»   »  அக்கா ஷெட்டி, தங்கச்சி கெட்டி!

அக்கா ஷெட்டி, தங்கச்சி கெட்டி!

Subscribe to Oneindia Tamil

ஷில்பா ஷெட்டி பிக் பார்ட்டி என்றால் அவரது தங்கச்சி ஷமீதா ஷெட்டி படா பார்ட்டியாக இருக்கிறார்.

ஷில்பா சினிமாவில் அப்படியும், இப்படியுமா காலம் தள்ளி வந்தவர் ஷில்பா. கிட்டத்தட்ட ரிடையர்ட் ஹர்ட் லெவலுக்கு அவரது மார்க்கெட் படுத்துக் கிடந்தது. ஆனால் பிக் பிரதர் நிகழ்ச்சி வந்து ஒரே தூக்காக தூக்கி விட்டது ஷில்பாவின் மார்க்கெட்டை.

அக்காவுக்கு அடிச்ச இந்த லக்கி பிரைஸ், ஷமீதாவுக்கும் சந்தோஷத்தைக் கொடுத்துள்ளதாம். ஷமீதாவை ஏற்கனவே தமிழ் கூறும் நல்லுலகம் கண்டு ரசித்துள்ளது. ராஜ்ஜியம் படத்தில் விஜயகாந்த்துக்குத் துணையாக கூட மாட வந்து போனவர்தான் ஷமீதா.

இப்போது மறுபடியும் தமிழுக்கு வருகிறார் ஷமீதா. மாதவனுடன் லீலை படத்தில் ஜோடி போட்டுள்ளார். என்னங்க சின்ன ஷெட்டி ஆளையேக் காணோம் என்று அக்கப் போரை ஆரம்பித்தோம்.

அதான் இப்போ வந்திட்டேனே என்று நம்மையேக் கலாய்த்த அவர், லீலையில் நான் வில்லி போன்ற கேரக்டரில் நடிக்கிறேன்.இந்தப் படம் எனக்கு பெரிய பெயரை வாங்கிக் கொடுக்கும். அதன் பின்னர் நிறைய தமிழ்ப் பட வாய்ப்பு வரும்.

இந்தியில் எனக்கு நல்ல வாய்ப்பே வரவில்லை. குத்துப் பாட்டுக்குத்தான் ஆட வைக்கிறார்கள். அது அலுத்துப் போய் விட்டது. வெறும் குத்துப் பாட்டுக்கு குதியாட்டம் போட எனக்கு விருப்பம் இல்லை. இப்போதெல்லாம் இப்படிப்பட்ட ரோல்களை நான் ஒப்புக் கொள்வதே இல்லை என்று புலம்புகிறார் ஷமீதா.

இப்போது ஷமீதா, கேஷ் என்ற படத்தில் அஜய் தேவ்கனுடன் நடித்து வருகிறாராம்.

அக்காவும், நீங்களும் எப்படி என்றால், அக்கா சீனியர், அவருடன் என்னை ஒப்பிடக் கூடாது. அவங்க திறமை காட்ட வந்து 14 வருடங்க் ஆகி விட்டது. நான் இப்பத்தானே வந்தேன். என் அக்கா தான் எனக்கு ரோல் மாடல். அவரை போல நானும் நல்ல நடிகையாக வர ஆசைப்படுகிறேன் என்கிறார் ஷமீதா.

தங்கச்சி ஷெட்டி ரொம்பத்தான் கெட்டி!

Please Wait while comments are loading...