப்போதைக்கு படிப்பில் தான் கவனமாக உள்ளேன். நடிக்க வருவேனா என்று கேட்டால் என்ன சொல்வது?(சிரிக்கிறார்). அது எனக்குத் தெரியாது. இபபோது படிப்புதான் முக்கியம்.

மற்றபடி மியூசிக், புக்ஸ், அக்காவுடன் பேட்மிண்டன் என என் பொழுது போகிறது என்றார் ஷாமிலி. ஹீரோயின்ஆவீர்களா என்று நிருபர்கள் விடாமல் கேட்டபோது, எனது அக்கா ஹீரோயின் ஆவார் என்று யாரும்நினைக்கவில்லை. ஆனால் அவர் நாயகியாக நடித்தார். நாளை என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது.

இப்போது எனது மனதில் அந்த எண்ணம் இல்லை. நாளை என்ன நடக்குமோ என்று ரஜினி ஸ்டைலில் பேசினார்ஷாமிலி.

ஷாலினியைப் போல ஷாமிலியையும் பெரிய நடிகையாக்க வேண்டும் என்று அவர்களது குடும்ப நண்பரும் ஆனபாசில் தொடர்ந்து முயன்று வருகிறாராம். ஒருவேளை ஷாமிலி நடிக்க ஒத்துக் கொண்டால் முதல் படம்மலையாளத்தில்தான் அமையும் என்கிறார்கள்.

ஷாமிலியை துருவிய நிருபர்கள் அப்படியே அக்காவையும் துளைக்கத் தொடங்கினர். அஜீத்துக்கு சறுக்கல்குறைந்தபாடில்லையே என்று ஆரம்பித்தபோது சிரித்தபடி நிறுத்திய ஷாலினி, வரலாறு (காட்பாதர்) அவருக்குபெரும் திருப்புமுனையாக அமையும். மீண்டும் அஜீத் கலக்குவார். சந்தேகமே இல்லை. எனக்கு நம்பிக்கைஉள்ளது.

இப்போதெல்லாம் நிறைய இளம் நடிகர், நடிகைகள் வருகிறார்கள். கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்தி தங்களதுதிறமைகளை நிரூபித்து விடுகிறார்கள். இது சினிமாவுக்கு நல்லது தானே.

அஜீத் இப்போது முழுக்க முழுக்க சினிமாவில்தான் கவனம் செலுத்துகிறார். ரேஸிங்கை மறந்திருக்கிறார்.அவருக்கு நான் முழு சப்போர்ட் ஆக உள்ளேன் என்றார் ஷாலினி.

More from Filmibeat

Read more about: will shamili become heroine
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X