3 படத்தில் ஸ்ருதி உருவில் என்னைப் பார்த்தேன்- கமல் பெருமிதம்
லாஸ் ஏஞ்சல்ஸுக்குப் புறப்படும் முன் இந்தப் படத்தை கமலுக்கு போட்டுக் காட்டினார்களாம் தனுஷும் ஐஸ்வர்யாவும்.
படம் பார்த்துவிட்டு, மகளை பாசத்துடனும் பெருமையுடனும் தழுவி உச்சிமுகர்ந்த கமல், யாருடைய பயிற்சியும் அறிவுரையும் இன்றி தன் சுய முயற்சியில் இத்தனை தூரம் நடிப்பில் ஸ்ருதி முன்னேறியிருப்பதை ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார் கமல்.
அவர் கூறுகையில், "பொதுவாக ஸ்ருதி அவரது அம்மா போல இருப்பதாக சொல்வார்கள். ஆனால் இந்தப் படத்தில் ஸ்ருதி உருவில் என்னைப் பார்த்தேன். இதை ஒரு தந்தையாக இருந்து சொல்லவில்லை. ஒரு நடிகையாக இப்போது அவர் வந்திருக்கும் இடம் மகிழ்ச்சியளிக்கிறது," என்றார்.
துணிச்சலான பெண் இயக்குநர், இதுவரை எந்த பெண் இயக்குநரும் இந்த மாதிரி முயன்றதில்லை என ஐஸ்வர்யாவையும் பாராட்டியுள்ளார் கமல்.
இந்தப் படம் மே மாதம் இந்தியில் வெளியாகிறது.
இந்திப் பதிப்பில் சில மாறுதல்களைச் செய்யுமாறு அட்வைஸும் கொடுத்துள்ளார் கமல். தமிழ்ப் படம் என்பதைக் காட்டும் சில காட்சிகளை மட்டும் இந்திக் கேற்ப மாற்றச் சொன்னாராம்.


Click it and Unblock the Notifications












