»   »  டூ பீஸுக்கு ஷீலா டூ!

டூ பீஸுக்கு ஷீலா டூ!

Subscribe to Oneindia Tamil

கிளாமராக நடிப்பேன். அதேசமயம் டூ பீஸ், சிங்கிள் பீஸ் என பீஸ் பீஸாக நடிக்கமட்டேன் என முரண்டு பிடிக்கிறார் இளவட்டம் ஷீலா.

தீனா, டும் டும் டும், நந்தா என குட்டிப் பாப்பாவாக வரிசை கட்டி நடித்தவர் ஷீலா.வயசுக்கு வந்த பாப்பாவாக மாறியவுடன் இளவட்டம் படத்தின் நாயகியானார்.குழந்தை நடிகையா என்று யாரும் நினைத்து விடக் கூடாது என்பதற்காகவே,இளவட்டம் படத்தில் படு கிளாமராக நடித்து இளவட்ட ரசிகர்களை ஒரே படத்தில்இழுத்து விட்டார்.

இளவட்டத்தில் இவரது வேகத்தைப் பார்த்து மிரண்டு போன இயக்குநர்களும்,தயாரிப்பாளர்களும் இப்போது ஷீலாவின் கால்ஷீட்டை வாங்கிப் போட்டு வாய்ப்புதந்து வருகின்றனர்.

அருணுடன் வேதா, பிரசன்னாவுடன் சீனாதானா 007 என இரு படங்களில் இப்போதுஷீலா திறமை காட்டி வருகிறார். இரண்டிலும் கிளாமர் கண்டிப்பாக உண்டாம். பூரித்துநிற்கும் இளமையுடன், படு ஜாலியாக இருக்கும் ஷீலாவைப் பிடித்தோம்.

ஷீலாவின் அம்மா இல்லத்தரசியாம். அப்பாவுக்கு வங்கியில் நல்ல வேலை(நல்லவேளை!). தம்பி பாலா ஆறாம் வகுப்பு படிக்கிறாராம். ஷீலா, ஏஞ்சல்களின்கூடாரமான ஹோலி ஏஞ்சல் கான்வென்டடில் பிளஸ் ஒன் வரை படித்தாராம். படிப்பைமுடிக்கும் முன் நடிக்க வாய்ப்பு வந்ததால் டூடோரியலில் சேர்ந்து பிளஸ்டூபடிக்கிறாராம்.

சின்ன வயதிலேயே நடிக்க ஆரம்பித்து விட்டதால் சினிமா மீது ஷீலாவுக்கு பெரியபிடிப்பு ஏற்பட்டு விட்டதாம். படிப்போடு, நடிப்பையும் தொடர முடிவு செய்தாராம்.அப்போதுதான் கண்ணா படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்ததாம். ஆக்சுவலி, இதுதான்ஷீலாவின் முதல் படமாம். ஆனால் கண்ணா வருவதற்கு முன்பு திமிறிக் கொண்டுவந்து விட்டது இளவட்டம்.

வேதாவில் எப்படிப்பட்ட ரோல் என்றோம். இதில் மாடர்ன் பொண்ணாக வருகிறேன்.அதேசமயம், ஹோம்லியாவும் எனது கேரக்டர் இருக்கும். ஹீரோயின் ஓரியன்டட்படம்தான். ஸோ, நடிக்கவும் நல்ல வாய்ப்பு, பின்னிண்டிருக்கேன் என்கிறார்.

இதற்கு முற்றிலும் மாறாக சீனாதானா 007 படம். இதில் படு காமெடியான ரோலில்நடிக்கிறாராம். அதேசமயம், கிளாமரிலும் புகுந்து விளையாடியுள்ளாராம்.மலையாளத்தில் வந்த சிஐடி மூசா படம்தான் சீனாதானாவாக மாறியுள்ளது.மலையாளத்தில் பாவனா நடித்த ரோலை தமிழில் ஷீலா செய்கிறார்.

தமிழோடு நிற்கவில்லை ஷீலா புராணம். கன்னடத்திலும் கலக்கி எடுத்து வருகிறார்.நின்னே பந்தோ என்ற படத்தில் டபுள் ஆக்ஷன் ரோலில் வெளுத்து வாங்குகிறாராம்.கன்னடம் மாத்தாட பருத்தா? என்று கேட்டால், கலைக்கு ஏதுங்கண்ணா மொழி.நல்ல பயிற்சி கிடைக்குமே, அதனால்தான் மொழியைப் பற்றிக் கவலைப்படாமல்நடிக்க ஒப்புக் கொண்டேன் என்கிறார் படு தில்லாக.

அப்புறம் கிளாமர் என்று அப்பாவியாக கேட்டால், அடப்பாவி என்ற கணக்காகநம்மை பார்த்து விட்டு, கிளாமர் இல்லாமல் சினிமாவில் எப்படி? அதற்காக ஓவர்கிளாமர் முடியவே முடியாது. டூ பீஸ் போட்டு நடிக்கவே மாட்டேன். அது ரொம்பஅப்பட்டமாக இருக்கும். புடவையிலும் கூட கிளாமர் காட்ட முடியும்.ஒவ்வொருவரின் ரசனையைப் பொறுத்தது அது.

என்னைப் பொருத்தவரை எனக்கு நல்ல உடல் வாகு (ஆமாமாமாமா!). ஸோ, எனக்குஎந்த உடையைப் போட்டால் ஆபாசமாக இருக்காதோ அந்த டிரஸ்ஸைப் போட்டுநடிப்பேன் (அய்யோடா!). மற்றபடி டூ பீஸ், சிங்கிள் பீஸ் எல்லாம் எனக்குப்பிடிக்காது.

நீங்க எப்பங்கம்மணி நம்பர் ஒன் ஆவீங்க?

அதெல்லாம் தத்துப் பித்துப் பேச்சுப்பா. அதில் எல்லாம் எனக்கு நம்பிக்கையேஇல்லை. ஒரு படம் ஹிட் ஆச்சுன்னா உடனே நம்பர் ஒன் என்று கூறி விடுகிறார்கள்.பெயிலியர் ஆகி விட்டால் அவ்ளேதான், ராசியில்லாதவள் என்று கூறி விடுகிறார்கள்.ஸோ எனக்கு இதில் நம்பிக்கையே கிடையாது. நல்ல நல்ல படங்களாக நடிக்கணும்அவ்ளோதான் என்றார் பட்டென்று.

இன்னொரு முக்கியமான மேட்டர். ஷீலாவும், சிம்பு தங்கச்சி இலக்கியாவும் பள்ளிக்கூட தோஸ்துகளாம். அதாவது ஷீலா பத்தாப்பு படித்துக் கொண்டிருந்தபோது,இலக்கியா பிளஸ்டூ படித்துக் கொண்டிருந்தாராம். அப்ப சிம்புவைக் கூட நல்லாதெரிந்திருக்கும்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil