»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Subscribe to Oneindia Tamil

அடுத்த ஆண்டு ஜனவரியில் காதலர் தீபக்கை மணக்கிறார் சிம்ரன்.

சிம்ரனுக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்கும் என்பது செவி வழிச் செய்தியாகப் பரவலாகத் தெரிந்திருந்தாலும், அவர்நேரடியாக இந்த விஷயத்தை இதுவரை தெரிவிக்காமல் இருந்தார்.

இந் நிலையில் அவர் நமக்களித்த சிறப்புப் பேட்டி:

எனக்கும் தீபக்கிற்கும் கடந்த மே மாதமே நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது.

டெல்லியில் தீபக்கின் வீட்டில் எங்களுக்குநிச்சயம் நடந்தது. இதை குடும்ப விஷயமாக வைத்திருக்க விரும்பினேன். அதனால் தான் வெளியில்பெரிதுபடுத்தவில்லை.

திருமணத் தேதி இன்னும் முடிவு செய்ய வில்லை. வரும் ஜனவரியில் இருக்கலாம்.

தீபக்கை சந்தித்தது எப்படி?

நாங்கள் இருவரும் சிறு வயது நண்பர்கள். 17 வருடங்களாக ஒருவருக்கொருவர் பரிச்சயமானவர்கள்.

வேலை காரணமாக பிரிந்து போன நாங்கள் கடந்த ஜனவரி மாதம் ஒரு நிகழ்ச்சியில் மீண்டும் சந்தித்துக் கொண்டோம்.அப்போதுதான் இவன் எனக்குரியவன் என்பதை உணர்ந்து கொண்டேன்.

இந்த விஷயத்தை தீபக்கின் குடும்பத்தினரிடம் தெரிவித்தபோது அவரது தந்தை "உங்கள் திருமணத்தால் இருகுடும்பங்களுக்கும் மகிழ்ச்சிதான் என்று சொல்லி நிச்சயத்துக்கு ஏற்பாடு செய்தார்.

நடிப்புக்கு இடைவேளை:

கல்யாணத்துக்குப் பிறகு நடிப்பைத் தொடரவே விருப்பம். கல்யாணம் முடிந்த பிறகு சின்ன இடைவேளை எடுத்துக்கொள்வேன்.

எனக்கென ஒரு குடும்பம், வீட்டை அமைத்த பிறகு சில மாதங்களில் மீண்டும் நடிக்க வந்துவிடுவேன்என்றார் விரைவில் குடும்பப் பெண்ணாகப் போகும் சிம்ரன்.

தற்போது தமிழில் எஸ்.ஜே.சூர்யாவுடன் நியூ படத்திலும், இந்தியில் மணிரத்னத்தின் யுவா படத்தில் நடித்து வரும்சிம்ரன், திருமணம் காரணமாக அதன் தமிழ் பதிப்பில் நடிக்க மறுத்துவிட்டார்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil