ரவி மோகன் அய்யோ பாவமா? கண்ணாடியை பார்த்து திருந்துங்க.. விளாசிய பாடகி சுசித்ரா!
சென்னை: நடிகர் ஜெயம் ரவி சமீபத்தில் மீடியாவுக்கு அளித்த பேட்டியில், தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்த வேதனைகள் மற்றும் சமூக வலைதள விமர்சனங்களால் ஏற்பட்ட மன அழுத்தங்களை குறித்து மனமுடைந்து பேசியிருந்தார். அந்த பேட்டி ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில், தற்போது பாடகி சுசித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் இதுகுறித்து விரிவாக கருத்து தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில் பேசிய சுசித்ரா, அந்த பிரஸ் கான்ஃப்ரன்ஸை பார்த்து பலரும் பதறிப் போயிருக்கிறார்கள். அவருக்கு யாராவது உதவி செய்ய மாட்டாங்களா என்று மக்கள் கவலைப்படுகிறார்கள். ஆனால், அவர் அந்த பேட்டியை முழுமையான சுயநினைவில் கொடுக்கவில்லை. அவருக்குள் இருந்த ஆல்கஹால் மற்றும் பிற சப்ஸ்டன்ஸ்கள் சேர்ந்து அவரை கட்டுப்படுத்திய மாதிரி இருந்தது. அதனால் சில உண்மைகள் பேசப்பட்டாலும், பல உண்மையற்ற விஷயங்களும் வெளிவந்து இருக்கு. ஒரு நபர் இப்படிப் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று தெரிந்தால், அவரை மனநல மருத்துவரிடம் சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பது தான் பலருக்கும் தோன்றும்.

சுசித்ரா: ஆனால், அப்படி உதவ முயற்சி செய்பவர்களையே அவர் தள்ளி வைத்து இருக்கிறார். இதனால், அவர் கூட இருப்பவர்களே அவருக்கு ஊற்றி கொடுக்கிறார்கள். அவருக்கு உண்மையாக உதவ நினைப்பவர்கள் கூட ஒரு கட்டத்தில் விலகி நிற்கிறார்கள். ஒரு மனிதருக்கு மாற்றம் வேண்டும் என்றால் முதலில் அவருக்குள் இருக்கும் மனநிலை மாற வேண்டும். மற்றவர்கள் சொல்வதை கேட்கும் மனப்பக்குவமும் வேண்டும். தன்னையே கண்ணாடியில் பார்த்து என்ன பிரச்சனை நடக்கிறது என்று புரிந்துகொள்ள வேண்டும். அது இல்லையென்றால் பெற்றோர்களே ஒரு கட்டத்தில் கைவிடும் நிலை வரும் என்றார்.
கண்ணாடியை பாருங்க: தொடர்ந்து பேசிய சுசித்ரா, சமூக வலை தளங்களால் என் வாழ்க்கையே கெட்டுப்போச்சு என்று பழி தூக்கி நம்ம மீது போடுகிறார். சோஷியல் மீடியாவின் இயல்பே ரியாக்ட் செய்வதுதான். நீங்கள் பொதுவெளியில் நீங்கள் உங்கள் தோழியுடன் இருக்கும் வீடியோ பகிர்ந்தால், அதற்கு மக்கள் கருத்து சொல்லாமல் இருக்க மாட்டார்கள். அதே போல நல்லதை மட்டும் தான் சொல்ல வேண்டும் என எதிர்பார்க்க முடியாது என பாடகி சுசித்ரா அந்த அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications