ஸ்ரீ எங்கே இருக்கானே தெரியல.. ஃபோனை எடுக்கல.. அவன் ரொம்ப பாவம்..தோழி கதறல்!

சென்னை: தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகரான ஸ்ரீ. வழக்கு எண் 18/9 என்ற படம் மூலமாக நடிகராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல் படமான மாநகரம் படத்தின் கதாநாயகனாக நடித்து, மக்கள் மனதில் இடம் பிடித்தார். ஆனால், நடிகர் ஸ்ரீ தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் பதிவிடும் புகைப்படங்களும், வீடியோக்களும் ரசிகர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீயின் பரிதாபமான நிலை குறித்து பலரும் பல விதத்தில் பேசிவரும் நிலையில், ஸ்ரீயின் தோழி தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், நடிகர் ஸ்ரீ instagram பக்கத்தில் இருந்து வெளியிட்ட போட்டோ, வீடியோவை பார்த்துவிட்டு, தோழி என்கிற முறையில் நான் அவனை விசாரித்து இருந்தேன். சிலர் அந்த மெசேஜ்களை பார்த்து விட்டு, என்க்கு மெசேஜ் அனுப்பியதால் நான் இந்த வீடியோவை போடுகிறேன். அவனுடைய போஸ்ட்க்கு கீழே இவ்வளவு கமெண்ட் பாக்குறதுக்கு சந்தோஷமா இருக்கும். அவனுக்கு நிறைய பேரோட சப்போர்ட், நிறைய அன்பு கிடைத்தது பார்த்து சந்தோஷமா இருந்தாலும், ஒரு சில நிறைய கேள்விகள், நிறைய தவறான தகவல்களோடு பேசிட்டு இருக்கீங்க அது ரொம்ப கஷ்டமா இருக்கு.

Shri instagram vidoe

அவன் GAYஇல்ல: அவன நினைத்து கஷ்டப்படுறவங்க, அதாவது அவங்க மேல உண்மையான அக்கறை இருக்கிறவங்களுக்கு நான் சொல்லிக்க வேண்டியது ஒன்னே ஒன்னு தான். அவன் இருக்கிறது லொகேஷன் டிராக் பண்ண முடியல, எத்தனை முறை ஃபோன் எடுத்தாலும் எடுக்கவில்லை. அவன் போதைக்கு அடிமையானவனோ, GAYயோ கிடையாது. இதற்காக நான் LGBTQக்கு எதிரானவள் கிடையாது என்பதை இதில் பதிவு செய்து கொள்ள விரும்புகிறேன். ஒருவேளை அவன் GAYயாக இருந்தாலும், அது அவனுடைய தனிப்பட்ட விஷயம். மேலும், ஸ்ரீ மற்றொரு படத்திற்காக தயாராகிக் கொண்டிருக்கிறான் என்றெல்லாம் செய்திகள் வருகிறது. ஆனால், அப்படி எதுவும் இல்லை. ஸ்ரீயினுடைய மனநிலை தற்போது சரியில்லை. ஸ்ரீயால் தன்னை சரியாக கவனித்துக் கொள்ள முடியவில்லை.

Shri instagram vidoe

எங்கே இருக்கானு தெரியல: ஸ்ரீயால் தன்னுடைய மாத்திரைகளை சரியாக எடுத்துக் கொள்ள முடியவில்லை என்கிற பட்சத்தில், அதனால் ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமாக தான், ஸ்ரீ இன்றைக்கு இந்த நிலைமையில் இருக்கிறான். இதனால், தயவுசெய்து இந்த விஷயத்தை ஒரு பெரிய பிரச்சனையாக்கி அதன் மூலம் யாரும் ஆதாயம் தேட வேண்டாம். தயவுசெய்து யாருக்காவது ஸ்ரீ இருக்கும் இடம் தெரிந்தால், என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கமெண்ட் போடுங்கள். இவனுக்கு இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்கிற விஷயம் கூட தெரியாது. அவன் தனிமையில் இருந்திருக்கிறான், டிப்ரசனோட நிறைய போராடி இருக்கிறான். அவனுடைய உடல்நிலை பற்றி பேசுவதற்கு எனக்கு விருப்பம் இல்ல. அதை நீங்கள் மதிப்பீங்க என்று ரொம்ப நம்புறேன்.

இப்போது ஸ்ரீ செய்யும் செயல்கள் எல்லாம், சரியான மனநலமையில் இருந்து பண்ற வேலை கிடையாது. அவன் போதைக்கு அடிமையில்லை, கடைசியா அவன் கூட இருந்த நண்பரிடம் நான் பேசி கன்பார்ம் பண்ணி இருக்கேன். சிரிச்சி சந்தோஷமா, உங்களை என்னை மாதிரி நல்லா இருந்த ஒரு பையன் பல காரணங்களால், அவனோட உடம்பு சரியில்லாததால் அவன் இப்படி இருக்கான். தயவு செய்து தவறாக தகவல்களை பரப்பாதீங்க உங்களால முடிஞ்சா, அவன் இருக்கும் இடம் தெரிஞ்சா என்னிடம் சொல்லுங்க என ஸ்ரீ யின் தோழில் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X