»   »  போதும் போதும்: ஷர்மிலி

போதும் போதும்: ஷர்மிலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மலையாளத்தில் ஷகீலாவுக்குப் போட்டியாக சதைப் பாங்கான ரோல்களில் சதாய்த்தஷர்மிலிக்கு கிளாமர் வேடங்கள் போரடித்து விட்டதாம். இனிமேலும் அப்படிப்பட்டரோல்களில் நடிக்க தான் தயாராக இல்லை என்கிறார்.

குரூப் டான்ஸராக சினிமாவில் புகுந்தவர் ஷர்மிலி. அப்படியே மெதுவாக துண்டுதுக்கடா ரோல்களில் நடிக்க ஆரம்பித்தார். கவுண்டமணியுடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டு அவருடன் சில படங்களில் ஜோடியாக நடித்தார். தொடர்ந்து சின்னச் சின்னரோல்களில் நடித்த ஷர்மிலி, தமிழில் கிளாமரில் களக்கினார்.

ஆனால் மலையாள சினிமாவில் ஷர்மிலியை வேறு மாதிரியாகப் பார்த்த்தனர். பலானரோல்களை கொடுத்து நடிக்க வைத்தனர். அப்போது ஷகீலா, ஃபுல் ஃபார்மில் அங்குபுகுந்து விளையாடிக் கொண்டிருந்தார். ஷகீலாவின் கால்ஷீட் கிடைக்காதவர்கள்,ஷர்மிலியை வைத்து சமாளித்தனர். அதாவது பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பதுபோல..

இப்படியாக ஷர்மிலியும் சாப்ட் போர்ன் வகை படங்களில் கலகலத்து வந்தார்.ஷகீலாவும், ஷர்மிலியும் போட்டி போட்டு கலக்கிய கிளாமர் வதக்கலைப் பார்த்துமலையாள ரசிகர்கள் மதமதத்துப் போய் கிடந்தனர். இப்போது ஷகீலா ஃபீல்ட்அவுட். அதேபோல ஷர்மிலியும் மலையாளத்தில் அதிகம நடிப்பதில்லை.

என்ன போரடிச்சுப் போச்சா என்று ஷர்மிலியிடம் கேட்டபோது, அப்படியெல்லாம்இல்லை. முன்பு போலவா இப்போது எனது உடம்பு இருக்கிறது? கிளாமருக்கு நல்லஉடம்பும், அழகும் வேண்டும். குண்டக்க மண்டக்க உடம்பை வைத்துக் கொண்டுகிளாமராக நடிக்க முடியாது.

இப்போது எனது உடம்பு கிளாமருக்குப் பொருத்தமாக இல்லை என நினைக்கிறேன்.சமீபத்தில் கூட ஒரு தமிழ்ப் படத்தில் பாட்டுக்கு ஆட வேண்டி வந்தது. அதைமுடித்தவுடன், என்னுடன் சேர்ந்து ஆடிய குரூப் டான்ஸ்ர் பொண்ணுங்க, முன்னாடிமாதிரி உங்க உடம்பு ஒத்துழைக்கவில்லை மேடம் என்று என்னிடம் சொன்னார்கள்.

அது எனக்கும் தெரியும். அதனால்தான் முன்பு போல கிளாமராக நடிக்க நான்விரும்புவதில்லை. நிறுத்திக் கொண்டு விட்டேன். ஒரு காலத்தில் மலையாளத்தில் படுபிசியாக நடித்தேன்.

ஒரே வருடத்தில் 34 படங்கள் நடித்தேன். ஷகீலாவுக்கு அடுத்த இடத்தில் நான்இருந்தேன். அதெல்லாம் பழங்கதை (சதை?). இப்போது அப்படி முடியாது. எல்லாம்போதும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 150 படங்களுக்கு மேல்நடித்து விட்டேன் என்று கூறுகிறார் ஷர்மிலி.

இப்போது டி.ராஜேந்தரின் வீராசாமி படத்தில் மும்தாஜின் அம்மாவாக, கிளாமர்ரோலில் நடிக்கிறார் ஷர்மிலி.

இப்போது வரும் நடிகைகள் குறித்த அங்கலாய்ப்பும் ஷர்மிலியிடம் உள்ளது.அதாவது எந்த நடிகைக்கும் சேலை பொருத்தமாக இல்லையாம். இப்போதெல்லாம்சேலை கட்டினால் எந்த நடிகையும் அழகாகவே இல்லை. நான் சேலை கட்டினால் அதுதனி கெட்டப்பாக தெரியும்.

கிளாமராக டிரஸ் பண்ணுவதை விட சேலையில்தான் அதிக கிளாமர் காட்ட முடியும்.ஆனால் இப்போது வரும் பொண்ணுங்களுக்கு மாடர்னா உடை அணியத்தான்தெரியுதே தவிர, நல்லா சேலை கட்டத் தெரியவில்லை. சேலையில் அவர்கள்அழகாகவும் இல்லை என்கிறார் ஷர்மிலி.

சரி, விடுங்க.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil