இப்போ வில்லன்.. சீக்கிரம் ஹீரோவாயிடுவேன்! - பாடகர் மனோ மகன் ஷாகீர்

ஆனால் தனது கனவு ஹீரோவாக வருவதுதான் எனும் ஷைகீர், சமீபத்தில் தனது தந்தை மனோவுடன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
மகனை நடிகராக்கியது குறித்து மனோ கூறுகையில், "நான் இந்தளவு வரக் காரணம் இசைஞானி இளையராஜாதான். இப்போது எனது மகனையும் நடிகராக அறிமுகப்படுத்தி உள்ளேன்.
நானிருக்கும் சினிமா துறையிலேயே எனது மகனையும் அறிமுகப்படுத்துவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ரஜினி, கமல் உள்பட சாதனையாளர்கள் வாழ்த்தியிருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி. தேவை ஏற்பட்டால் மகனுக்காக படம் தயாரிக்கவும் தயாராக இருக்கிறேன்," என்றார்.
ஷாகிர் கூறும்போது, "எனது தந்தையால் சிறுவயதிலிருந்தே சினிமாவால் ஈர்க்கப்பட்டேன். நடனம் கற்றேன். 'நாங்க' படத்தில் வில்லனாகி உள்ளேன். கதாநாயகனாக நடிக்க ஆசைப்பட்டேன். இயக்குனர் செல்வா என்னை வில்லனாக்கி விட்டார்.
இருப்பினும் மனம் தளராமல் போராடுவேன். நல்ல வேடங்களில் நடித்து எனக்கென்று தனி இடத்தை பிடிப்பேன். ஹீரோவாகவும் நடிப்பேன். நான் ஒரு சிறந்த நடிகன் என்ற நிலைக்கு நிச்சயம் வருவேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











