»   »  ஹீரோயின் சான்ஸ் தேடும் சிம்ரன்

ஹீரோயின் சான்ஸ் தேடும் சிம்ரன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹீரோ யாராக இருந்தாலும் சரி, அவருடன் ஜோடி போட்டு நடிக்கத் தயார், ஆனால் ஹீரோயினாக மட்டுமேநடிப்பேன் என அடம் பிடிக்கிறார் அம்மா சிம்ரன்.

ஒரு காலத்தில் கோலிவுட்டை ஆட்டிப் படைத்த சிம்ரன், திடீரென கல்யாணம் செய்து கொண்டு, சூட்டோடு சூடாகஒரு குழந்தைக்கு தாயாகி அக்கடா என செட்டிலானார்.

குடும்ப ஸ்திரீயாக மாறியும் கூட சினிமா தொடர்பை விட்டு விட தயாரில்லை சிம்ரன். அவ்வப்போது நடிக்கத்தயார், நடிக்கத் தயார் என்று கோடம்பாக்கத்துக்கு நூல் விட்டுக் கொண்டே இருந்தார். கூடவே கணவருக்கும்வேடம் வேண்டும் என நூல் கண்டையும் தூக்கிப் போட்டார்.

இதனால் வெருண்டு போன தயாரிப்பாளர்கள், இது கதைக்கு ஆகாதே என்று சிம்ரனை புறக்கணித்து விட்டனர்.பொறுத்துப் பார்த்த சிம்ரன் தெலுங்குப் பக்கம் பார்வையைத் திருப்பினார். அவரது விடாத முயற்சியால்,இப்போது பாலகிருஷ்ணாவுடன் ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது.

ஒக்க மகடு என்ற படத்தில் சிம்ரன் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதில் அவருக்கு ரெட்டை வேடமாம். ஒருகேரக்டர் ஓல்டு கெட்டப்பிலாம், இன்னொரு வேடம் இளமையான சிம்ரனாம்.

சரி தமிழ்ப் பக்கம் எப்போ வரப் போகிறீர்கள் என்று விளம்பரப் படத்தில் நடிக்க சென்னைக்கு வந்திருந்தசிம்ஸிடம் கேட்டால், தமிழாகட்டும், வேறு எந்த மொழியாகட்டும், நான் ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன்.செகண்ட் ஹீரோயினாக நடிக்கவே மாட்டேன் என்கிறார் விடாப்பிடியாக.

தொடர்ந்து அவரே, யாருடனும் ஜோடியாக நடிக்கத் தயாராக உள்ளேன். ஆனால் ஹீரோயினாக மட்டுமேஎன்றும் பாயிண்ட் வைக்கிறார் சிம்ஸ். சரி, வடிவேலு நடிக்கப் போகும் இந்திரலோகத்தில் நா. அழகப்பன்படத்தில் அவருக்கு ஜோடி போட கேட்டார்களாமே என்று கேட்டோம்.

அவருக்கு ஜோடியாக நடிக்க என்னை யாரும் கேட்கவில்லை. அது தவறான செய்தி என்கிறார். சமீப காலமாகதமிழ்ப் படங்கள் எதையும் பார்க்கவில்லையாம் சிம்ரன். அவர் இப்போது பார்க்க விரும்பும் ஒரே படம் வரலாறுதானாம். அஜீத் அசத்தியுள்ளாராமே என்று முகத்தில் ஆச்சரியம் காட்டுகிறார்.

சிம்ரனுக்கு ஒரு வருத்தமும் இருக்கிறதாம். சென்னையில் தான் இல்லாததால், தன்னைப் பற்றி பல தவறானதகவல்கள் பரவி விட்டதாம். ராஜசேகர் என்பவர் இயக்கும் படத்தை சிம்ரன்தான் தயாரிப்பதாக வெளியானசெய்தியும் அதில் அடக்கம். அப்படி ஒரு படத்தை நான் தயாரிக்கவே இல்லை என்கிறார் சிம்ரன்.

ராஜசேகர் அப்படம் குறித்து என்னிடம் பேசினார். ஆனால் நான் அதுகுறித்து இன்னும் யோசிக்கவே இல்லைஎன்கிறார்.

கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை. இது சிம்ரனுக்கு ரொம்ப ரொம்ப பொருந்தும்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil