சிந்துஜா பேசிய கடைசி நிமிடம்… மறக்கவே முடியாது… மனம் உருகிய ஷிவானி ராஜசேகர் !

சென்னை : தெலுங்கு நடிகர் ராஜசேகரின் மகளான ஷிவானி ராஜசேகர் அன்பறிவு திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் ஹிப் ஹாப் ஆதி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் ஜனவரி 7ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.

இப்படத்தில், முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஷிவானி ராஜ சேகர், பிலிமிபீட்டுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அன்பறிவு

இசை அமைப்பாளர், நடிகர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் அன்பறிவு. இப்படத்தை அஸ்வின் ராம் இயக்கி உள்ளார். இதில் ஹீரோயினாக காஷ்மிரா பர்தேசி நடித்துள்ளார். நெப்போலியன், ஷிவானி ராஜசேகர், வித்தார்த், தீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜனவரி 7ந் தேதி

ஜனவரி 7ந் தேதி

படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இத்திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஜனவரி 7ந் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஷிவானி ராஜசேகர், இத்திரைப்படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

ஆதி இரட்டை வேடத்தில்

ஆதி இரட்டை வேடத்தில்

ஆதி முதன்முறையாக இந்த திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இரண்டுவிதமான கதாபாத்திரத்தில் மிகவும் அழகாக நடித்து இருக்கிறார். இது எனக்கு மிகவும் பிடித்து இருந்தது என்றார். மேலும், இப்படத்தில் காதல், ரொமான்ஸ், சென்டிமென்ட் என அனைத்துமே இருக்கு. ஹிப் ஹாப் ஆதி பாட்டு, டான்ஸ், சண்டை என அனைத்திலும் மாஸ் காட்டி இருக்கிறார். அன்பறிவு திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக இருக்கும் என்றார்.

நெஞ்சுக்கு நீதி

நெஞ்சுக்கு நீதி

ஷிவானி ராஜ சேகர் அடுத்ததாக நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார். இத்திரைப்படம் குறித்து பேசிய ஷிவானி, இந்த திரைப்படம் உண்மையில் என் இதயத்தை தொட்ட திரைப்படம் என்றார்.

சிந்துஜா அன்பானவர்

சிந்துஜா அன்பானவர்

இயக்குனர் அருண்ராஜா காமராஜ் அவர்களின் மனைவி சிந்துவை படப்பிடிப்பு தளத்தில் பார்த்தேன். பார்த்த முதல்நாளே மிகவும் அன்பாக பழகினார். அருண்ராஜா காமராஜ் மற்றும் அவரது மனைவி இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியான உடன் என்னிடம் கூறினார்கள். அவர்கள் மருத்துவமனையில் இருக்கும் போதும் நான் அவர்கள் இருவரிடமும் தொடர்ந்து பேசினேன்.

மறக்கவே முடியாது

மறக்கவே முடியாது

இறப்பதற்கு முன்பு சிந்துஜா கடைசியாக என்னிடம் தான்பேசினார். அந்த வார்த்தைகளை என்னால் என்றும் மறக்கவே முடியாது என்றார். நெஞ்சுக்கு நீதி திரைப்படக்குழுவினர் நிச்சயம் சிந்துஜாவை மறக்க மாட்டார்கள் என்று உருக்கமுடன் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X