முகத்துல சுட்டு.. கண்ணுக்கு கீழே.. அதெல்லாம் அப்பா சொன்னதே இல்ல.. சண்முக பாண்டியன் பேட்டி!

சென்னை: வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமத்துரை போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடித்திருக்கும் படம் கொம்பு சீவி. இந்த படத்தில் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருக்க தர்ணிகா கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் டிசம்பர் 19ஆம் தேதியான வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது.

Vijayakanth Shanmuga Pandian kombuseevi
Photo Credit:

இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சண்முக பாண்டியன், அப்பாவிற்கு படப்பிடிப்பின் போது நிறைய அடிபட்டு இருக்கிறது. ஒருமுறை படப்பிடிப்பின் போது ட்ரையல் பார்க்கும் சமயத்தில் டம்மி துப்பாக்கி லோட் ஆகி இருக்கிறது. இது தெரியாமல் பைட்டர் ஒருவர் அப்பாவின் முகத்தை நோக்கி சுட்டு விட்டார் அந்த டம்மி புலட் அப்படியே அப்பாவின் கண்ணுக்கு கீழே பட்டு எலும்பு உடைந்து விட்டது. கொஞ்சம் மேலே போயிருந்தால், கண்ணு போய் இருக்கும். சின்ன வயசில் இதையெல்லாம் எங்க கிட்ட அப்பா சொன்னது இல்லை. எங்களுக்கு விவரம் தெரிஞ்ச பிறகுதான் ஷூட்டிங்ல இப்படி எல்லாம் எனக்கு அடிபட்டது என்று, அவருக்கு பட்ட கஷ்டங்களை எல்லாம் எங்க கிட்ட காட்டினார்.

ஒரே அடி : அதுமட்டுமில்லாமல் படத்துல பாக்குற மாதிரி தான், நிஜத்திலும் எங்க அப்பா அவ்ளோ ஸ்ட்ராங்கான ஆளா இருப்பாரு, சுலபமா ஒரே கையில ஒரு கூட்டத்தையே அவரால தள்ளிவிடடி முடியும். நான் சின்ன பிள்ளையா இருக்கும்போது ஒருமுறை திருப்பதி கோயிலுக்கு போயிருந்தோம். அங்க கூட்டத்துல நான் மாட்டிகிட்ட ஒரே அடிதான் அடிச்சாரு 15 பேர் அப்படியே ஓரம் போயிட்டாங்க. எல்லோரும் ஏன் இப்படி பண்றீங்கன்னு கேட்டதுக்கு அப்பா கொடுத்தா ஒரு சவுண்டிலேயே அமைதி ஆயிட்டாங்க அவ்வளவு ஸ்ட்ராங்கானா ஆள் தான் அப்பா. அவரோட வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கு. ஆனால், அதை எடுப்பது அவ்வளவு சுலபம் இல்லை, அதற்கு ஏற்ற இயக்குநர் அமைந்தால் நிச்சயம் அப்பா கதாபாத்திரத்தில் நான் நடிப்பேன் என்று சண்முக பாண்டியன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X