எனது குரல் ஸ்வர்ணலதா மாதிரி இருக்காம்.. பூஜாவுக்கு ஒரே மகிழ்ச்சி!
சென்னை : பிரபல பின்னணி பாடகரான பூஜா தான் பணியாற்றிய இசையமைப்பாளர்களான டி.இமான், ஏ.ஆர்.ரகுமான் மற்றும் யுவன் சங்கர் ராஜாவுடன் பணியாற்றிய அனுபவத்தை பகிர்ந்தார்.
பூஜா விஜய் தொலைகாட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி பின் படங்களில் பாட ஆரம்பித்தார். அப்பா மற்றும் அம்மா என்று இருவரும், எனது கனவுக்கு மிகவும் பக்கத்துணையாக இருந்து என்னை ஊக்கப்படுத்தியது தான், நான் பெரிய பாடகராக காரணம் என்று பகிர்ந்து உள்ளார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கூட பாடும் போது அம்மாவின் ஊக்கமும் பாதுகாப்பும் சிறப்பாக இருந்தது என்றார்.

இசையமைப்பாளர் டி.இமான் பல முறை பல பாடல்களுக்கு அழைத்ததாகவும் ஆனால் எந்த பாடலுக்கும் என் குரல் சரியாக பொருந்தவில்லை எப்படியாவது டி.இமான் பாடலில் பாடி விட வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்ததாகவும் ஏனெனில் டி.இமான் ஒரு மெலடி கிங் என்றும் பகிர்ந்தார். இறுதியாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் வரும் 'பாக்காத பாக்காத' பாடலை பாட வாய்ப்பு கிடைத்ததாகவும் அந்த பாடல் மாபெரும் வெற்றி அடைந்தது என்றும் கூறினார். மேலும் பாக்காத பாக்காத பாடலை கேட்ட நடிகர் சிவகார்த்திகேயன் தொலைபேசியில் பாராட்டியதாகவும் கூறினார்.
பாடகர் பூஜா மெர்சல் படத்தில் ஆலப்போறேன் தமிழன் பாடலில் இடையில் வரும் சில வரிகளை பாடியிருப்பார். இந்த வரிகளை ஏ.ஆர்.ரகுமான் இசையில் அழகாக பாடியிருப்பார் பூஜா. இவரின் குரலை கேட்ட ரகுமான் பூஜாவின் குரல் மறைந்த பிரபல பாடகி ஸ்வர்ணலதாவின் குரலை போல உள்ளது என்று கூறினார் என்றார்.

Recommended Video
மேலும் யுவன்சங்கர் ராஜா பற்றி பகிர்ந்த பூஜா அவரின் இசையில் மூன்று பாடல்களை பாடியிருப்பதாகவும், யுவன் சங்கர் ராஜா மிகவும் அமைதியான இசையமைப்பாளர் என்றும் அதிகமாக பேசமாட்டார் என்று பகிர்ந்து இருக்கிறார் .
பூஜா சிறுவயதில் இருந்தே சமூக பணிகளில் அதிகம் ஆர்வமுடையவர். சிறு வயதில் அதிகபடியாக பொழுதுபோக்கு விஷயங்களை மேற்கொண்டதை விட ஊர் ஊராக சென்று சமூக பணியில் ஈடுபட்டதாக சமீபத்தில் பகிர்ந்து இருந்தார் .


Click it and Unblock the Notifications











