இரண்டு பாட்டு பாடினாலே ஈகோ வந்துடுது.. ஜட்ஜாக இருப்பது ரொம்ப கஷ்டம்.. பாடகர் மனோ பேட்டி!

சென்னை: விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் உள்ளிட்ட ஏகப்பட்ட இசை நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்த பிரபல பின்னணி பாடகர் மனோ, தற்போது ஜி தமிழில் ஒளிபரப்பாகவுள்ள ஸ்டார் டு ராக்ஸ்டார் நிகழ்ச்சியிலும் நடுவராக செயல்பட்டு வருகிறார்.

Singer Mano talks about Zee Tamil Star to Rockstar reality show!

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிற அனைவருமே பாடகர்கள் என்பது தான் இந்த நிகழ்ச்சியின் தனிச் சிறப்பு.

பாடகர் மனோ அளித்துள்ள இந்த பேட்டியில், ஸ்டார் டு ராக் ஸ்டார் ஒரு நல்ல முயற்சி என்றும் ஜி தமிழ் ஆரம்பித்துள்ள இந்த நிகழ்ச்சி அடுத்த ஆண்டு முதல் எல்லா டிவிகளிலும் ஆரம்பம் ஆகும் என்றும் கூறியுள்ளார்.

தனக்கு பிடித்த பாடல் என சிங்கார வேலன் படத்தில் இடம்பெற்ற போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி பாடலை தனது இனிமையான குரலில் பாடகர் மனோ பாடி அசத்தினார்.

இசை நிகழ்ச்சிகளில் நடுவராக இருப்பது எப்படி இருக்கிறது? என்கிற கேள்விக்கு அது ஒரு நெருப்பு நாற்காலி மாதிரி தான். அதிலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் எல்லாம் ஏற்கனவே பாடகர்களாக அறிமுகமானவர்கள்.

இப்போதெல்லாம் இரண்டு பாடல்கள் பாடினாலே அகம் பிடித்து விடுகிறது. அந்த அகத்தை தள்ளி வைத்து விட்டு நிறைகளை கேட்டு சந்தோஷப்படுவது போலவே குறைகளையும் கேட்டு திருத்திக் கொள்வர்கள் வாழ்வில் வெற்றியடைவார்கள் என்கிற கருத்தையும் பாடகர் மனோ பதிவு செய்திருக்கும் பேட்டியை கண்டு மகிழுங்கள்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X