பாவம் விஜய் அண்ணன்.. என்னால திட்டு வாங்கினாரு.. சாந்தனு பாக்யராஜ் !
சென்னை : சாந்தனு பாக்யராஜ் சுவாரசியமானத் தகவலை பேட்டியில் கூறியுள்ளார்.
நடிகர் சாந்தனு மற்றும் கீகீ இருவரும் நண்பர்களாக இருந்து காதலர்களாக ஆனவர்கள். இவர்கள் ஜோடிகளாக ஆன பின்பு பல ரசிகர்கள் இவர்களின் காதலையும் இவர்களின் ஒற்றுமையையும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி கிட்டதட்ட 5 வருடங்கள் ஆகின்றன. எந்த இடையூரும் இன்றி கணவன் மனைவியாக வாழ்ந்து வருவதாக பல பேட்டிகளில் ஒன்றாக தெரிவித்து வருகின்றனர் .

சாந்தனு மற்றும் கீகீக்கு பிடித்த ஜோடிகள் ஜெனிலியா மற்றும் ரித்தேஷ் என்று கூறியுள்ளனர். அவர்கள் ஜோடியாக செய்யும் போட்டோசூட்கள் மற்றும் டிக்டாக்குள் எங்கள் இருவருக்கும் மிகவும் பிடிக்கும் என்று சமீபத்தில் தெரிவித்துள்ளனர். மேலும் தமிழில் பிடித்த ஜோடிகள் என்றால் நகுல் மற்றும் ஸ்ருதி தான் என்று கூறியுள்ளனர். ஏனெனில் இருவரும் ஒன்றாக பாட்டுபாடி அசத்துவார்கள் அது எங்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று என கூறியுள்ளனர் .

மேலும் ஒரு பேட்டியில் சாந்தனு கூறும் போது பல முறை நான் கீகீயின் பெயருடன் ஃபிளேம்ஸ் போட்டு பார்த்திருக்கிறேன்.அப்படி பார்க்கும் போது எங்கள் பெயரின் இடையே காதல் என்று தான் வந்தது என்று கூறினார். மேலும் கீகீக்கு நான் இதுவரை காதல் கடிதங்கள் எழுதியதே இல்லை என்றும் பகிர்ந்து கொண்டார்.

இவர்கள் திருமணம் தளபதி விஜய் தலைமையில் தான் நடைப்பெற்றது. விஜய் தான் தாலி எடுத்துகொடுத்து கல்யாணத்தை நடத்தி வைத்தார். விஜய் சாந்தனுவின் விருப்படியே அவ்வாறு செய்தார் இதன்பின் விஜயின் மனைவி சங்கீதா அது பெரியவர்கள் செய்யும் வேலை அதை ஏன் நீங்கள் செய்தீர்கள் என்று விஜயை திட்டினாராம், அண்ணி என்னால் தான் அண்ணனை திட்டினார்கள் என்று சாந்தனு தற்போது பகிர்ந்துள்ளார் .

மேலும் விஜய் எங்களின் திருமணத்திற்கு பிறகு மறைமுகமாக அழைத்து எங்களுக்கு விருந்து கொடுத்தாகவும் கூறினார். சாந்தனு விஜயின் தீவிர ரசிகர் இது அனைவரும் தெரிந்ததே ஆனால் தனக்கு பிடித்த நபருக்காக விஜய் இவ்வளவு செய்வது பலரை ஆச்சரியமளித்து வருகிறது. தற்போது சாந்தனு விஜயின் மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது .


Click it and Unblock the Notifications











