Don't Miss!
- News
ஐயோ! கன்பியூஷனா இருக்கே! ஓபிஎஸ்- இபிஎஸ் கோஷ்டிகளை சமாளிக்க இரு கடிதங்களை அனுப்பியதா மத்திய அரசு?
- Sports
"இவ்வளவு நாளா இது தெரியலையே.. இஷான் கிஷானுக்கு நிறைய விஷயம் தெரியல".. கவுதம் கம்பீர் கடும் விளாசல்!
- Lifestyle
உங்க குடலில் இந்த பிரச்சினைகள் இருந்தால் உங்களால் உடலுறவில் சரியாக செயல்பட முடியாதாம்...பார்த்து நடந்துக்கோங்க
- Technology
உங்கள் வாகனத்தின் மீது எவ்வளவு அபராதம் உள்ளது? கவனம் பாஸ்.! உடனே ஆன்லைனில் செக் செய்யுங்க.!
- Finance
ஹிண்டர்ன்பர்க் சரியான ஆய்வு செய்யவே இல்ல.. எல்லாம் தவறு.. அதானி குழுமம் ஒரே போடு..!
- Automobiles
டாடாவுக்கு எதிராக மிக பெரிய திட்டம்.. மாருதி சுஸுகியின் பார்வை இந்த பக்கமும் திரும்பிடுச்சா!!!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
பிரபலங்களின் அந்தரங்க லீலைகள்.. சுச்சி லீக்ஸ் வீடியோக்கள் வெளியானது எப்படி? மனம் திறந்த பிரபல பாடகி!
சென்னை: திரை பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியானது குறித்து மனம் திறந்துள்ளார் பிரபல பாடகியான சுசித்ரா.
Recommended Video
ஆர்ஜே, டிவி தொகுப்பாளினி, நடிகை, பாடகி என பல முகங்களை கொண்டவர் சுசித்ரா. இவரது துள்ளலான குரலுக்கு மயங்காதவர்களே இல்லை.
தனது திறமையால் சினிமா வட்டாரத்தில் பெரும் நட்பு வட்டாரத்தை கொண்டிருந்தார் சுசித்ரா. நடிகர் கார்த்திக்குமாரை திருமணம் செய்து கொண்ட சுசித்ராவின் நட்பு வட்டம் மேலும் விரிவடைந்தது.
ஹேப்பி பர்த்டே அதர்வா.. இந்த பானா காத்தாடி இன்னும் மேலே பறக்கட்டும்.. டிரெண்டாகும் #HBDAtharvaa

அந்தரங்க வீடியோக்கள்
இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், சுசித்ராவின் டிவிட்டர் பக்கத்தில் தமிழ் திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் நெருக்கமாக இருக்கும் அந்தரங்க வீடியோக்கள், போட்டோக்கள் சுச்சி லீக்ஸ் என்ற தலைப்பில் வெளியானது.

நிர்வாண போட்டோக்கள்
பல நடிகைகளின் நிர்வாண போட்டோக்களும் சுசித்ராவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியானது. இதனால் ஒட்டு மொத்த தமிழ் சினிமாவும் பெரும் அதிர்ச்சி அடைந்தது. வீடியோக்களில் இருந்த பிரபலங்கள் பலரும் அதில் இருப்பது நான் இல்லை என மறுப்பு தெரிவித்து வந்தனர்.

ஒதுக்கப்பட்ட சுச்சி
இந்நிலையில் தனது டிவிட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்து விட்டதாக கூறினார் சுசித்ரா. அவருக்கு மனநிலை சரியில்லை, சிகிச்சை பெற்று வருகிறார் என்றார் அவரது கணவர். ஆனால் அதன் பிறகு தனது நட்பு வட்டாரத்தில் இருந்து ஒதுக்கப்பட்டார் சுசித்ரா.

தற்கொலை முயற்சி
தொடர்ந்து சர்ச்சையில் சிக்கியதால் கணவர் கார்த்திக் குமாரும் அவரை விவாகரத்து செய்தார். சில ஆண்டுகள் பேச்சே இல்லாமல் இருந்த சுசித்ரா கடந்த சில மாதங்களுக்கு முன் தற்கொலைக்கு முயன்றதாகவும் திடீரென காணாமல் போனதாகவும் தகவல் வெளியானது.

