»   »  சந்தில் புகுந்த சிந்து!

சந்தில் புகுந்த சிந்து!

Subscribe to Oneindia Tamil

மலையாளத்தில் மீரா ஜாஸ்மின் நடிப்பதாக இருந்த படத்தில் சிந்து மேனன்நடிக்கவுள்ளார்.

சிந்துவை தமிழில் நிறையப் பேர் மறந்திருப்பார்கள். காரணம் அவர் தமிழை விட்டுமலையாளத்துக்குப் போய் ரொம்ப காலமாகி விட்டது.

தமிழில் சில படங்களில் நடித்தவர்தான் சிந்து. ஆனால் அவரது நேரம் சரியில்லையோஎன்னவோ, சிந்துவுக்கு தமிழில் தொடர்ந்து நல்ல வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதனால் தாய் மொழியான மலையாளத்துக்குத் தாவினார் சிந்து. அங்கு போன நேரம்சூப்பராக இருந்ததால் சில படங்கள் கிடைத்தன சிந்துவுக்கு. தொடர்ந்துகன்னடத்திலும் நடிக்க ஆரம்பித்து கிளாமரில் கலக்கி, பெங்களூரிலேயேகுடும்பத்தோடு செட்டிலாகிவிட்டார்.

இடையில் கோபிகா, நயனதாரா, காவ்யா என புதுப் புது நடிகைகள் குவிந்ததால் சிந்துமுயற்சித்தும் கூட மலையாளம் கை கொடுக்கவில்லை. இருந்தாலும் தொடர்ந்துமுயற்சித்த சிந்துவுக்கு இப்போது புதுப் பட வாய்ப்பு கிடைத்துள்ளது.

சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் திலீப் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் சிந்துதான்ஹீரோயின். உண்மையில் இப்படத்தில் ஹீரோயினாக கேரளாவைச் சேர்ந்த மீராஜாஸ்மின்தான் நடிப்பதாக இருந்தது. காரணம் அந்திக்காடின் ஆஸ்தான ஹீரோயினாகமீராதான் இருந்து வந்தார்.

ஏற்கனவே அந்திக்காடு இயக்கத்தில் உருவான ரசதந்திரம், அச்சுவிண்ட அம்மா ஆகியமலையாள படங்களில் மீராதான் ஹீரோயினாக நடித்திருந்தார். எனவேஅந்திக்காடசின் புதுப் படத்திலும் மீராவே திறமை காட்டுவார் எனஎதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் திடீரென மீராவைத் தூக்கி விட்டு சிந்துவை ஹீரோயினாக்கி விட்டார்அந்திக்காடு. மீராவின் நீக்கத்திற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. ஆனால்மீரா இல்லை என்று தெரிந்த அடுத்த விநாடியே அந்திக்காடை அப்ரோச் செய்த சிந்துவாய்ப்பைப் பறித்து விட்டார்.

இனிமேல் தமிழுக்கு வர மாட்டீங்களா என்று சிந்துவிடம் ஏக்கமாக கேட்டால்,அப்படியெல்லாம் இல்லை. கன்னடத்தில் எனக்கு நல்ல நல்ல கேரக்டர்கள்கிடைக்கின்றன. எனவேதான் தொடர்ந்து அங்கு நடித்து வருகிறேன்.

தமிழில் அப்படிப்பட்ட வாய்ப்புகள் வரவில்லை. எனவேதான் தமிழில் என்னைப்பார்க்க முடியவில்லை. நிச்சயம் நல்ல கேரக்டர் கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன்என்று சின்னதாக சிரித்து வைத்தார் சிந்து.

பெங்களூரில் இருந்தபடியே இடையிடையே சான்ஸ் தேடி கோலிவுட்டில் தனது புதுப்புது கிளாமர் ஆல்பங்களை சுற்றுக்கு விட்டு வந்தவர் சிந்து மேனன் என்பதுகுறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil