அனுதாபம் தேடும் விஜய்.. விவாகரத்து மேட்டரை கசியவிட்டதே TVK தான்?..சுசித்ரா சும்மா இருக்கமாட்டாரு போல
சென்னை: தவெக தலைவரும், நடிகருமான விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த செய்தி பெரும் புயலை கிளப்பி இருக்கும் நிலையில், விஜய் மக்களிடம் அனுதாபத்தை பெற வேண்டும் என்பதற்காகவே தற்போது விவாகரத்து மேட்டரை கசியவிட்டு இருப்பதாக பாடகி சுசித்ரா பேட்டி அளித்துள்ளார்.
Cloud7 Voice இது குறித்து youtube சேனலுக்கு பேட்டி அளித்திருக்கும் பாடகி சுசித்ரா. கடந்த ஆறு வருடமாக விவாகரத்திற்கு சங்கீதா முயற்சி செய்து கொண்டு இருந்தார். ஆனால் விஜய், தான் அந்த பேப்பரில் கையெழுத்து போடாமல் தாமதப்படுத்தி வந்தார். இப்பொழுது கூட விவாகரத்து பேப்பரை வெளியிட்டது டிவிகே தான். அவர்கள் இதை கசியவிட்டுள்ளார்கள். சங்கீதா தரப்பில் இருந்து இது அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. கடந்த ஆறு வருடமாகவே சங்கீதா கண்ணியமாக விவாகரத்து வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

விஜய் மனைவி சங்கீதா: சங்கீதா அனுப்பிய அனைத்து,மனுகளையும் கிழித்து போட்டு விட்டு விஜய் ஜாலியாக பனையூரில் த்ரிஷாவுடன் குடும்பம் நடத்தி கொண்டு இருந்தார். தற்போது தனக்கு சாதகமாக அரசியலுக்காக, மக்களிடம் அனுதாபத்தை தேட, தேர்தல் வரும் நேரம் பார்த்து வெளியிட்டு இருக்கிறார்கள். இதுகூட த்ரிஷாவின் வேலையாக இருக்கலாம், இப்படி செய்தால் மக்களிடம் உனக்கு அனுதாபம் வரும் என்று கூட சொல்லி இருக்கலாம். சங்கீதா தனிப்பட்ட முறையில் விஜய்க்கு மட்டுமே அனுப்பப்பட்ட நோட்டீஸ் என்பதனால்தான், அதில், பல தனிப்பட்ட விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. எந்த விவாகரத்தான தம்பதிகளும் இவ்வளவு கீழ்த்தனமாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து விவாகரத்து கேட்க மாட்டார்கள். சங்கீதாவும் இவ்வளவு கீழ்த்தனமாக இறங்கி விவாகரத்து கேட்கும் நபர் இல்லை.
ஆட்டிப்படைக்கிறார்: பல பெண்களிடம் இருந்து விஜயை பாதுகாத்ததே சங்கீதா தான். ஆனால், த்ரிஷாவிடமிருந்து பலமுறை காப்பாற்றினாலும், அவர் மீண்டும் மீண்டும் அங்கேதான் சென்று இருக்கிறார். திரிஷா என்கிற முதலை கடைசியில் விஜயின் வீட்டையே ரூல் செய்ய ஆரம்பித்துவிட்டது. பல மூளை சலவைகளை த்ரிஷா செய்து மனைவியை அடிக்கும் அளவிற்கு சென்று விட்டார் விஜய். உண்மையிலேயே விஜய் ஒரு நல்ல மனிதர் தான். ஆனால், த்ரிஷா தலையணை மந்திரம் ஓதி அவரை ஆட்டிப்படைக்கிறார். விஜய்யுடன் இருக்கும் போட்டோவை த்ரிஷா வெளியிட காரணமே சங்கீதாவை வெறுப்பேத்த வேண்டும் என்று தான். 6 ஆண்டுகளாக சங்கீதா அமைதியாக இருத்ததற்கு காரணமே பசங்க பாதிக்கப்படக்கூடாது என்பதற்கு தான், ஆனால், விவாகரத்து பேப்பரை கசியவிட்டு எப்படி செய்துவிட்டார்கள் என பாடகி சுசித்ரா அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