அற்புதமாக உணருகிறேன்
இந்நிலையில் தற்போது ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள சுசித்ரா, சுச்சி லீக்ஸ் குறித்து பேசியிருக்கிறார். அவர் பேசியிருப்பதாவது, என்னடைய கிட்சன் ஸ்டுடியோவில் இருந்து, சமையல் நிகழ்ச்சியை செய்து வருகிறேன். மைக்கில் பேசும்போது, அற்புதமாக உணர்கிறேன். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

மாறிவிட்டேன்
நான் இப்போது பழைய சுச்சி இல்லை.. நான் மாறிவிட்டேன்.. 100 சதவீதம் மாறியிருக்கிறேன். கடந்த 12 ஆண்டுகளில் ஏராளமான ஏற்றத்தாழ்வுகளை சந்தித்திருக்கிறேன். ஒரு மனிதன் தன் வாழ்நாள் முழுக்க அனுபவிக்க வேண்டியதை அதற்குள் அனுபவித்துவிட்டேன். எஃப்மில் நான் தொகுத்து வழங்கிய ஹாய் சென்னை நிகழ்ச்சி முற்றிலும் மாறுபட்டது.

சிக்கல்கள்
மீண்டும் அந்த வேலைக்கு சென்றபோது அங்கு செய்யக்கூடாதவைகள் என நிறைய இருந்தது. நிகழ்ச்சியை கேட்பவர்களும் மாறியிருந்தார்கள். தற்போது சமையல் என்பது என்னுடைய ஹாபி. என்னுடைய டார்க் டைமில் அதனை நான் எடுத்துக்கொண்டேன். எனது கணக்கு ஹேக் செய்யப்பட்டது குறித்து அறிக்கைகளை வெளியிட்ட போதிலும், #SuchiLeaks பரப்பிய வதந்திகள் காரணமாக நான் பணியில் சிக்கல்களை எதிர்கொண்டேன்.

தொழில் முறை சமையல்
நான் ஒரு முக்கிய தமிழ் செய்தி சேனலுக்கு ஒரு அறிக்கையை கொடுத்தேன், அதனை தொடர்ந்து என்னுடைய பார்ட் முடிந்துவிட்டது என்று கண்டறிந்தேன். ஆனால் இந்த பரபரப்பான வலைத்தளங்கள் உருவாக்கிய அந்த சத்தத்தில் அது மூழ்கிவிட்டது. நான் டிப்ரஷன் ஆகிவிட்டேன். அந்த கட்டத்தில் தான் சமையல் என்னை மீட்டது. நான் என் பாட்டியின் சமையல் புத்தகத்தை எடுத்து சமையல் குறிப்புகளை ஆராய்ந்தேன். நான் ஒரு வருடம் தொழில்முறை சமையல் படிப்பை மேற்கொண்டேன். இது ஒரு வகையான சிகிச்சை.

கண்ணியமாக செய்திருக்கலாம்
தனது கணவர் தனக்கு மனநிலை சரியில்லை என்று கூறியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த சுச்சி, கார்த்திக் அந்த வீடியோவை வெளியிட்டிருக்க வில்லை என நினைக்கிறேன். ஏனெனில் இது நிறைய பேரை குழப்பியது. இது எனது வேலையையும் எனது உறவுகளையும் பாதித்தது. நான் மனச்சோர்வுக்கு ஆளானேன், ஆனால் கடைசியாக நான் அதிலிருந்து வெளியே வந்தேன். இது ஒரு கண்ணியமான முறையில் செய்யப்பட்டிருக்கலாம்.

பெரிய கை இருந்தது
இறுதியில், கார்த்திக் கூட இது ஒரு மோசமான யோசனை என்பதை உணர்ந்து அதனை நீக்கினார். ஊடகங்களும் குழப்பமடைந்ததால் நான் அவர்களைக் குறை கூறவில்லை. மற்றவர்களின் தனிப்பட்ட வீடியோக்களை பகிரங்கமாக பகிர்ந்தது யார்? இந்த வீடியோக்களுக்கான ஆக்ஸஸ் யாருக்கு கிடைத்தது, இதன் பின்னால் எந்த பெரிய கை இருந்தது? இதெல்லாம் என்னை மிகவும் உலுக்கியது.

ஒன்றைக் கூட பார்க்கவில்லை
இன்றுவரை, இந்த வீடியோக்களில் ஒன்றை கூட நான் பார்த்ததில்லை. நான் அதைப் பற்றி தெரிவிக்க விரும்பவில்லை என்பதால் அல்ல. எப்படியோ, அந்த வீடியோக்களில் என்னுடைய ஒரு காட்சியைச் சேர்க்க நான் விரும்பவில்லை. நான் இன்னும் கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன். நான் எதையும் கசப்பாக பார்ப்பதில்லை. அமலா பால் உட்பட சில பேர் தங்கள் ஆதரவு கொடுத்தனர் என கூறியிருக்கிறார்.
-
தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் நடிகர் தாரகா ரத்னா... பாலய்யா, ஜூனியர் NTR மருத்துவமனைக்கு விசிட்
-
ஏப்ரலில் பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ்... பின்வாங்கும் ரஜினியின் ஜெயிலர்... ரசிகர்கள் அப்செட்
-
போட்டோ, பெயர் பயன்படுத்த தடை... அப்ப மட்டும் இப்படி சொல்லலையே: ரஜினியிடம் கேள்வியெழுப்பிய பிரபலம்