அனுதாப அலைக்காக தவெக செய்த சதி.. ஆந்திராவில் இருந்து லாரியில் வரும் கூட்டம்.. சுசித்ரா பேட்டி!

சென்னை: ஹெச்.வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் 'ஜனநாயகன்'. பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பொங்கல் பண்டிகைக்கு இப்படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சென்சார் கிடைக்காததால் வெளியாகவில்லை. இந்நிலையில் நேற்று அதிகாலை ஜன நாயகன் முழுபடமும் இணையத்தில் கசிந்தது இதுகுறித்து படக்குழு சைபர் கிரைமில் புகார் கொடுத்துள்ளது.

ரஜினி,கமல்,சிவகார்த்திகேயன், சூர்யா, கார்த்தி, தயாரிப்பாளர் தனஞ்செயன், சுரேஷ் காமாட்சி என பலரும் கடுமையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. பெரும் புயலை கிளப்பி இருக்கும் இந்த பிரச்சனை குறித்து பாடகி சுசித்ரா Puthiya Sinthanai யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் வெளியாகியிருக்கிறது. இது திமுகவின் சதி என பலர் குழம்பினாலும், அது தவெகாவின் உள் சதி என்று தான் எனக்கு தோன்றுகிறது. telegram இல் மூன்று மணி நேரம் படத்தையே வெளியிட்டு விட்டு பின் அதனை கேன்சல் செய்து இருக்கிறார்கள்.

jana nayagan vijay TvK
Photo Credit:

ஜன நாயகன்: அனைவருமே படம் இணையத்தில் வெளியாகிவிட்டது என கதறுகிறார்களே தவிர, அந்த டெலிகாம் ஆப்பை பற்றி எதுவுமே சொல்லவில்லை. ஒரு திருட்டு விசிடி வெளியாகிறது என்றால், அதற்கு அந்த கடையில் உரிமையாளர் தான் பொறுப்பு. அதேபோல தவெக ஏன் டெலிகிராம் ஆப் மீது எந்தவிதமான புகாரும் இதுவரை தெரிவிக்கவில்லை. ஒரு அனுதாப அலைக்காக அவர்களே இந்த படத்தை வெளியிட்டு இருக்கிறார்கள். இதை பார்க்கும் மக்கள், எத்தனை விதமான இடையூறுகளை விஜய்க்கு தருகிறார்கள் என்பதை போல சித்தரிக்கிறார்கள்.

அனுதாப அலைக்காக செய்த வேலை: விவாகரத்து புகாரை வொர்த் இல்ல, அதை நான் பார்த்து கொள்கிறேன் என சொன்னாரோ அதை போல ஜன நாயகன் விஷயத்தையும் அவர் பார்த்துக்கொள்வார். இந்த அனுதாப அலைகள் எல்லாம் ஓட்டாக மாறும் என விஜய் நினைக்கிறார். ஆனால், நிச்சயம் தமிழர்கள் ஓட்டளிக்க மாட்டார்கள். ஆந்திராவில் இருந்து 200, 300 ரூபாய் கொடுத்து சிலரை அழைத்து வருகிறார்கள். அவர்கள் தான் தவெக மாநாடு அல்லது பிரச்சாரத்தில் ரகளை செய்வது, பெண்களை தொடர்வது, பாட்டிலை வீசுவது என ரகளை செய்து வருகிறார்கள். அவர்களை தொண்டர்களோடு தொண்டர்களாக பிரச்சாரம் நடைபெறும் இடங்களுக்கு நுழைய வைத்தது தான் மிகப்பெரிய விபரீதகள் நடக்க காரணம்.

ஆந்திரா கூலிகள்: அவர்கள் தேர்தல்முடியும் வரை இங்கேயே இருக்க வேண்டும் என்பதால்,இப்போது வீடுகளை தேடிக்கொண்டே இருக்கிறார்கள். வாணியம்பாடி, ஊத்துக்கோட்டை, திருத்தணி போன்ற பகுதிகளில் இருப்பவர்கள் தயவு செய்து டிவிகே அலுவலகத்தில் இருந்து வருகிறோம். வீடு வாடகைக்கு வேண்டும் என்று கேட்டால் கொடுத்து விடாதீர்கள் அதன் பிறகு அந்த வீடு உங்களுக்கு கிடைக்கவே கிடையாது. இப்பொழுது நான் கொடுக்கும் இந்த இன்டர்வியூ சிபிஐ வரை செல்ல வேண்டும். தயவுசெய்து விஜயின் பிரச்சாரம் கூட்டத்திற்கு தமிழக மக்கள் யாரும் போகாதீங்க, ஆந்திராவிலிருந்து லாரி லாரியாக மக்களை இறக்குகிறார்கள் என பாடகி சுசித்ரா அந்த பேட்டியில் பேசி உள்ளார் இவரின் இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. சுசித்ராவின் பேட்டியை பார்த்த விஜயின் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கடுமையாக திட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X