எனது காரை நானே உடைக்கும் அளவுக்கு அசிங்கமானவன் இல்லை-சாமி

சாமி இயக்கும் படங்கள்தான் சர்ச்சையாகும். அந்த வரிசையில் சமீபத்தில் அவரது இயக்கத்தில் வெளியான, கள்ளக்காதலை மையமாகக் கொண்ட கதையுடன் கூடிய சிந்துசமவெளி படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. ஆனால் தற்போது சாமியே சர்ச்சையில் மாட்டியுள்ளார்.
மாமனார், மருமகள் கள்ளக்காதலை பற்றிப் படம் எடுத்ததால், தன்னை பலர் மிரட்டுவதாகவும், காரைத் தாக்கி விட்டதாகவும், தனக்கும், பட நாயகி அனகாவுக்கும் கொலை மிரட்டல்கள் வருவதாகவும் போலீஸில் புகார் கொடுத்தார் சாமி.
ஆனால் சாமியே காரைத் தாக்கி உடைத்து விட்டு பொய்யான புகாரைக் கொடுத்திருக்கலாம், அதேபோல கொலை மிரட்டலும் கூட பொய்யானதாக இருக்கலாம் என போலீஸாருக்கு சந்தேகம் வந்துள்ளது. இதுதொடர்பாக அனகாவையும், சாமியையும் அழைத்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து சாமி கூறுகையில்,
என் வீட்டில் நிறுத்தி இருந்த எனது கார் மீது விஷமிகள் கல்வீசியது உண்மை. நானே காரை உடைத்து விட்டு போலீசில் புகார் அளித்தேன் என்று வதந்தி பரப்புகின்றனர். இது எனக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியது. அப்படியெல்லாம் அசிங்கமான காரியத்தில் ஈடுபட மாட்டேன். எனது நேர்மையும் தைரியமும் எல்லோருக்கும் தெரியும்.
இது மாதிரி மலிவான விளம்பரம் தேடும் ஆள் நான் இல்லை. மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்வது எனது பழக்கம். நானே எனது காரை உடைத்தேன் என்பதெல்லாம் திட்டமிட்டு பரப்பப்படும் வதந்திகள். எனக்கு கொலை மிரட்டல்கள் வந்ததும் உண்மை. போலீசில் புகார் அளித்த பிறகு மிரட்டல் எதுவும் வரவில்லை என்றார்.


Click it and Unblock the Notifications











