சிம்பு,விஷாலுக்கு விரைவில் திருமணம்.. கணவன் மனைவி உறவை காப்பது குழந்தைகள் தான்.. நடிகர் ஸ்ரீகாந்த்!
சென்னை: அவினி சினி மேக்ஸ் மற்றும் பென்ஸ் மீடியா தயாரிப்பில் சுந்தர்.சி. இயக்கத்தில் நடிகர்கள் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், யோகிபாபு, நடிகைகள் மாளவிகா சர்மா, அமிர்தா, சம்யுக்தா, ரைசா, டி.டி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் காபி வித் காதல்.
இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நவம்பர் 4ம் தேதி வெளியிடுகிறது. இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த், நடிகை சம்யுக்தா நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.

மறக்க முடியாத நினைவுகள்
கேள்வி: ஸ்ரீகாந்த், காபி வித் காதல் படத்திலிருந்து நீங்கள் புதிதாக கற்றுக் கொண்டது என்ன?
பதில்: இப்படத்தின் மூலம் நல்ல நண்பர்களும், உறவுகளும் கிடைத்துள்ளது. நேர்மறையான உணர்வும், ஆற்றலும் கிடைத்துள்ளது. மறக்க முடியாத நினைவுகளுடன் படத்தை முடித்து, அதிலிருந்து வெளிவந்திருக்கிறோம் என்றார்.

கவர்ச்சி இல்லை
கேள்வி: ஸ்ரீகாந்த், உங்களுக்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை சம்யுக்தா குறித்து நீங்கள் கூற விரும்புவது?
பதில்: காபி வித் காதல் படக்குழுவினரை பொறுத்தவரை, நானும், சம்புக்தாவும் தான் புதுமுகங்கள். நடிகை சம்யுக்தாவை பொறுத்தவரை அவர் ஒரு Nutriontist. அவரை இன்ஸ்டாகிராமில் பின்தொடருபவர்கள் அதிகம். அவர்கள் கொடுக்கும் ஆலோசனையை பின்பற்றுகிறார். இதனால் அவரது உடலமைப்பை நன்றாக வைத்துள்ளார். இது குறித்து இயக்குனர் சுந்தர்.சி. என்னிடம் கூறுகையில், ரொம்ப அழகான பெண்ணை குடும்பத் தலைவியாக எந்தவிதமான கிளாமரும் இல்லாமல் இப்படத்தில் காட்டியுள்ளோம். இது உண்மையில் ரொம்ப கொடுமையான விஷயம் தான் என்றார். மேலும் நடிகை சம்யுக்தாவை பொறுத்தவரை அவர் ஒரு கிளாசிக்கல் டான்ஸர். அவரது கண்கள் அங்கும், இங்கும் சென்று கொண்டிருக்கும் என்றும் தெரிவித்தார்.

நிறைய டேக் வாங்குவேன்
கேள்வி: சம்யுக்தா, ஸ்ரீகாந்த் குறித்து உங்கள் கருத்து?
பதில்: ஸ்ரீகாந்த்-ஐ பொறுத்தவரை ரொம்ப ஒழுக்கமானவர். அவருக்கு வீட்டிலிருந்து பாதாம், பிஸ்தா போன்றவற்றை கொடுத்தனுப்புவார்கள். அதை அவர் சாப்பிட்டு உடம்பை ரொம்ப அழகாக பராமரித்து வருகிறார். படப்பிடிப்பின்போது, நாங்களும் அதை பறித்து சாப்பிடுவோம் என்றார். மேலும் அவர் கூறுகையில், நான் படப்பிடிப்பின்போது நிறைய டேக் வாங்குவேன். நடிகை ஸ்ரீகாந்த் கோபப்படமாட்டார். அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். எந்தெந்த காட்சிகளை எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லித்தருவார்.

சின்னவீடு பாக்கியராஜ்
கேள்வி: ஸ்ரீகாந்த், இந்த படத்தில் உங்களுடைய கதாபாத்திரம் குறித்து...
பதில்: சின்னவீடு திரைப்படத்தில் நடிகர் பாக்கியராஜ் கதாபாத்திரம் என்னவோ, அந்த கதாபாத்திரம் தான் இப்படத்தில்.
இந்த படமான சினிமாட்டிக் படம் கிடையாது. மனிதர்களின் உணர்வுகளை பிரதிபிலிக்கும் படமாக இருக்கும். எனக்கும், நடிகை சம்யுக்தாவுக்கும் இடையே விவாதம் கூட அழகாக காட்டப்பட்டிருக்கும். குடும்பத்தில் உறவுகள் முக்கியம் என்பதை இப்படத்தில் காட்டப்பட்டிருக்கும். ஏதோ ஒரு சம்பவத்தால் கணவன், மனைவி இருவரும் பிரிந்து போய் விட முடியாது. நிஜவாழ்க்கையை அப்படியே காட்டியிருக்கோம்.பொதுவாக திருமண வாழ்க்கையில் நிறைய சண்டைகள் வரும். இன்னும் சொல்லப்போனால் கோவிட் காலக்கட்டங்களில் கணவன், மனைவி இருவரும் அதிகமாக ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். இதனால் அவர்களிடம் இருந்த எல்லா குறைகளும் அப்படியே தெரிந்தது. அவர்களுடைய ஈகோவும் தலைதூக்கியது. என்னை பொறுத்தவரை கணவன், மனைவி இருவரும் அதிகம் நேரம் பார்த்துக் கொள்ளாமல் தனித்தனியே சென்று விட வேண்டும். இந்த பிரச்னைகளிலிருந்து கணவன், மனைவி இருவரையும் பாதுகாப்பது குழந்தைகள் மட்டும் தான் என்றார். கதையை பொறுத்தவரை எனக்கு தம்பியாக ஜெய் நடித்திருப்பார். நான் மூத்தவன். நான் தான் குடும்பத்தை வழிநடத்த வேண்டும். ஆனால் நான் ஜாலியாக இருப்பேன் என்றார். நடிகர் கிங்ஸ்லி, என்னை போனில் அழைத்து என் நடிப்பை பாராட்டியது ரொம்ப பெருமையாக இருந்தது என்றார்.

