அஜித்துக்கு விஜய் அம்மா சாப்பாடு அனுப்பிய சம்பவம்.. ஷோபா சொன்ன சூப்பர் சீக்ரெட்!

சென்னை: விஜய் - அஜித் இடையே போட்டி இல்லை... நட்பு இன்னும் அப்படியேத்தான் தொடர்கிறது என்று நடிகர் விஜயின் தாயார் ஷோபா சந்திரசேகர் கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், விஜயின் அரசியல் வருகையும் பேசுபொருளாக இருக்கும் நேரத்தில், இந்த பேட்டி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜயின் தாயார் ஷோபா சந்திரசேகர் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், விஜய் மற்றும் அஜித் இடையே எந்த விதமான தனிப்பட்ட பிரச்சினையும் இல்லை. நான் அவர்கள் இருவரையும் இருவரையும் தனித்தனியாக பார்க்காமல் ஒரே மாதிரியாகவே தான் பார்க்கிறேன். அவர்கள் இடையே நல்ல புரிதலும் நட்பும் இருக்கிறது.
மேலும், விஜய் மற்றும் அஜித் குடும்பங்களும் ஒருவரை ஒருவர் அடிக்கடி சந்தித்து, டின்னர் போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்வார்கள். குறிப்பாக, அஜித்தின் மனைவி ஷாலினி விஜய் குடும்பத்துடன் தற்போது வரை நல்ல தொடர்பில் இருந்து வருகிறார்.

Vijay Ajith Shoba Chandrasekhar

ஷோபா சந்திரசேகர்: அஜித் மீது தனக்கு எப்போதும் ஒரு தனி விருப்பம் இருந்ததாக கூறிய ஷோபா சந்திரசேகர், அவரது குரல், ஸ்டைல் போன்றவை, கலர் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றார். மேலும், அஜித் மற்றும் ஷாலினி திருமணத்திற்கு நேரில் வந்து பத்திரிக்கை கொடுத்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். நிச்சயமாக கல்யாணத்திற்கு வந்து ஆசிர்வாதம் செய்ய வேண்டும் என்றார். இதற்கிடையில், ராஜாவின் பார்வையிலே திரைப்படத்தின் படப்பிடிப்பு காலத்தில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

அஜித்,விஜய் நல்ல நட்பு: அந்த படத்தின் படப்பிடிப்பில் விஜய்க்கு சாப்பாடு அனுப்பும் போது அஜித்திற்கும் சேர்த்து தான் நான் சாப்பாடு அனுப்புவேன். இதை குஷி படத்தின் இசைவெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட அஜித், மைக்கில், ஷோபா அம்மா ராஜாவின் பார்வையிலே படப்பிடிப்பின் போது எனக்கும் சேர்த்து உணவு அனுப்புவார் என பேசினார். அது மறக்க முடியாது. அதன் பிறகு அஜித்,விஜய் இருவரும் சேர்ந்து நடிக்கவில்லையே தவிர, இருவருக்குள் இருக்கும் நட்பு அப்படியேத்தான் இருக்கிறது என ஷோபா சந்திரசேகர் அந்த பேட்டியில் பேசிஉள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X