அப்போ ரகு.. இப்போ இவர் தான்.. சின்சானுக்கு குரல் கொடுக்கும் டப்பிங் கலைஞரின் படு ஜாலி பேட்டி!
சென்னை: குழந்தைகளின் ஃபேவரைட் ஆன கார்ட்டூன் தொடர் சின்சானுக்கு தற்போது தமிழில் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் டீகன் ராஜாவின் பேட்டி வெளியாகி வைரலாகி வருகிறது.
மோட்டு பட்லு, நிஞ்சா அட்டோரி, சின்சான் என ஏகப்பட்ட கார்ட்டூன் கதாபாத்திரங்களுக்கு தனது குரலை மாற்றி மாற்றி மெமிக்ரி செய்து அசத்தி வருகிறார் டீகன்.

இந்த லாக்டவுன் நேரத்தில் வேலையில்லாமல் பாதிக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்க அனுமதி கிடைத்ததும் மீண்டும் சின்ன சின்ன டப்பிங் வேலைகளை செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.
1500 கோடிக்கும் மேல் எடுக்கும் அவதார் படத்தின் ஹீரோவுக்கு தமிழில் பேசும் டப்பிங் கலைஞருக்கு ஏன் இவ்வளவு கம்மியாக சம்பளம் கொடுக்கிறார்கள் உள்ளிட்ட பல காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ள டீகன்.
நிஞ்சா அட்டோரியின் லீடு கதாபாத்திரமும் சின்சானும் ஹோட்டல் ஒன்றில் சந்தித்துக் கொண்டால் எப்படி இருக்கும் என்பதை செம நகைச்சுவையாக பேசி காட்டி உள்ளார்.
மேலும், கடந்த 2013ம் ஆண்டு வரை சின்சான் கதாபாத்திரத்திற்கு ரகு எனும் டப்பிங் கலைஞர் குரல் கொடுத்து வந்த நிலையில், 2013ம் ஆண்டுக்கு பிறகு அதே சின்சான் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்து வருபவர் இவர் தான். ஆனால், இரு குரலுக்கும் எந்தவொரு வித்தியாசமும் தெரியாத அளவுக்கு மெமிக்ரி செய்து வருவது இவரது தனிப்பட்ட திறமை.
பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் போது, சினிமா பிரபலங்களான லூசு மோகன், உசிலமணி குரல்களை பேசி அசத்தி வந்த இவர், தற்போது அதையே தனது வாழ்வாதாரமாக மாற்றிக் கொண்டிருக்கிறார். நடிப்பிலும் தனக்கு ஆர்வம் இருப்பதாகவும், தான் நடித்த படம் குறித்த பிரத்யேக தகவலை தெரிந்து கொள்ள இந்த வீடியோவை க்ளிக் செய்து பாருங்க!


Click it and Unblock the Notifications