மியூசிக்கல் படம்
கேள்வி: இப்படத்தின் பாடல்கள் குறித்து நீங்கள் கூற விரும்புவது?
பதில்: காதல் என்பது அற்புதமானது. அன்று முதல் இன்று வரை காதல்படங்கள் தான் வெள்ளிவிழா படமாக அமைந்து வருகிறது. சண்டைக்காட்சிகள் நிறைந்த படம் மாஸாக இருக்கும். தற்போது வரக்கூடிய திரைப்படங்களில் பாடல்கள் என்பது மிகவும் குறைந்து காணப்படுகிறது. பிரபலமான கதாநாயகர்களின் படங்களில் மட்டும் பாடல்கள் இடம்பெறுகின்றன. மற்ற படங்களில் பாடல்கள் இடம்பெறுவதில்லை. இந்த படத்தில் 8 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. காபி வித் காதல் ஒரு மியூசிக்கல் படம். மியூசிக் தொடர்பான காட்சிகளும், கதைகளும் அருமையாக இருக்கும். காதல் என்பது காற்றிற்கு அடுத்தப்படியாக அனைத்து இடங்களிலும் காணப்படுகிறது. காதலில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது என்றார்.

சுந்தர்.சி.யின் கனவுப்படம்
கேள்வி: இயக்குநர் சுந்தர்.சி குறித்து நீங்கள் கூற விரும்புவது?
பதில்: இயக்குநர் சுந்தர்.சி. மற்றும் நடிகை குஷ்பூ ஆகியோர் ரொம்ப திறமையானவர்கள். ஒருவரையொருவர் புரிந்து கொண்டு வாழ்கிறார்கள். ஏன் இதை கூறுகிறேன் என்றால், நான் இயக்குநர் சுந்தர்.சி. யின் திருமணநாளையொட்டி ஒரு விருந்து ஒன்று ஏற்பாடு செய்திருந்தேன். ஆனால் சுந்தர்.சி.யின் எண்ணம், அனைத்தும் மறுநாள் படப்பிடிப்பிற்காக மட்டுமே யோசித்து கொண்டிருந்தார். இது குறித்து நடிகை குஷ்பூ கூறும்போது, அவர் இப்படி இருந்தால் போதும் என்றார். இப்படத்திற்காக இயக்குநர் சுந்தர்.சி. ரொம்ப அதிகமாக உழைத்துள்ளார். இது குறித்து அவரிடம் கேட்டபோது, இந்த கதையானது என்னுடைய வழக்கமானது அல்ல. படம் நன்றாக வர வேண்டும். இப்படமானது என்னுடைய கனவுப்படம் என்றார்.

ஜாலியான டீம்
கேள்வி: சம்யுக்தா, இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து...
பதில்: இந்த படத்தில் 30 நாட்கள் பணிபுரிந்த மாதிரி எனக்கு தெரியவில்லை. ஏனென்றால் 30 நாட்கள் சுற்றுலா சென்று வந்தது போல் உணர்ந்தேன். மேலும் திறமையான, மூத்த நடிகர்களுடன் பணிபுரிந்து சிறந்த அனுபவம்.
கல்யாண புரோக்கர்
கேள்வி: ஸ்ரீகாந்த், இப்படத்தில் உங்களுக்கு பிடித்த வசனம் எது?
பதில்: நடிகர் யோகிபாபுக்கு இப்படத்தில் Wedding Planner கதாபாத்திரம். அவருக்கு முதலில் என்னவென்று தெரியாது. பின்பு தான் அவருக்கு தெரிய வந்தது என்றால் கல்யாண புரோக்கர் என்பது. திருமணம் நடக்க வேண்டும் என்று பிரிவினரும், திருமணம் நடக்கக்கூடாது என்று ஒரு பிரிவினரும், திருமணம் நடந்தால் என்ன? நடக்காவிட்டால் என்ன? யாருடனும் வாழலாம் என்ற எண்ணத்தில் ஒரு பிரிவினர். இந்நிலையில் நடிகர் சிம்பு, விஷாலுக்கு கூட திருமணம் நடைபெறும். இந்த குடும்பத்தில் திருமணம் நடக்காது என்று நடிகர் யோகிபாபு கூறும் வசனம் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/jSMpaYGqask இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.


Click it and Unblock the Notifications