»   »  அழகான ஆண்களும் ஷ்ரியாவும்!

அழகான ஆண்களும் ஷ்ரியாவும்!

Subscribe to Oneindia Tamil

சிவாஜி நாயகி ஷ்ரியாவுக்கு தண்ணி குடிக்கும் பழக்கம் மட்டும்தான் இருக்கிறதாம், வேறு எந்த கெட்ட பயக்கமும் கிடையாதாம்.

மருமகப் பிள்ளை தனுஷுடன் நடித்த திருவிளையாடல் ஆரம்பம் சூப்பராக ஓடி விட்டதால், மாமனார் ரஜினியுடன் நடித்துள்ள சிவாஜியின்சூப்பரோ சூப்பர் ஓட்டத்தை எதிர்பார்த்து ஆவலோடு காத்துள்ளார் ஷ்>யா.

பக்திக்குப் பெயர் போன ஹரித்வார் தந்த அழகு மயில்தான் ஷ்ரியா. படிச்சது, வளர்ந்தது எல்லாமே டெல்லியில். கல்லூரிக் காலத்தில், சகபுள்ளைகளிடம் செம செல்வாக்குடன் திகழ்ந்தவராம் ஷ்>யா.

காதலுக்கு உதவுவது, கலாய்ப்பது என சகலகலாவல்லியாக கலக்கியவராம் ஷ்ரியா. இப்படியாக வளர்ந்து வந்த ஷ்>யாவுக்கு ஒரு ஆல்பத்தில்திறமை காட்டும் சந்தர்ப்பம் வந்தது. ஜாலியாக அதை முடித்துக் கொடுத்தார்.

அதைப் பார்த்து தெலுங்கில் நடிக்கும் வாய்ப்பு வரவே, பாதை மாறிப்போய் தென்னிந்தியாவுக்கு வர வேண்டியதாயிற்றாம்.

சிவாஜி அனுபவம் எப்படி?

இப்பத்தான் ரிலாக்ஸ்டாக இருக்கிறேன். எனது போர்ஷன் முடிந்து விட்டது. சிறப்பாக வந்துள்ளது படம். சூப்பர் ஸ்டார் நடிப்பைப் பார்த்துரசிகர்கள் மிரளப் போகிறார்கள். அவ்வளவு கலக்கலாக அசத்தியுள்ளார் தலைவர்.

இந்தப் படத்தை என்னால் மறக்கவே முடியாது. அவ்வளவு அனுபவங்கள். ரஜினி சார் எனக்கு நிறைய அட்வைஸ்கள் கொடுத்துள்ளார், நடிப்புக்குடிப்ஸ் கொடுத்துள்ளார். நிறையப் பேசுகிறார், ஆனால் அதில் ஒரு வார்த்தை கூட அனாவசியானது கிடையாது. அதுதான் சூப்பர் ஸ்டார்!

படக் காதலில் கலக்குகிறீர்கள். நிஜக் காதல் அனுபவம்?

அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை. இதுவரை நான் காதலிக்கவில்லை. இனிமேல் வருமோ, தெரியாது. ஆனால் நிறையப் பேரை நான் சைட்அடித்துள்ளேன். அழகான ஆண்களைப் பார்த்தால் ஆச்சரியப்படுவேன். ஆனால் அது ஒருபோதும் காதலாக மாறியதில்லை.

ஆண்களைப் பார்த்ததும் காதல் வரும் என்று கூறுவது சும்மா டுபாக்கூர். பெண்கள் அவ்வளவு சீக்கிரம் யாரிடமும் விழ மாட்டார்கள். ரொம்பதிடமானவர்கள் நாங்கள்.

நடிப்பில் கிளாமர் மட்டும்தானா?

கிளாமர் எனக்குப் பிடித்திருக்கிறது. உடலும் ஒத்துழைக்கிறது. ஆனால் ஆபாசமாக இருக்கும்படியாக நடிக்க மாட்டேன். ரசிக்கும்படியாகத்தான்எனது கிளாமர் இருக்கும். காமெடி ரோல்களில் நடிக்கவும் ரொம்ப ஆசை.

பார்ட்டி பறவையாமே நீங்கள்?

பார்ட்டிகளுக்குப் போவதில் தப்பே இல்லை. ஆனால் தண்ணி அடிப்பதும், தாறுமாறாக ஆடுவதும்தான் தப்பு. அதை நான் செய்ய மாட்டேன்,செய்ததும் இல்லை.

எனக்கு மது அருந்தும் பழக்கம் எல்லாம் கிடையாது. நான் தண்ணி அடிப்பதாகவும், டான்ஸ் ஆடுவதாகவும் வரும் தகவல்கள் எல்லாமே பொய்.உண்மையில் நான் வெறும் பச்சத் தண்ணியை மட்டும்தான் குடிப்பேன், ரொம்பவும் விரும்பி அருந்துவது இளநீர்.!

எனக்கு நிறைய பிரண்ட்ஸ். அவர்கள் பார்ட்டிக்குப் போவார்கள். நான் கூடமாட ஒத்தாசையாக உடன் போவேன், அவ்ளோதான் என்று கண்கள்மின்ன முடித்தார் ஷ்>யா.

பச்சப் புள்ளையா இருக்காரே ஷ்ரியா!

Please Wait while comments are loading...