நான் சாமியாராவது விதி என்றால் யாரால் தடுக்க முடியும்... சிம்பு பரபரப்புப் பேட்டி

By Mayura Akilan

சென்னை: நான் சாமியாராக வேண்டும் என்று விதி இருந்தால் நடந்து விட்டுப் போகட்டுமே என்று பரபரப்பாக பேசியுள்ளார் நடிகர் சிம்பு.

நடிகர் சிம்புவின் சமீப கால போக்கு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. சாமியார்கோலத்தில் ஊர் சுற்றுகிறார். இமயமலைக்குப் போகிறார்.

அதேசமயம் நடிகை ஹன்சிகாவையும் காதலிக்கிறார் என்று பேச்சுக்கள் அடிபடுகின்றன. இதுகுறித்து தினத்தந்திக்கு பரபரப்பு பேட்டி அளித்துள்ளார் சிம்பு. அதிலிருந்து சில பகுதிகள்...

யாருடனும் காதல் இல்லை

யாருடனும் காதல் இல்லை

எனக்கு இப்போது யாருடனும் காதல் இல்லை. காதல் இருந்தால், அதை வெளியே சொல்கிற தைரியம் எனக்கு உண்டு.

ஹன்சிகாவை விமான நிலையம் வரை...

ஹன்சிகாவை விமான நிலையம் வரை...

ஹன்சிகாவை விமான நிலையம் வரை சென்று நான் வழியனுப்புவதாக சொல்வது, கேட்பதற்கு, ‘காமெடி'யாக இருக்கிறது.

யார் வந்தாலும் ஏற்பேன்

யார் வந்தாலும் ஏற்பேன்

ஹன்சிகா மட்டுமல்ல, எந்த பெண்ணாக இருந்தாலும் சரி, என்னுள் இருக்கும் ஆத்மா ‘சரி' என்று சொன்னால், அவரது காதலை ஏற்றுக்கொள்வேன்.

மண்டை சொல்வதைக் கேட்பதில்லை

மண்டை சொல்வதைக் கேட்பதில்லை

சமீபகாலமாக மனதளவில் நான் பக்குவப்பட்டு விட்டேன். மண்டையும், மூளையும் சொல்வதை கேட்பதில்லை. உள்ளுக்குள் இருக்கும் ஆத்மா சொல்கிறபடி நடக்கிறேன்.

திருமணம் எப்போது

திருமணம் எப்போது

எனது திருமணம் எப்போது நடக்கும் என்று சொல்ல முடியாது. நான் சமீபகாலமாக எதையும் திட்டமிடுவதில்லை.

சாமியார் ஆனால் ஆகட்டுமே

சாமியார் ஆனால் ஆகட்டுமே

ஆன்மிகத்துக்கு போனால், சாமியார் ஆகிவிட வேண்டுமா என்ன? நான் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டிருப்பது உண்மை. ஆனால், சாமியார் ஆகவில்லை. ஒருவேளை நான் சாமியார் ஆக வேண்டும் என்று விதியிருந்தால், அப்படி நடந்துவிட்டுப் போகட்டும்.

வாலு எப்போ...?

வாலு எப்போ...?

வாலு படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்து விட்டது. இன்னும் கொஞ்சம்தான் பாக்கி. அதை சீக்கிரமே முடித்து விடுவோம். அடுத்து அந்த படம்தான் திரைக்கு வரும் என்று கூறியுள்ளார் சிம்பு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X